அமேசானில் ஊழியர்கள் பணி நீக்கம்.. இந்தியாவில் பாதிப்பு எப்படி இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சியாட்டில் தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் மற்றும் சர்வதேச செயல்பாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதால் அதன் பாதிப்பு இந்திய அலுவலகங்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த செய்திகளுக்கு அமேசான் நிறுவனம் மறுப்பு ஏதும் இல்லாமல் ஆமாம் என்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய இருக்கின்றோம் என்றும் அமெரிக்க ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

தாக்கம்

தாக்கம்

அதன் தாக்கமானது அமேசான் இந்தியாவில் காணப்படும் என்றும் அதற்காகப் பல மறுசீரமைப்புப் பணிகள் கடந்த சில மாதங்களாக இங்கு நடந்து வருவதாகவும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

துறை மாற்றம்

துறை மாற்றம்

நிறுவன மறுசீரமைப்புப் பணிகளில் பல ஊழியர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர், சிலர் வேறு குழுக்களுடன் பணிபுரிய இருக்கிறார்கள் என்றும் இதன் மூலமாக ஊழியர்களின் செயல் திறன் அதிகரிக்கும் என்று அமேசான் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

கடந்த சில ஆண்டுகளாக அதிக ஊழியர்களைப் பணிக்கு அமேசான் நிறுவனம் எடுத்து வந்த நிலையில் பணி நீக்கம் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 3.4 லட்சமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2017 டிசம்பர் மாதத்தின் போது 5.6 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

இந்தியாவில் அமேசான் நிறுவனம் அதிகளவில் ஊழியர்களைப் பணிக்கு எடுத்து இருப்பதாகவும் அதனால் விரைவில் குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களை வெளியேற்றும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

அதே நேரம் இந்தியாவில் 449 ஊழியர்களைப் புதிதாகப் பணிக்கு எடுக்க இருப்பதற்கான அறிவிப்புகளையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சில பணியிடங்கள் 2015-ம் ஆண்டு முதல் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்திய ஊழியர்கள் எண்ணிக்கை

இந்திய ஊழியர்கள் எண்ணிக்கை

அமேசான் இந்தியாவில் 50,000 ஊழியர்கள் வேலை செய்து வருவதாகவும் அதில் 30,000 நபர்கள் டெலிவரி பாய், சேமிப்பு கிடங்கு ஊழியர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இருந்து எவ்வளவு ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனத்துடனான போட்டியில் அமேசான் பெரிய அளவில் வருவாயினை இழந்துள்ளது. அதனைக் குறைக்கவே இந்த மறுசீரமைப்புப் பணிகள் அமேசான் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது என்று கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon layoffs in US. How it will affect Indian employees?

Amazon layoffs in US. How it will affect Indian employees?
Story first published: Wednesday, February 14, 2018, 17:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X