கடைசில கிடைச்சது இதுதான்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சாமானியர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

மக்கள் மத்தியில் பட்ஜெட் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் சில திட்டங்கள் உண்மையிலேயே பாராட்ட வேண்டியதாகவே உள்ளது. ஆனால் மாத சம்பளக்காரர்கள் மற்றும் தனிநபருக்கு சாதகமாக எந்த ஒரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.

பட்ஜெட் அறிக்கையில் அப்படி என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக சுருக்கமாக அறிவிப்பை தொகுத்து அளித்துள்ளோம்.

படித்துவிட்டு உங்கள் கருத்தை வலிமையாக வைக்கவும்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் 

இணை நிதி அமைச்சர்

இன்று காலை இணை நிதி அமைச்சரான பிராதாப் சுக்லா இது நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று கூறியிருந்தார். ஆனால் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு 40,000 ரூபாய் வரி சேமிப்பு தவிரப் பெரிதாக பிற நண்மைகள் ஏதும் இல்லை.

வாக்குறுதி

பட்ஜெட் தாக்கலின் போது வருமையை ஒழிப்போம் என்று அருன் ஜேட்லி கூறினார். என்றும் இதுவரை கொடுத்த எல்லா வாக்குறிதிகளையும் நிறைவேற்றிவிட்டோம் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு

விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்றும் 2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம் என்றும் விவசாயத் துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

செலவை விட கூடுதல் வருவாய்

விவசாயப் பொருட்கள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் அதிகரிக்கப்படும், விவசாயிகளுக்கு நல்ல நாள் வந்துகொண்டு இருக்கிறது, விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாகப் பணம் ஈட்ட வகைச் செய்துள்ளோம் என்றும் அறிவித்துள்ளார்.

கிராமங்கள் - வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை, இயற்கை விவசாயத்தினை விரிவுபடுத்த நடவடிக்கை. வேளாண் உற்பத்தி பொருட்களைப் பதப்படுத்த 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 

வாசனைத் திரவம்

மலர்களில் இருந்து வாசனைத் திரவங்கள் எடுக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கான கடன் அட்டைத் திட்டம். மூங்கில் பயிரிடுவோருக்கு மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்.

பசுமை திட்டம்

ஆப்ரேஷன் க்ரீன் என்ற பசுமை திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு. ஜேட்லியின் அறிவிப்பை மேஜை தாட்டி பிரதமர் மோடி வரவேற்றுக்கொண்டு இருந்தார். பயிற் கடனுக்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள்

நாடு முழுவதும் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1 மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்படும்.

மருத்துவ மையங்கள்

நாடு முழுவதும் புதிதாக 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். டிபி எனப்படும் காச நோய்களால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு ரூ. 500 கோடி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வழங்கப்படும்.

இலவச மருத்துவம்

ஏற்கனவே நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மூலமாக இலவச மருத்துவம் அளித்து வரும் நிலையில் அதற்காக 1,200 கோடி ரூபாய்க் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும்.

மருத்துவக் காப்பீடு

உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். விஜய் ரஜிடர்களே மீஸ் போட்டுக்கொள்ளுங்கள். 50 கோடி குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு திட்டங்கள் வழங்கப்படும்.

பெண்கள்

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கீழ் 80 கோடி பெண்களுக்கு எல்பிஜி கேஸ் இணைப்பு கிடைக்கும் என்றும், நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்ட உதவி என்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 75,000 கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

குறைந்த விலையில் வீடு கட்டி தர தனி நிதியம் அமைக்கப்படும். தேசிய வாழ்வாதாரத் திட்டத்திற்கு 5,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

 

கல்வித் துறை

கல்வித் துறை கட்டமைப்புக்கு ஒரு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். முதன் முறையாக ரயில்வே பல்கலைக் கழகம் அமைக்கப்படுகிறது. பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க நடவடிக்கை.

பிஎப் மற்றும் வேலை வாய்ப்பு

கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ரூ14.34 லட்சம் கோடி. 7வது சம்பள கமிஷன் கீழ் 2.56 சதவீத ஊதிய உயர்வை அளித்த மத்திய அரசு வரும் ஆண்டு முதல் புதிய அரசு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆகக் குறைப்பு.

2018-2019 நிதி ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

வைஃபை வசதி

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வைவை வசதி ஏற்பாடு செய்யப்படும். அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும்.

புதிய ரயில் பாதைகள்

4000 கிலோ மீட்டர் தொலைவிற்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 18,000 கி.மீ. நீளத்துக்குப் புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி

99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும். 25,000 பேருக்கு அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள். பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும். மும்பை ரயில் நெட்வொர்க்கிற்கு 11,000 கோடி ஒதுக்கீடு.

