8 நாட்களில் 8,000 ரூபாய்.. அதிர்ச்சி அளிக்கும் காதலர் தின கொண்டாட்டங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இளைஞர்கள் றெக்கை கட்டி பறக்கும் ஒரு மாதம் என்றால் பிப்ரவரி தான், காரணம் பிப்.14ஆம் தேதி வரும் காதலர் தினம். இந்த நாளில் பல இளைஞர்கள் புதிய வாழ்க்கையை வாழத் துவங்குவார்கள்.

இந்தக் காதலர் தினத்தில் ஆணும், பெண்ணும் காதலிப்பது அழகான விஷயம் என்றாலும், வெறும் 7 நாட்களில் அவர்களின் சம்பளத்தில் பெரும் பகுதி பணத்தைச் செலவு செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.?

இந்தக் காதலர் தினத்தை ஒரு பொருளாதாரப் பார்வையில் எப்படி இருக்கும்..? வாங்க பார்ப்போம்.

காதலர் தினம்...

காதலர் தினம் பிப்14 தேதி என்றால் இதற்கான கொண்டாட்டம் 7 நாட்களுக்கு முன்பே துவங்குகிறது. ஆம், பிப்.7ஆம் தேதியே காதலர் தினத்திற்காகக் கொண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் களைக்கட்டுகிறது.

7 நாட்டுகளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து, அதற்காகப் பிரத்தியேகமாகத் திட்டமிட்டு இந்தக் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

முதல் நாள்

ரோஸ் டே: இந்த நாளில் ஆண், பெண் இருவரும் இவர்களின் காதலர்களுக்குக் காதலுக்கே உரிய மலரான ரோஜாவை கொடுப்பது தான் முக்கியமான நிகழ்வு.

சாதாரண நாட்களில் இந்த ரோஜா 5-10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் நிலையில் பிப்.7ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 3, 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.

அதிலும் பெரிய நகரங்களில் இது அலங்காரப்படுத்தி விற்கப்படுவதால், இது 50 முதல் 100 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

 

2வது நாள்

ப்ரோபோஸ் டே: புதிதாகக் காதலை பரிமாறிக்கொள்பவர்கள் இந்த நாளில் தான் காதலை தன் காதலியிடமோ, காதலனிடமோ சொல்வார்கள்.

ஏற்கனவே காதலிப்பவர்களும் இந்த நாளில் காதலிப்பவர்கள் காதலை பரிமாறிக்கொள்வது மட்டும் அல்லாமல் அன்று மாலைப் பொழுதை சிறப்பாக்க ஹோட்டல் அல்லது ஐஸ்கீரிம், பேஸ்ட்ரி ஷாப்புக்குச் செல்வார்கள்.

இந்த நாட்களில் தான் கடைக்காரர்களுக்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதற்காகக் கடை உரிமையாளர்கள் காம்போ ஆஃபர்களை அறிவித்து அதிக லாபத்தை அடைவார்கள்.

இந்த நாளில் கிட்டத்தட்ட 400 முதல் 800 ரூபாய் வரையில் செலவு செய்யப்படுகிறார்கள்.

 

3வது நாள்

சாக்லேட் டே: பெயரிலேயே உள்ளது 3வது நாளில் ஆண், பெண் இருவரும் அவர்களுக்குப் பிடித்தமான சாக்லேட்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.

நாம் பெரும்பாலும் 10ரூபாய்க்கு மேல் சாக்லேட்களை வாங்கமாட்டோம், ஆனால் இந்த நாளில் காதலன், காதலிக்கா 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரையிலான சாக்லேட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஹோம்மேட் அல்லது காதல் தின ஸ்பெஷல் எடிஷன் சாக்லேட்கள் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் 500 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

 

4வது நாள்

டெட்டி டே: இன்றளவில் டெட்டி பியர் அதாவது பஞ்சுகளால் நிரப்பப்பட்ட கரடி பொம்மை மீது யாருக்கும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை, சிலருக்கு இருக்கலாம்.

சாதாரண நாட்களில் 100 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படும் டெட்டி பியர் பொம்மை இந்த நாட்களில் கிட்டத்தட்ட 1500 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. அதையும் சளிக்காமல் இளைஞர்கள் தங்களது காதலிக்காக வாங்குகிறார்கள்.

 

5வது நாள்

பிராமிஸ் டே: இந்த நாளில் காதலன் காதலிக்கு வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருப்பதாக உறுதி அளிக்க வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் கண்டிப்பாகக் காலம் முழுக்க நினைவில் இருக்கும் வகையில் ஒரு கிப்ட் அளிக்க வேண்டும். ஆகவே வாங்கும் பொருளும் கண்டிப்பாகக் காஸ்ட்லியாகத் தான் இருக்கும்.

இந்தக் கிப்ட்-காக மட்டும் குறைந்தபட்சம் 1500 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரையில் இளைஞர்கள் செலவு செய்கிறார்கள்.

 

6வது நாள்

ஹக் டே (Hug Day): அதே கட்டிப்பிடி வைத்தியம் தான்.

இந்த நாளில் கிப்ட் ஆக எதுவும் வாங்க வேண்டியதில்லை, தனிமையில் இருக்கக் கண்டிப்பாகச் சிறிய அளவிலான ஒரு பயணம் காதலர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தப் பயணத்திற்குச் செய்யும் செலவுகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

பைக், கார் வைத்திருப்பவர்கள் பெட்ரோல், டீசல். இது இல்லாதவர்கள் வாடகைக்குக் பைக் அல்ல கார் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதற்குக் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

 

7வது நாள்

கிஸ் டே: இதுவும் ஹக் டே போலத் தான். தனிமை தேவைப்படும் நாளாகவே உள்ளது.

இந்த நாளில் காதலர்கள் பெரும்பாலும் பப் அல்லது உயர்தர ஹோட்டல், காப்பி ஷாப் போன்றவற்றுக்குச் செல்ல திட்டமிடுவார்கள். இதற்காகன செலவுகள் இவர்கள் செல்லும் இடத்தைப் பொறுத்தது.

சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த நாளில் குறைந்தபட்சம் 2500 ரூபாய் செலவு செய்கிறார்கள்.

 

காதலர் தினம்

இந்தக் கொண்டாட்டத்தில் கடைசியாகக் காதலர் தினம். கடந்த 7 நாட்களைத் தூக்கி சாப்பிடும் அளவிற்குப் பிப்.14ஆம் தேதி வரும் காதலர் தினத்தில் அசத்த வேண்டும் என்பதே காதலர்கள் மத்தியில் இருக்கும் அடிப்படை எண்ணமாக இருக்கிறது.

இதனால் இந்த நாளில் மட்டும் 3000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை மதிப்பிலான கிப்ட் அல்லது செலவுகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

 

பயணம்

காதலர் தினத்தையும் சேர்த்து 8 நாட்கள் நீங்கள் கண்டிப்பாக உங்கள் காதலி அல்லது காதலனை சந்தித்தாக வேண்டும். இதற்குக் கண்டிப்பாக உங்கள் அலுவலகத்தில் இருந்தோ அல்லது வசிக்கும் இடத்தில் இருந்தோ பயணம் செய்ய வேண்டும்.

இதற்காகக் குறைந்தபட்சம் நீங்கள் 200இல் இருந்து 500 ரூபாய் வரையில் செலவு செய்தாக வேண்டும். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றினாலும் தனிமைக்காக வெளியில் செல்ல வேண்டி வரும்.

 

ஹோட்டல்

அதேபோல் இந்த 8 நாட்களிலும் இரவு நேர உணவு சாப்பிட காதலர்கள் ஹோட்டல்களுக்கு மட்டுமே செல்வார்கள். ஆகையால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 ரூபாயில் இருந்து 750 ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டிய வரும்.

பர்ஸ் காலி...

தற்போது இளைஞர்களை அனைவரும் வேலைக்குச் செல்கிறார்கள், இதிலும் 90 சதவீதம் பேர் பெரும் நகரங்களில் தான் வேலை.

சராசரியாக இளைஞர்கள் வாங்கும் 25,000 முதல் 35,000 ரூபாய் வரையிலான சம்பளத்தில் குறைந்தபட்சம் இந்த 8 நாட்களில் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான பணத்தைச் செலவு செய்கிறார்கள்.

 

வித்தியாசம் இல்லை

இன்றைய நிலையில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் காரணத்தால் ஆண்கள் மட்டுமே செலவு செய்கிறார்கள் என்பதெல்லாம் இல்லை.

பெண்களும் ஆண்களுக்கு நிகராக, அல்லது சில இடங்களில் அதிகமாகவும் செலவு செய்கிறார்கள் என்பதே உண்மை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How much money spending on Valentine’s Week?

How much money spending on Valentine’s Week?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns