உலக சந்தையே இவர் கையில் தான்.. அசராத அரசன் இன்ங்வார் காம்ப்ராட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்வீடனை சேர்ந்த புகழ் பெற்ற ஆயத்த ஃபர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான IKEA-வின் நிறுவனரான இன்ங்வார் காம்ப்ராட், கடந்த ஜனவரி 27 அன்று மறைந்தார். பர்னிச்சர் உலகின் மொத்த சந்தையும் இவர் கையில் தான் உள்ளது என்றால் மிகையாகாது. இன்றளவில் IKEA நிறுவனம் இல்லாத நாட்டே இல்லை என்றாலும் ஆச்சரியமில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகவே இவரை பர்னிச்சர் உலகின் அரசன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார்.

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத உலகின் மாபெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான இன்ங்வார் காம்ப்ராட்-இன் சுவாரஸ்யம் நிறைந்த வாழ்க்கை வரலாறு.

எளிய குடும்பப் பின்னணி:

எளிய குடும்பப் பின்னணி:

ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட பியோடர் காம்ப்ராட், ஸ்வீடனை சேர்ந்த பெர்ட்டா லின்னேயா மடில்டா நில்சன் ஆகியோருக்கு மகனாக, ப்ஜேடரிட் என்னும் பண்ணை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று பிறந்தார் இன்ங்வார்.

பொருளாதாரச் சிக்கல்கள்:

பொருளாதாரச் சிக்கல்கள்:

இன்ங்வாரின் பாட்டனார் ஆச்செம் அருகில் இருந்த அகுவானரிட் கிராமத்தில் ஏல்ம்ரிட் என்ற பண்ணையை வாங்கினார். ஆனால் அதீத கடன்களால் 1897ல் தற்கொலை செய்து கொண்டார். எனவே பண்ணை இன்ங்வாரின் பாட்டி பிரான்சிஸ்கா வசம் வந்தது.

போராட்டம்:

போராட்டம்:

பண்ணையைக் காப்பாற்ற கடும் போராட்டமே நிகழ்த்தினார் பிரான்சிஸ்கா. கடுமையான உழைப்புடன் கடும் சிக்கனத்தையும் மேற்கொண்டார். பார்த்து பார்த்தே செலவழித்தார். இங்க்வாரின் தந்தையும் அவருக்குக் கடுமையான உழைப்பால் பக்க பலமாக நின்றார். தந்தையின் பொருளாதாரத் தோல்வி அவர் தற்கொலையில் முடிந்ததை அவர் மறக்கவில்லை.

 தொழிலதிபரின் ஆரம்பம்:

தொழிலதிபரின் ஆரம்பம்:

சிறுவயதிலேயே தொழில் முனைவோரின் உத்வேகம் வாய்க்கப்பெற்றவராய் விளங்கினார் இன்ங்வார். கடின உழைப்பை பாட்டியிடமும் சிக்கனத்தைத் தந்தையிடமும் கற்ற இன்ங்வார் ஐந்து வயதிலேயே தீப்பெட்டி விற்று உழைப்பின் பெருமையையும் பணம் சம்பாதிக்கும் வழியையும் அறிந்திருந்தார்.

 பண்ணை வாழ்க்கை:

பண்ணை வாழ்க்கை:

அவரின் ஆறாவது வயதில் குடும்பம் தங்களது சொந்த பண்ணைக்குக் குடி பெயர்ந்தது. இளம் இன்ங்வார் தன்னால் இயன்ற அளவுக்குக் குடும்பத்துக்குப் பொருளீட்டி தந்தார். அத்துடன் டிஸ்லெக்சியா வால் (எழுத்துக்களை, குறியீடுகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலை: ஆமாம், நம் அமீர்கானின் "தாரே சமீன் பர்" திரைப்படத்தில் காட்டப்படும் அதே நோய்) பாதிக்கப்பட்டிருந்த இன்ங்வார் அதை வென்று படிப்பிலும் சுட்டியாகவே இருந்தார்.

மொத்த கொள்முதல்:

மொத்த கொள்முதல்:

ஆச்சரியமூட்டும் வகையில் தனது ஏழாவது வயதிலேயே தீப்பெட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பதில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்தார். மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தலைநகரமான ஸ்டோக்ஹோம் வரை தனது சைக்கிளில் பயணம் செய்து வாங்கி வந்தார்.

எல்லாம் பணம் எதிலும் பணம்:

எல்லாம் பணம் எதிலும் பணம்:

வியாபார அறிவு மிகுந்த அந்தச் சிறுவனுக்குத் தன்னைச் சுற்றி இருந்த எல்லாமே பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளாகவே தெரிந்தது. எனவே மீன் வியாபாரம், கிருஸ்துமஸ் மர அலங்காரம், பென்சில், பேனா விற்பனை, அவ்வளவு ஏன் சுற்றி இருந்த பைன் மரங்களில் இருந்துவிழுந்த பெர்ரி பழங்களைக் கூட விற்றுக் காசாக்கினான்.

நாஜி பிரச்சாரம்:

நாஜி பிரச்சாரம்:

1930களின் இறுதியில் போர்மேகம் சூழ்ந்த ஜெர்மனியில் தனது தந்தை வழி உறவுகளுடன் பல விடுமுறைகளைக் கழிக்க நேர்ந்த இகுவார் பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டார். 1942ல் இரண்டாம் உலகப்போருக்கான முகாந்திரங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் பாசிஸ்டுகளின் லிண்ட்ஹோமர் பிரிவில் சேர்ந்த இன்ங்வார் நடுநிலை வகித்த ஸ்வீடனில் இருந்தபோதும் பாசிஸ்ட் இயக்கத்தின் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

போர் முடிந்த நிலையிலும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஏன், போருக்குப் பின் முளைத்த நாஜி ஆதரவு இயக்கமான நியூ ஸ்வீடிஷ் மூவ்மெண்ட்-ஐ 1950 வரை அவர் ஆதரித்தார் என்ற ரகசியம் 1994 ஆம் ஆண்டு வெளிப்பட்டது. அதே ஆண்டில் தன் வாழ்வின் மிகப்பெரிய தவறாக அந்த இயக்கத்தை ஆதரித்ததைக் குறிப்பிட்டார். அதே சமயம் ஸ்வீடன் எழுத்தாளர்/பத்திகையாளர் எலிசபெத் ஆஸ்ப்ரிங் உடனான 2010-ம் ஆண்டு நேர்காணலில் அந்த இயக்கத்தின் தலைவரான பெர்-எங்தல் ஐ மாமனிதர் என்று குறிப்பிட்டார்.

 

 IKEA வின் ஆரம்பம்:

IKEA வின் ஆரம்பம்:

நியூ ஸ்வீடிஷ் மூவ்மெண்ட் இயக்கத்தில் சேர்ந்ததற்கு அடுத்த வருடம் IKEA வை ஆரம்பித்தார். டிஸ்லெக்சியா குறைபாட்டைத் தாண்டி படிப்பில் சாதித்த தன் மகனுக்கு ஒரு தொகையைப் பரிசாக அளித்தார் இங்க்வாரின் தந்தை. அந்தப் பணம் IKEA விற்கு மூலதனமானது.

 IKEA பெயர் காரணம் :

IKEA பெயர் காரணம் :

IKEA இகுவாரின் பெயரின் முதல் எழுத்துக்களின் குறீயீடே. தன பெயருடன் தன் பண்ணை மற்றும் கிராமத்தின் பெயரின் முதல் எழுத்துகளைக் கோர்த்துக்கொண்டார் (Ingvar Kamprad Elmtaryd Agunnaryd). நிறுவனம் சார்பாக முதலில் தன் உறவினர் எர்ன்ஸ்ட்-ன் வீட்டுச் சமையலறை மேஜையின் மாதிரியாக மேஜைகளைச் செய்து விற்க ஆரம்பித்தார்.

 தொழில் விரிவு:

தொழில் விரிவு:

இந்த மாதிரி மேஜைகள் பெரும் வரவேற்பை பெற்று விற்பனை ஆயின. 1948ல் இன்ங்வார் தொழிலை விரிவுபடுத்திப் பல்வேறு வகைகளில் பர்னிச்சர்களைத் தன் வாடிக்கையாளர்களுக்கு விற்க தொடங்கினார். தபால் ஆர்டர்கள் மூலம் சேவையை வழங்கினார். பால் சுமந்து செல்லும் வண்டிகளைத் தன் பொருட்களை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தினார்.

முதல் திருமணம்;

முதல் திருமணம்;

1950ல் இன்ங்வார் ஸ்வீடனின் ரேடியோ செக்ரேட்டரி கெர்ஸ்டின் வாட்லிங்-ஐ திருமணம் செய்தார். திருமணமான சில வருடங்களிலேயே இந்த ஜோடி அன்னிகா கில்போம் என்ற சிறுமியை தத்தெடுத்தனர். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாத காரணத்தால் 1961 ம் ஆண்டு மிகுந்த மனக்கசப்போடு பிரிந்தனர். திருமண முறிவால் குடிப்பழக்கத்திற்கு ஆளான இகுவார் அடிக்கடி அதை நிறுத்துவதும் பின்பு தொடர்வதுமாக இருந்தார்.

அட்டவணை வெளியீடு:

அட்டவணை வெளியீடு:

1951ல் தனது புகழ்பெற்ற IKEA வருடாந்திர அட்டவணையை வெளியிட்டார். 1953ல் கண்காட்சியகம் ஒன்றை தொடங்கினார்.

யுரேகா:

யுரேகா:

வியாபாரம் ஓஹோ வென்று இல்லையானாலும் ஓரளவு நன்றாகவே சென்றது. அப்போதுதான் உலகின் வியாபார வழக்கத்தையே மாற்றிய அந்த யோசனை அவருக்குத் தோன்றியது.

1956 ம் ஆண்டு ஒருநாள் தன தொழிலாளர்கள் சிலர் வண்டியில் ஏற்றுவதற்காக ஒரு மேஜையின் கால்களைக் கழற்றுவதைப் பார்த்தவருக்கு அது புதிய யோசனையைத் தோற்றுவித்தது. அதுதான் பிளாட்பேக் (Flatpack) எனப்படும் யுத்தி. எளிதில் பொறுத்தக்கூடிய வகையில் ஃபர்னிச்சர்களைத் தனியே பிரித்துப் பேக் செய்யும் முறை. இவ்வகையில் பொருட்களை ஃப்ளாட் ஆகப் பேக் செய்ய முடிந்தது.

 

முதல் சூப்பர்ஸ்டோர்:

முதல் சூப்பர்ஸ்டோர்:

பர்னிச்சர்களைப் பிரித்துத் தயாரிப்பது மற்றும் பேக் செய்வதால் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான செலவுகள் குறைந்தன. இந்த யுத்தியால் பொருட்களைக் குறைந்த விலைக்கு ஆனால் அதே தரத்தில் அவரால் விற்பனை செய்ய முடிந்தது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது, ராக்கெட் வேகத்தில் பறந்தது. அதே வேகத்தில் 1958ல் தெற்கு ஸ்வீடனில் உள்ள அல்மல்ட்-ல் தனது முதல் சூப்பர்ஸ்டோர்-ஐ தொடங்கினார்.

தொழில் விரிவு:

தொழில் விரிவு:

ஸ்காண்டினேவியா (ஸ்வீடன்,நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பகுதி) முழுதும் தன் சூப்பர் ஸ்டோர்களைத் திறந்தார் . ஆரம்பத்தில் தொடங்கிய தொலைக்காட்சி பெட்டி விற்பனை உள்ளூர் சப்ளையர்களின் ஒத்துழையாமையால் சரிந்தது. இதனால் அந்நிய சப்ளையர்களிடம் பொருட்களை இறக்குமதி செய்த இன்ங்வாருக்கு அது பெரும் லாபத்தில் முடிந்தது. அந்நிய சப்ளையர்கள் உள்ளூர் சப்ளையர்களுடன் போட்டி போட விலையைக் குறைக்க, பொருட்களின் விலையைக் குறைத்து விற்றதில் வியாபாரம் அனல் பறந்தது.

இரண்டாம் மனைவி:

இரண்டாம் மனைவி:

1963ல் இன்ங்வார் 20 வயதான மார்கரெட் ஸ்டென்னேர்ட்-ஐ இரண்டாவது திருமணம் புரிந்தார். இவர்களுக்குப் பீட்டர், ஜோனாஸ், மற்றும் மத்தியாஸ் என்ற மகன்கள் உள்ளனர். மூவரும் தந்தையின் வியாபாரத்தில் பங்கேற்று இன்று அதனை நடத்திக்கொண்டுள்ளனர். மார்கரெட் 2011-ல் இறக்கும் வரை இவர்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றது.

