உங்களிடம் ஆதார் இல்லை என்றாலும் இந்த சேவைகளை எல்லாம் தடை இன்றி அளிக்க உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு மானியம் பெறும் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கார்டு அல்லது எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சேவைகளுக்கு ஆதார் இல்லை என்ற காரணத்தினை வைத்து மறுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதார் கார்டு இல்லை என்று ரேஷன் பொருட்கள் அளிக்கப்படவில்லை என்பது போன்ற புகார்கள் எழுந்து வரும் நிலையில் மூன்று அரசு சேவைகளைப் பெற ஆதார் எண் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

மூன்று சேவைகள்

மூன்று சேவைகள்

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவச் சேவைகள், மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க, மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க எல்லாம் ஆதார் கார்டு தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

டிவிட்டர்

டிவிட்டர்

ஆதார் எண் இல்லை என்பதற்காக அடிப்படை சமுக நல சேவைகள் எல்லாம் தடை செய்யப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை டிவிட்டர் மூலமாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊடக செய்திகள்

ஊடக செய்திகள்

சில அரசு துறைகள் சமுக நலத்திட்ட பயனாளர்களுக்கு ஆதார் இல்லை என்றும் மறுப்புத் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகிறது. இதனை அரிந்த தனிநபர் அடையாள ஆணையம் மக்களுக்கு ஆதார் எண் இல்லாமல் அரசு சேவைகளைப் பெற உரிமை உண்டு எனவே அதனை மறுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

அறிக்கை
 

அறிக்கை

இந்திய தனி நபர் அடையாள ஆணையம் அக்டோபர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி உண்மையான பயனாளிக்கு அளிக்க வேண்டிய நன்மைகளை மறுக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஊடகங்களில் ரேஷன் பொருட்கள், மருத்துவச் சேவைகள் போன்றவை மறுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வந்தபடி உள்ளன.

தண்டனை

தண்டனை

இதுப்போன்று நலத்திட்டங்களை அளிக்க மருத்தால் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தக்க தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம்

2016 ஆதார் சட்டம் பிரிவு 7-ன் கீழ் ஆதார் அட்டை மற்றும் எண் இல்லை என்றாலும் அரசு நலத்திட்டங்கள் தடையின்றிப் பயனர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Even Without Aadhaar, You Will Not Be Denied These 3 Services

Even Without Aadhaar, You Will Not Be Denied These 3 Services
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X