நேரடியாக மானியம் வழங்குவதால் இந்திய அரசுக்கு ரூ. 56,000 கோடி சேமிப்பு: துபாயில் மோடி பேச்சு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ஒரு நிகழ்வில் இந்திய அரசின் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்து மானியங்களை நேரடியாகப் பயனர்களின் வங்கி கணக்கிற்கு அளிப்பதன் மூலமாக 56,000 கோடி ரூபாயினைச் சேமித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பங்கள் முக்கியக் காரணம் என்றும் அதனால் தான் நாடு முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி இந்தியாவில் சாத்தியமானது என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

சர்வதேச அரசுகள் உச்சி மாநாடு

சர்வதேச அரசுகள் உச்சி மாநாடு

துபாயில் நடைபெற்ற சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய மோடி குறைந்த காலத்தில் அரசு மின்னணு சந்தையில் 4,500 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

மின்னணு சந்தை

மின்னணு சந்தை

அரசு மின்னணு சந்தையின் மூலமாக அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவையினை எளிதாக மத்திய அரசு மற்றும் துறைகளிடம் இருந்து பெற முடியும். மேலும் சிறிய வணிகர்கள் கூட அவர்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எளிமையாகத் தொழில்நுட்ப உதவியுடன் விற்க முடியும்.

ஸ்டார்ட்அப் மிஷன்
 

ஸ்டார்ட்அப் மிஷன்

இந்திய ஸ்டார்ட்அப் மிஷன் குறித்துப் பேசுகையில் இந்தத் திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களை இந்தியாவில் வரவேற்பதாகவும் இதன் வாயிலாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவிலான ஸ்டார்டப் நிறுவனங்கள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள்

இளைஞர்கள்

இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் இதனால் இளைஞர்களை அதிகளவில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பதாகவும் புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

விவசாயம்

விவசாயம்

தொழில்நுட்ப உதவிகளுடன் இந்திய விவசாயிகளின் உற்பத்தியினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் 2022-ம் ஆண்டுக்கு அவர்களது வருவாயினை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அதில் முதலாவதாக, மண்ணின் சுகாதாரத்தைப் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டிய மண் சுகாதார அட்டைத் திட்டம், இரண்டாவதாக விவசாயிகளுக்கு ஒரே ஒரு சாளர தகவல் சேவை கிருஷி மண்டி அல்லது மின்னணு நாம் போர்ட்டல் என்ற உதாரணங்களையும் கூறியுள்ளார். இதன் கீழ் 36,000 கோடி மதிப்புள்ள பரிமாற்றங்கள் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt saved Rs 56,000 crore through Aadhaar enabled direct benefit transfer, says PM Modi in Dubai

Govt saved Rs 56,000 crore through Aadhaar enabled direct benefit transfer, says PM Modi in Dubai
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X