செலவின குறைப்பு:

செலவின குறைப்பு:

சிக்கனத்துக்கான இங்க்வாரின் முயற்சிகள் அவரது நிறுவனத்தின் லாபத்தைப் பெருக்கிக்கொண்டே சென்றது. தனது ஊழியர்களையும் இதில் ஊக்குவித்தார். பேப்பரின் இரு பக்கமும் எழுதுவது, விளக்குகளைத் தேவை இன்றி ஏறிவிடும் ஊழியர்களைத் தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 உலகளாவிய வளர்ச்சி:

உலகளாவிய வளர்ச்சி:

1970 களில் ஸ்காண்டினேவியாவிற்கு வெளியே IKEA தனது சூப்பர்ஸ்டோர்களை விரிவாக்கியது. சுவிட்சர்லாந்து, மேற்கு ஜேர்மனி மற்றும் ஜப்பானில் சூப்பர்ஸ்டோர் திறந்து, 70களின் இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் சூப்பர்ஸ்டோர்களைத் திறந்தது.

நார்டிக் வடிவமைப்பு:

நார்டிக் வடிவமைப்பு:

70 களின் இறுதியில் IKEA நிறுவனம் மக்கள் மத்தியில் அனைவருக்கும் எட்டக்கூடிய மிகக் குறைந்த விலையில் தரமான படைப்புக்களை வழங்கும் நிறுவனம் என்ற அளவில் உலகளாவிய நற்பெயரைப் பெற்றது

 வரிச் சிக்கல்கள்:

வரிச் சிக்கல்கள்:

1973 ஆம் ஆண்டில், இன்ங்வார் கடுமையான ஸ்வீடனின் கடுமையான வரிச்சட்டங்களுக்குப் பயந்து டென்மார்க்கில் வரிவிதிப்புத் தஞ்சமடைந்தார் . டென்மார்க்கில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுவிட்சர்லாந்துக்குச் சென்றார் அங்கு அவர் குறைந்த அளவு வரி செலுத்தும் வரி அகதியாக (tax exile) இருந்து வருகிறார்.

 சர்ச்சைகள்:

சர்ச்சைகள்:

சுவிட்சர்லாந்தில் வாழும் போது, இன்ங்வார் உள்ளூர் கால்பந்தாட்ட அணியை ஸ்பான்சர் செய்தார், அதில் அவரது மகன் ஒரு முக்கிய வீரராக இருந்தார். அவரது மகன் சலிப்படையும்போது, விளையாடுவதை நிறுத்த முடிவு செய்தபோது, இங்வார் உடனடியாக ஒப்பந்தத்தை ரத்துச் செய்தார், ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்துச் செய்தார்.

சிக்கனம்;

சிக்கனம்;

இன்ங்வார் தன்னைச் சிக்கனமானவராகக் காட்டிக்கொண்டார். எளிமையான வால்வோ காரில் பயணம், விலை குறைந்த கடைகளில் ஆடைகள் வாங்குவது பண்டமாற்று முறையில் வியபாரம் செய்வது என்று எளிமையானவராகக் காட்டிக்கொண்டாலும் அவர் எப்போதும் அவ்வாறாகவே நடந்து கொள்ளவில்லை. ரகசியமாக அவர் போர்ஷ்ச் கார் வைத்திருந்தார். அத்துடன் ஜெனீவா நதியை பார்த்தவாறு ஒரு ஆடம்பர வில்லாவும் தெற்கு பிரான்சில் எஸ்டேட்டும், திராட்சை தோட்டமும் வைத்திருந்தார்.

 IKEA பைபிள்:

IKEA பைபிள்:

1976 ஆம் ஆண்டில் இங்வார் தனது முதல் புத்தகமான "எ டெஸ்டமென்ட் ஆஃ பர்னிச்சர் டீலர்" புத்தகத்தை வெளியிட்டார. இது அவருடைய தனிப்பட்ட பார்வையையும் தத்துவத்தையும் தாங்கி வந்தது. எளிமை மற்றும் பொருளாதாரத்தின் கோட்பாடுகளை விவரிக்கும் இது IKEA ஊழியர்களின் பைபிளாக உள்ளது.

 INGKA அறக்கட்டளை:

INGKA அறக்கட்டளை:

1982 ஆம் ஆண்டில், இங்வர் IKEA நிறுவனத்தின் உரிமையை நெதர்லாந்தைச் சார்ந்த INGKA அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். இது சுவீடனின் உயர் வரிகளைத் தவிர்ப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகக் கருதப்படுகிறது. இன்று இது உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

 தடையற்ற வளர்ச்சி:

தடையற்ற வளர்ச்சி:

IKEA 1980 களில் அதீத வளர்ச்சி அடையத் தொடங்கியது, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றில் திறந்து வைக்கப்பட்ட கடைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தொடங்கப்பட்டன. 1990 களில், உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் விற்பனையாளர்களில் ஒன்றாக வளர்ந்தது.

நன்கொடைகள்:

நன்கொடைகள்:

1994ல் நாஜி இயக்க ஆதரவு வெளிப்பாட்டுக்கு பிறகு இங்வார் தனது அறக்கட்டளைகள் மூலம் செய்யும் நன்கொடைகளை அதிகரித்தார். இதற்கு முன்வரை மிகவும் கருமியாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டார்.

 மேலும் வளர்ச்சி:

மேலும் வளர்ச்சி:

1990களில் IKEA மேலும் பல கிளைகளுடன் அபார வளர்ச்சி அடைந்தது. இந்தச் சமயத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாது பெரிய அறக்கட்டளையாக INGKA விளங்கியது.

சர்ச்சைக்குரிய செல்வம்

சர்ச்சைக்குரிய செல்வம்

2004 ஆம் ஆண்டில், ஒரு ஸ்வீடிஷ் இதழ், INGKA தொண்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் ஆதாயங்களைக் கணக்கிட்டு, இன்ங்வார்-ஐ உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக அறிவித்தது. இது பரவலாக விமர்சிக்கப்பட்டது.

சட்ட அழுத்தம்:

சட்ட அழுத்தம்:

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2007 ஆம் ஆண்டில் இங்வாரின் சொத்து மதிப்பை 33 பில்லியன் டாலர் (£ 23.6 பில்லியன்) என்று அறிவித்தது. இது அவரை உலகின் நான்காவது பெரிய செல்வந்தராக ஆக்கியது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் IKEA வின் சட்ட நிபுணர் குழுவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்த மதிப்பு 6 பில்லியன் டாலர்களுக்கு (£ 4.3 பில்லியன்) என்று மாற்றி அறிவிக்கப்பட்டது.

 அதிகார மாற்றம்:

அதிகார மாற்றம்:

2013 ஆம் ஆண்டில், இன்ங்வார் INGKA ஃபவுண்டேஷனில் இருந்து ராஜினாமா செய்தார், மேலும் தனது இளைய மகனான மத்தியாஸ்க்கு அந்தப் பதவியை வழங்கினார். அதே வருடத்தில் தனது ஓய்வு காலத்தைச் சொந்தங்களுடன் கழிக்க ஸ்வீடன் திரும்பினார்.

கணக்கற்ற செல்வம்:

கணக்கற்ற செல்வம்:

புளூம்பெர்க் பில்லியனர்கள் என்ற பத்திரிகையின் குறியீட்டின் படி, இங்க்வாரின் நிகர மதிப்பு 2015 ஆம் ஆண்டு வரை $ 58.7 பில்லியனுக்கு (£ 42.1 பில்லியன்) உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஃபோர்ப்ஸ் இதை 3.5 பில்லியன் டாலர் (£ 2.5 பில்லியன்) என்று மதிப்பிட்டுள்ளது.

சரித்திரம்:

சரித்திரம்:

நாம் வாங்கும் முறையையே மாற்றிய ஒரு வியாபாரத்தை இன்ங்வார் உருவாக்கினார். இப்போது உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் விற்பனையாளரான IKEA, 49 நாடுகளில் 411 சூப்பர்ஸ்டோர்களைச் சொந்தமாக நடத்துகிறது. மற்றும் ஒரு வருடத்திற்கு $ 35 பில்லியனை (£ 25.1 பில்லியன்) லாபமாகக் கொண்டுள்ளது

 பெற்ற வாரிசுகளுக்குச் சலுகை:

பெற்ற வாரிசுகளுக்குச் சலுகை:

இங்க்வாரின் மகன்கள் IKEA ல் ஒரு சிறுபான்மை பங்குகளைப் பெற்றிருக்கிறார்கள், இது சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் (£ 1.1 பில்லியன்) மதிப்புள்ளதாகும், ஆனால்அவரது வளர்ப்பு மகள் அன்னிகா அவ்வளவு அதிர்ஷ்டசாலி இல்லை. இங்வார் அவருக்கு $300,000 (£ 215k) மதிப்பிலான சொத்துக்களையே விட்டுச்சென்றுள்ளார். அவரது நிகரச் சொத்து மதிப்பில் இது ஒரு சிறிய பகுதியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The secret life of IKEA's enigmatic billionaire founder

The secret life of IKEA's enigmatic billionaire founder
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X