பட்ஜெட் 2018: நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பின்னால் இருக்கும் முக்கிய மனிதர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளை பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தற்போதைய மத்திய அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டினை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். அனைத்து விதமான நிதி சார்ந்த திட்டங்களை ஒன்றாக இணைக்கும் பணி, நிதித் துறையில் கை தேர்ந்த, நிதி செயலாளர் திரு. ஹஸ்முக் ஆதியா அவர்களின் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

பொருளாதார விவகாரங்களுக்கான, வங்கி மற்றும் நிதி செலவினங்கள் துறைகளுக்குப் புதிய செயலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தக் கடைசி வரவு/செலவு அறிக்கை (பட்ஜெட்), திரு. அருண் ஜேட்லி அவர்களின் எதிர்பார்ப்புக்களான, நிதியின் பாதையை விவேகத்துடன் தொடர்ந்து வழி நடத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்பை நல்குமா? வர இருக்கும் பட்ஜெட்டினை உருவாக்கத்தில் பங்குபெறும் முக்கியப் பிரமுகர்களைப் பற்றி இங்குக் காண்போம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பொன் ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர் ஆவார். கன்னியாகுமரியை சேர்ந்த இவர் தற்போதைய கப்பல் துறை அமைச்சராகவும் உள்ளார். 2017-ம் ஆண்டுச் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். தமிழகப் பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

 ஹஸ்முக் ஆதியா- நிதி செயலாளர் மற்றும் செயலாளர், வருவாய் துறை
 

ஹஸ்முக் ஆதியா- நிதி செயலாளர் மற்றும் செயலாளர், வருவாய் துறை

நிதி அமைச்சகத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த நிபுணர் என்றால் அஃது திரு. ஹஸ்முக் ஆதியா ஆவார். திரு ஆதியா அவர்கள் பல வருடங்களாகப் பல வரவு/செலவு அறிக்கைகளில் (பட்ஜெட்) தமது பங்கை ஆற்றி இருப்பவர் என்றாலும், இந்த வரவு/செலவு அறிக்கை (பட்ஜெட்) தயாரிக்கும் குழுவில் அவர் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குஜராத் ஆட்சியராய் (ஐஏஎஸ் அதிகாரி) தமது பொதுப் பணியை ஆரம்பித்து, நாட்டின் மிகப்பெரிய மறைமுக வரி சீர்திருத்தமான ஜி. எஸ். டி. யின் (GST) அமலாக்கங்ளுக்குப் பின்னால் உள்ள முக்கிய உந்து சக்திகளில் ஒருவராய் அறியப்படுகிறார்.

அரசாங்கத்தின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பிழப்பு முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகித்து வரிகளை எளிதாக்குவதற்கு மாற்றங்கள் செய்தார், இது உலக வங்கியின் வியாபார தரவரிசைகளை இந்தியாவின் நிலையை எளிதாக்கி அந்தத் தரவரிசையின் முன்னேற்றத்திலும் பிரதிபலித்தது. இந்த வரவு/செலவு அறிக்கையில் (பட்ஜெட்) அவர் முன் நிற்கும் சவால்கள் தனித்தனியாக இருக்கும் அனைத்து நிதி சார்ந்த திட்டங்களை ஒழுங்குபடுத்தி ஒன்றாக ஒரே வரவு செலவு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே.

 அரவிந்த் சுப்பிரமணியன் - தலைமை பொருளாதார ஆலோசகர்

அரவிந்த் சுப்பிரமணியன் - தலைமை பொருளாதார ஆலோசகர்

வரவு-செலவுத் திட்ட அறிவிப்புக்கு (பட்ஜெட்) முன் வெளியாகும் திரு. அர்விந்த் சுப்பிரமணியனின் பொருளாதார ஆய்வு சார்ந்த யோசனைகள், பல விவாதங்களைத் தூண்டும் கருத்துக்களைக் கொண்டுள்ளது. கடைசியாக அவர் அறிவித்த யோசனையான, "உலகளாவிய அடிப்படை வருவாய் மூலம் வறுமை ஒழிப்பு) என்பதாகும். அவரது இந்த யோசனை இந்த வரவு-செலவுத் திட்ட அறிவிப்பில் (பட்ஜெட்) இடம் பெறுமா ? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு வருடம் நீட்டிப்புச் செய்யப்பட்ட, சுப்பிரமணியன் அவர்களின் ஒரு பொருளாதார ஆய்வு யோசனைகள் நிதி மேம்பாடு மற்றும் நிதி பிரச்சனைகள் சார்ந்த அழுத்தத்தை எதிர்கொண்டு சரி செய்வது போன்ற பெரிய பலன்களைத் தருமா ? என அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டும். மேலும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நிதி சார்ந்த கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்..

