பக்கோடா விற்றால் அம்பானியும் ஆகலாம்.. மோடி இதை தான் சொன்னாரோ..!

பக்கோடா விற்றும் கோடிஸ்வரன் ஆகலாம்.. மோடி இதை தான் சொன்னாரோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த சில நாட்களாக நாம் அதிகம் கேட்கப்பட்டு வரும் ஒரு வார்த்தை பக்கோடா. பக்கோடா விற்பதும் ஒரு வேலை தான் என்று மோடி கூறியது, அதனைப் பாஜக தலைவர்கள் வழிமொழிந்தது, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிரிகட்சிகளாக இதனை எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றன.

இந்த வேலையில் இந்திய தொழில்துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்த திருபாய் அம்பானியும் பக்கோடா விற்றுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

பிறப்பு

பிறப்பு

1932-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் ஹிராசந்த் கோர்டன்ஹாய்ஹாய் அம்பானி மற்றும் ஜம்நபென் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி தான் திருபாய் அம்பானியாக வளர்ந்தார்.

பக்கோடா

பக்கோடா

பள்ளியில் படித்து வந்த போது திருபாய் அம்பானி வார இறுதி நாட்களில் கிர்னார் மலை பகுதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு "பக்கோடா" விற்றதன் மூலமாகத் தனது தொழில் முயற்சியை முதன் முறையாகத் துவங்கினார்.

 வெளிநாட்டு வேலை

வெளிநாட்டு வேலை

இவருக்கு 16 வயது ஆன போது அவர் யேமனில் உள்ள ஏடனுக்குக் குடிபெயர்ந்தார். அவர் ஏ. பெஸ் & கோ நிறுவனத்தில் 300 ரூபாய் சம்பளத்திற்குப் பணிபுரிந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெஸ் & கோ ஷெல் தயாரிப்புகளை விற்கத் துவங்கியது. அப்போது பெட்ரோல் நிலையங்களில் தனது பணியைச் செய்யத் துவங்கினார்.

திருமணம் மற்றும் ரிலையன்ஸ்

திருமணம் மற்றும் ரிலையன்ஸ்

1962-ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பிய திருபாய் அம்பானி கோகிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்ரேஷன் நிறுவனத்தினை 15,000 ரூபாயில் துவங்கினார்.

குடும்பமும், வணிகமும்

குடும்பமும், வணிகமும்

முதலில் பாலியஸ்டர் நூல் இறக்குமதி மற்றும் மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலைத் துவங்கினார். பின்னர் இவருக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என இரண்டு மகன்களும், நினா கோத்தாரி மற்றும் தீப்தி சல்காக்கர் என்று இரண்டு மகள்களுடன் குடும்பத்தினை வளர்த்த அதே நேரத்தில் வணிகத்தினையும் மிகப் பெரியதாகக் கட்டமைத்தார்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் வெளியிட்ட திருபாய் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லாபம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதுடன் பல மடங்கு லாபத்தினையும் அளித்தார்.

தொழிற்சாலை

தொழிற்சாலை

1965-ம் ஆண்டுத் தனியாக இந்தியாவிலேயே பாலியஸ்டர் நூல் மற்றும் காட்டன் ஆடைகளைத் தயாரிக்கத் துவங்கினார். 1970-களில் ரிலையன்ஸ் நிறுவனம் 1 மில்லியன் ரூபாய் மதிப்புடையதாக வளர்ந்து இருந்தது.

 திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானிக்கு ரிஸ்க்குகள் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். எப்படி ரிஸ்க் எடுக்க வேண்டும், ஒன்றும் இல்லாத ஒன்றை எப்படி லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாற்றுவது என்பதெல்லாம் இவருக்கு அத்துப்பட்டி.

 பெட்ரோல்

பெட்ரோல்

ஷெல் நிறுவனத்தினை இந்தியாவிற்கு அழைத்து வந்து கச்சா எண்ணெய் கிணறு மற்றும் சுத்திகரிப்பு போன்ற வணிகத்திலும் இறங்கினார்.

ஆர்காம்

ஆர்காம்

2002-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் முதலில் சிடிஎம்ஏ மொபைல் சேவையினை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் 501 ரூபாய்க்கு 2 போன் என்று எல்லாம் அறிவித்துத் தொலைத்தொடர்பு துறையில் பெறும் புரட்சியை நிறுவனம் செய்தது. அதே 2002-ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி கலாமானார்.

வாரிசுகள் ராஜ்யம்

வாரிசுகள் ராஜ்யம்

இன்று திருபாய் அம்பானி உயிரோடு இல்லை என்றாலும் இவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ரிலையன்ஸ் நிறுவனத்தினை மிக முக்கியக் கார்ப்ரேட் நிறுவனமாக மாற்றியுள்ளனர். அதிலும் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆக வளர்ந்துள்ளார்.

ரிலையன..." data-gal-src="http:///img/600x100/2018/02/relianceindustries-1518077907.jpg">
ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

<strong>ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..!</strong>ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..!

இது ..." data-gal-src="http:///img/600x100/2018/02/sensexandpakoda-1517905492.jpeg">
சென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..!!

சென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..!!

<strong>இது சென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..!!</strong>இது சென்செக்ஸ்க்கும் பக்கோடாவிற்கும் நடக்கும் யுத்தம்..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakoda to Reliance: Modi said this only? THE STORY OF SUCCESS

Pakoda to Reliance: Modi said this only? THE STORY OF SUCCESS
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X