உலகப் பணக்கார நாடுகளில் அதிர்ச்சி அளிக்கும் அளவில் ஏழை மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பணக்கார நாடுகள் என்று பெயர் பெற்றாலும் , பல நாடுகள் மிக அதிகமான வறுமையாளர்களைக் கொண்டதாகவே விளங்குகின்றன. அவ்வாறு பட்டியலிடப்பட்ட முதன்மை 16 நாடுகளை இங்கு ஒவ்வொன்றாக அதிக வறுமையாளர்களின் விகித அளவில் காணலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

யுனைடெட் கிங்டம் : 10.9%
 

யுனைடெட் கிங்டம் : 10.9%

10.9 விழுக்காடுகளுடன் யுனைடெட் கிங்டம், செல்வந்தர்களுக்கும் வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்குமான இடைவெளி மற்ற பணக்கார நாடுகளின் ஒப்பீட்டளவில் பெரியதாக உள்ளது. இது போக, மிகக் குறைந்த வேலைவாய்ப்பின்மை மற்றும் உலகளாவிய சுகாதார மற்றும் பல நலன்களை வழங்கும் மிகச்சிறந்த நலன்புரியும் (Welfare) அமைப்புகளுக்கும் மிகவும் நன்றி கூறலாம்.

போலந்து: 11.1%

போலந்து: 11.1%

போலந்தில் வறுமை பல தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்து வந்தாலும், பொருளாதார நெருக்கடி இன்னமும் நாட்டின் மிக முக்கியக் கவலையாக உள்ளது. குறிப்பாகச் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும், வேலையின்மை அதிகமாக உள்ளது, வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன.

போர்ச்சுகல்:12.6%

போர்ச்சுகல்:12.6%

போர்ச்சுகல்-லில் வேலையில்லா இளைஞர் பிரிவில் மிகவும் அதிகமாக உள்ளது, இதன் விளைவாக நாட்டில் இளைஞர்களிடையே வறுமை அதிகமாக உள்ளது.

வேலையின்மை நலனுக்குக் கொடுக்கப்படும் உதவிகள் இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் உண்மையில் பணிபுரிந்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்துப் பணம் செலுத்துவது நிறுத்தப்படுகிறது.

 தென் கொரியா: 13.8%
 

தென் கொரியா: 13.8%

போர்ச்சுகல்-க்கு நேர்மாறாக, தெற்கு கொரியாவில் வறுமை விகிதம் 65 வயதுக்கு மேல் இருப்பவர்களிடையே வாய் பிளக்க வைக்கும் 45.7 விழுக்காடாக உள்ளது. நாட்டின் மாநில ஓய்வூதியத்தால் விவரிக்கும் போது இது குறைந்தபட்ச வாழ்க்கை செலவில் 16% மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது .

கனடா: 14.2%

கனடா: 14.2%

கனடா ஒரு செழிப்பான மற்றும் வளங்கள் நிறைந்த நாடாக இருக்கலாம், ஆனால் இந்த வட அமெரிக்க நாட்டில் மற்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது வறுமை விகிதம் அதிகமாக உள்ளது. கனடா நாட்டின் குறைந்த சமூக உதவி விகிதங்களால் வறுமை குறைப்பு சத்தியப்படவில்லை.

 கிரீஸ்: 14.9%

கிரீஸ்: 14.9%

சமீபத்திய ஆண்டுகளின் பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடி கிரீஸ் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஊதியங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் வறுமை விகிதம் அதிகரித்துள்ளது, வேலையின்மை உயர்ந்துள்ளது, சமூகப் பாதுகாப்பு நலன்கள் குறைக்கப்பட்டுள்ளன.

 ஸ்பெயின்: 15.3%

ஸ்பெயின்: 15.3%

அண்டை நாடான போர்ச்சுகல் போலவே, 25 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மிகுந்த வேலையில்லாத் திண்டாட்டத்துடன் போராடி வருகிறது ஸ்பெயின் . ஆகவே நீங்கள் நினைப்பது போல, நாட்டில் வறுமை இளைய தலைமுறையினரிடையே அதிக அளவில் உள்ளது.

சிலி: 16.1%

சிலி: 16.1%

சிலி தென் அமெரிக்காவில் உள்ள செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அதன் மக்கள் தொகையில் ஒரு மிகக் கணிசமான விகிதம் உணவுக்கோட்டு அளவுக்குக் கீழே வாழ்கிறது. வறுமையானது ,சுழற்சியில் பல குடிமக்களை நாட்டில் நிலவும் வருமான சமத்துவமின்மை மற்றும் மோசமான பொதுக் கல்வி முறை ஆகியவற்றால் சிக்க வைக்கிறது.