 கார்க் - செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை

கார்க் - செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை

திருக் கார்க் அவர்கள் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராகப் பதவியேற்றதற்கு முன்னர் அமேரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் நிர்வாக இயக்குனராகப் பணி புரிந்திருக்கிறார். நிதி வளர்ச்சி, மறுமலர்ச்சி, தனியார் முதலீடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்கள் ஆகியவை - இந்த வருட வரவு/செலவு அறிக்கையில் (பட்ஜெட்) திரு. கார்க் தனது பங்கின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணியாகும். இஃது ஒரு சாதாரணப் பணியல்ல இவற்றை அனைத்தும் நிதி பலன்களையும் சமரசம் செய்யாமல் அடையப்பட வேண்டும்.

அஜய் நாராயண் ஜா - செயலாளர், செலவுத் துறை

அஜய் நாராயண் ஜா - செயலாளர், செலவுத் துறை

திரு. அஜய் நாராயண் ஜா அவர்கள், 1982 ம் ஆண்டு மணிப்பூர் ஆட்சியராய் (ஐஏஎஸ் அதிகாரி) தமது பொதுப் பணியை ஆற்ற ஆரம்பித்தார். மேலும், திரு. அஜய் நாராயண் ஜா அவர்கள், நிதிக் கமிஷனின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்த ஆண்டு, அரசாங்கம் மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு மக்களைக் கவர பல நல்ல திட்டங்களை வழங்க எண்ணுவதால், இந்தத் திட்டங்களை நோக்கி கவனம் செலுத்தப்படும்.

நீரஜ் குமார் குப்தா - செயலாளர், முதலீட்டுத் துறை மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை

நீரஜ் குமார் குப்தா - செயலாளர், முதலீட்டுத் துறை மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை

1981 ம் ஆண்டு ஆட்சியரான (ஐஏஎஸ் அதிகாரி) திரு. நீராஜ் குமார் குப்தா தலைமையில் கொண்டுவரப்பட்ட பல்வேறுபட்ட மூலோபாயம் பல நல்ல பலன்களைக் கொடுத்தது. ஏனென்றால் அரசாங்கம் முதல் முறையாக விலக்கு இலக்குகளைக் கடந்திருந்தது. அடுத்த நிதியாண்டில் மூலோபாய விற்பனை மற்றும் பிற பொது வழங்கல்கள் ஆகியவற்றை அங்கீகரித்து நிதி மேம்பாட்டிற்கான வேகத்தையும் கூட்டினார். இதனால், அரசாங்கம் வளங்களை அதிகரிக்க இன்னும் பெரிய இலக்கை அமைக்கக்கூடும். சி.பி.எஸ்.இ. (C.P.S.E) இல் பெரும்பான்மை பங்குகளை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சூழலைக் குறைத்து, மிகவும் சிக்கலான மூலோபாய விற்பனை முன்னெடுக்கப் பட வேண்டும். திரு. நீரஜ் குமார் குப்தா அவர்கள் நிதி வளங்களை உயர்த்துவதற்கு நல்ல புதுமையான நடவடிக்கைகளைக் கண்டுணர்ந்து, கடைப்பிடித்துக் கையாள வேண்டும்.

 ராஜீவ் குமார் - செயலாளர், நிதி சேவைகள் துறை

ராஜீவ் குமார் - செயலாளர், நிதி சேவைகள் துறை

திவால் சட்டம் மற்றும் 2.11 லட்சம் கோடி மூலதன உட்செலுத்துதல் திட்டம் ஆகியவற்றை அறிவித்துள்ள நிலையில், அரசு, அதன் அடுத்தக் கட்ட நடவடிக்கை சீர்திருத்தங்களைத் தாம் நடத்தும் வங்கிகளில் தொடங்க வேண்டும். மாநிலங்களிடமுள்ள வங்கிகளுக்கு வளர்ச்சி மூலதனத்தை அளித்தல், ஒருங்கிணைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தொடர்ந்து கவனம் செலுத்துதல் அவசியம். 1984 ம் ஆண்டு ஆட்சியரான (ஐஏஎஸ் அதிகாரி) , திரு. ராஜீவ் குமார் அவர்கள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகள் கடனையும், குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்க வேண்டும் என்பதான திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் வகையில் தொடர்ந்து முதலீட்டுக்கான டிப்ஸ், வர்த்தகச் சந்தை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஈகாமர்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற அனைத்து விதிமானச் செய்திகளை நியூஸ்லெட்டர் வாயிலாகப் பெறலாம்.

இதைக் கிளிக் செய்யவும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2018: A look at the key people behind FM Arun Jaitley

Budget 2018: A look at the key people behind FM Arun Jaitley
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X