பட்ஜெட்டில் அறிவித்துள்ள உள்கட்டமைப்பு & சமுக நல திட்டங்கள் மூலம் 50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு பட்ஜெட் 2018-ல் அறிவித்துள்ள உள்கட்டமைப்பு மற்றும் சமுக நல திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தரவுகள் கூறுகின்றன.

 

பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்த்ததைப் போன்று உள்கட்டமைப்பு, தூய்மை இந்தியா கீழ் கழிவரை கட்டுதல், வீடு கட்டும் திட்டம், உணவு பூங்கா, வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான பதப்படுத்தல் நிலையில் போன்றவற்றால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரியவந்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு

பட்ஜெட் அறிவிப்பு

அருண் ஜேட்லி அவர்கள் பட்ஜெட் அறிவிப்பின் போது கழிவறைகள் கட்டும் பணிகளுக்கு மட்டும் 16.92 கோடி நாட்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், 51 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டும் திட்டம் மூலமாக 46.55 கோடி நாட்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறி இருந்தார். எனவே எந்த ஒவ்வொரு திட்டங்களிலும் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று இங்குப் பார்க்கலாம்.

உணவு பூங்கா

உணவு பூங்கா

உணவு பூங்காக்கள் மூலமாக உணவுப் பொருட்களைப் பதப்படுத்திச் சந்தைகளில் நீண்ட நாட்களுக்குப் பொருட்களை விற்பதற்காக மத்திய அரசு கொண்டு வரும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 95,000 நபர்களுக்கும் அதிகமாக வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

வேளாண் பொருட்கள்
 

வேளாண் பொருட்கள்

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி போன்றவற்றை நீண்ட நாட்கள் வரை வைத்து விற்பானைச் செய்ய முடியாது என்ற காரணத்தினால் வேளாண் உற்பத்தி பொருட்களினை பதப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்கான மையங்களை அமைத்துத் தருவதன் மூலமாக 75,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எம்எஸ்எம்ஈ

எம்எஸ்எம்ஈ

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் கீழ் கடன் பெற்றுத் தொழில் ஆரம்பிக்க உதவுவதன் மூலமாக 2,94,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது.

சாலைக் கட்டமைப்பு

சாலைக் கட்டமைப்பு

பாரத் மாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சாலை அமைப்பதன் மூலமாக 10 லட்சம் நபர்களுக்கு வேலைக் கிடைக்குமாம்.

பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டம்

பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டம்

இந்திய அரசு புதிய வேலைகளின் உருவாக்கத்திற்காக முதலாளிகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குவதற்காகப் பிரதான் மந்திரி ரோஜ்கார் பிரோத்ஸாஹன் யோஜனா (பி எம் ஆர் பி ஒய்) திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ஊழியர்களுக்கு 8.33% இபிஎஸ் பங்களிப்பை அரசாங்கமே செலுத்தும். இந்தத் திட்டத்தில் இரட்டை நன்மை உள்ளது. இதில் ஒரு புறம், நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முதலாளிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, மறுபுறம் ஊழியர்களுக்குப் பெரிய எண்ணிக்கையில் அந்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கிறது. ஒரு நேரடி நன்மையாக, இந்த ஊழியர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் சமூகப் பாதுகாப்பு நலன்களின் வழி கிடைக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலமாக 30 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government’s infrastructure projects, social welfare schemes may create 5 million jobs a year

Government’s infrastructure projects, social welfare schemes may create 5 million jobs a year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X