எஸ்டோனியா: 16.1%

எஸ்டோனியா: 16.1%

எஸ்டோனியாவில் வறுமை என்பது ஒரு பெரிய பிரச்சனை. தகுதியற்ற கல்வி முறை, திறனுக்கேற்ற வேலையின்மை, வேலை செய்ய முடியாத குடிமக்களுக்கு வழங்கப்படும் குறைவான அரசு சலுகைகள் போன்ற காரணங்களால் சமூகத்தில் ஒப்பீட்டளவில் ஒரு பெரும் பிரிவு நீண்டகால வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

லாட்வியா: 16.2%

லாட்வியா: 16.2%

லாட்வியா வறுமையில் அண்டை நாடான எஸ்டோனியாவை போலவே ஆழ்ந்த பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. நாட்டில் சராசரி ஊதியம் மிகக் குறைவானது மற்றும் மிகவும் ஊதியம் பெறும் வேலைகள் அரிதானது. தேசிய நலன்புரி அமைப்பு (Welfare) மிகவும் பின்தங்கியுள்ள ஒரு நாடு இது.

லித்துவானியா: 16.5%

லித்துவானியா: 16.5%

அதிக அளவில் வறுமை மற்றும் குறைந்த ஊதியங்கள் கொண்ட மற்றொரு பால்டிக் நாடு . நாட்டில் செல்வம் சமத்துவமின்மையும் வேலையின்மையும் ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளை விடக் குறைவு என்றாலும், கிராமப்புற வறுமை விகிதம் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அமெரிக்கா: 16.8%

அமெரிக்கா: 16.8%

செல்வ அடிப்படையில் உலகத்தில் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் மிக முக்கிய நாடு அமெரிக்கா. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளி மற்றும் குறைவான சமூகப் பாதுகாப்பு நலன்கள் மற்றும் உலகளாவிய சுகாதார வசதிக் குறைவு ஆகியவை நாட்டின் வறுமை விகிதத்தைக் கூட்டுகின்றன.

துருக்கி: 17.2%

துருக்கி: 17.2%

நகர்ப்புற செல்வந்தர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் இடையிலான ஒரு மிக நீண்ட இடைவெளி துருக்கியில் வெளிப்படையாகவே உள்ளது. நாட்டின் பல கிராமப்புற பகுதிகளில் தரம் குறைந்த கல்வியால் வேலை வாய்ப்பு அரிதாக உள்ளது.கிட்டத்தட்ட இல்லாத சமூகப் பாதுகாப்பு நாட்டின் வறுமை விகிதத்தை உயர்த்தும் எரிபொருளாக்க உள்ளது.

 இஸ்ரேல்: 19.5%

இஸ்ரேல்: 19.5%

வறுமை விகிதம் இஸ்ரேலில் வீழ்ச்சியடைந்து வருகின்றது, ஆனால் பல மக்கள் இன்னமும் நாட்டின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்பது சமீபத்திய புள்ளிவிவரங்களில்(மேற்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு Golan Heights சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பாரபட்சமின்றி வழங்கப்பட்டது) வெளிப்படையாக உள்ளது.

கோஸ்டாரிக்கா: 20.6%

கோஸ்டாரிக்கா: 20.6%

கோஸ்டாரிக்காவின் நகர்ப்புற மக்களே அதன் பெரும்பாலான செல்வவளங்களை நிர்வகிக்கிறார்கள்.அதே நேரத்தில் இந்த மத்திய அமெரிக்க நாட்டிலுள்ள பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு அடிப்படை கல்வியறிவு திறன்கள் இல்லாததால் துரதிருஷ்டவசமாக வறுமையில் வாழ்கின்றன, இது துருக்கியின் நிலையை ஒத்திருக்கிறது.

 தென் ஆப்பிரிக்கா: 26.6%

தென் ஆப்பிரிக்கா: 26.6%

இன்னும் நிறவெறி அநீதிகளிலால் மிக அதிக அளவிலான செல்வவள வித்தியாசம் கொண்ட நாடான தென்னாப்பிரிக்கா , பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளில் வறுமையில் வாழும் மக்களின் மிக உயர்ந்த சதவீதத்தைக் கொண்டுள்ளது.சராசரி கல்வி, அதிக வேலையின்மை மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட பொதுநல அமைப்பு ஆகியவை இந்நாட்டின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதன் குடிமக்கள் பலரை வறுமையில் தள்ளியிருக்கிறது என்பதை இந்நாடு இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் முதல் இடம் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's richest countries with the highest poverty

World's richest countries with the highest poverty - Tamil Goodreturns | உலக பணக்கார நாடுகளில் அதிரச்சி அளிக்கும் அளவில் ஏழை மக்கள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X