சிசிடிவி

சென்னையில் நடந்த கொடுரத்திற்குப் பின்பு இந்திய ரயில்வே துறையில் கண்காணிப்பு அவசியமாகியுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

விமான போக்குவரத்து

உதான் திட்டத்தின் கீழ் ஹவாய் செப்பல் போட்டவர்களையும் விமானத்தில் பயணம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குடியரசுத் தலைவர் / கவரனர் சம்பள உயர்வு

குடியரசுத் தலைவருக்கு 5 லட்சமாகவும், துணை குடியரசு தலைவர்களுக்கு 4 லட்சம் கோடியும், ஆளுநருக்கு 3.5 லட்சம் கோடியும் மாத சம்பளம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது குடியரசு தலைவர் 1.50 லட்சமும், துணை குடியரசு தலைவர் 1.25 லட்சமும், கவர்னார் 1.10 லட்சமும் சம்பளமாக பெறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் உயர்த்தப்படும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மியூச்சுவல் ஃபண்டு

இன்றை பட்ஜெட்டில் நீண்ட காலப் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்துக்கு 10 சதவீத வரி விதித்துள்ள நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் எவ்வளவு முதலீடு செய்து அதன் மூலம் பெறப்படும் வருவாய்க்கு 10 சதவீத வர வரும் நிதி ஆண்டில் இருந்து விதிக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இதனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் இல்லாமல் பிற்பகள் 12:51 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.61 சதவீதம் என 173.73 புள்ளிகள் சரிந்து , நிப்டி 0.78 சதவீதம் என 85.60 புள்ளிகள் சரிந்து 10,941.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய வரி

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வரியின் பெயர் long term capital gains (LTCG) வரி.

 

கலால் வரி

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த வரிக் குறைப்பின் மூலம் ஒரு லிட்டருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 2 ரூபாய் வரையில் குறையும் எனத் தெரிகிறது.

 

மீண்டும் வந்தது..

Standard Deductionஇல் மருத்துவச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில் Standard Deduction மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மடங்கு அதிகமான தொகைக்கு வரிச் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளக்காரர்களுக்குப் பெறும் சம்பளத்தில் வருடத்திற்கு Standard Deduction கீழ் இனி வரும் நாட்களுக்கு 40,000 ரூபாய் வரையிலான வரிச் சலுகை கிடைக்கும்.

Standard Deduction பெயரில் மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..!

கார்ப்ரேட் டாக்ஸ்

இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் 250 கோடி ரூபாய் வரையிலான வருமானம் பெறும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு 3,073 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இண்டர்நெட் சேவை

1 லட்சம் கிராமங்களுக்கு இணையதளச் சேவை அளிக்க முயற்சிகளும் திட்டங்களும் கொண்டு வரப்படும் என ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சுங்க சாவடி

நாடு முழுவதிலும் இருக்கும் சுங்க சாவடியில் மின்னணு பரிமாற்ற சேவைக் கொண்டு வரப்படும். பாஸ்ட் டேக் சேவை இனி வரும் வாகனங்களில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டே சந்தை விற்ரனைத்கு வரும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நிறுவனங்களுக்கும் ஆதார்

மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தனி நபர் அடையாள எண் (ஆதார்) போல நிறுவனங்களுக்கும் தனிநபர் அடையாள எண் வழங்க உள்ளதாக மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தகவல்

2017ஆம் ஆண்டில் தனிநபர் வருமான வரி வசூல் அளவு 12.6 சதவீதமும், நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

இக்காலகட்டத்தில் வருமான வரி தாக்கல் எண்ணிக்கை 41 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

 

மிகப்பெரிய சோகம்

தனிநபர் வருமான வரி வரம்பு 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும் என அனைவராலும் நம்பப்பட்ட நிலையில் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி வருமான வரி வரம்பு குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 

பிற முக்கியமானவை

1) ஜவுளித்துறைக்கு ரூ. 7148 கோடி ஒதுக்கீடு.
2) தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான நிதி உதவித் திட்டங்கள் அதிகரிப்பு
3) 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

சரிந்த பங்குச்சந்தை மீண்டது..

10 சதவீத LTCG வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்தது.

இந்நிலையில் பெரும் முதலீட்டு நிறுவனங்கள், மீயூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஆகியவை அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

 

52 வார உயர்வை

இன்றைய வர்த்தகத்தில் எல் அண்ட் டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன், இண்டஸ்இந்த் பேங்க் ஆகிய நிறுவனங்கள் 52 வார உயர்வை அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Union Budget 2018: Quick Highlights And Impact On The Common Man

Union Budget 2018: Quick Highlights And Impact On The Common Man
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns