ஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது புதிய வரி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சில சாதகமாகவும் சில பாதகமாகவும் அமைந்துள்ளது. எனவே புதிய வரி மாற்றங்கள் அமலுக்கு வரும் முன்பு அதைப் பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கோள்வது நல்லது.

எனவே 2018 ஏப்ரல் 1 முதல் ஏற்பட உள்ள மாற்றங்களால் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் மாற்றம் வரும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

அதிகச் செஸ்

அதிகச் செஸ்

மத்திய பட்ஜெட் 2018-ல் வருமான வரி செலுத்தும் போது அந்தத் தொகைக்கும் 3 வரிக்கு வரி, கல்வி வரி 2 சதவீதம் என்பது மட்டும் இல்லாமல் 1 சதவீதம் மேற்படிப்பு வரியினைச் சேர்த்து செலுத்த வேண்டும் என்பதால் வரும் ஆண்டு முதல் கூடுதலாக 1 சதவீத வருமான வரியினைச் செலுத்த வேண்டும்.

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்

சில வருடங்களுக்கு முன்பு நீக்கி இருந்த ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் திரும்ப அமலுக்கு வர இருப்பதால் மாத சம்பளதார்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்குக் குறிப்பிட்ட அளவில் வரி குறைய வாய்ப்புகள் உள்ளது. அதுவும் எந்த வரிவரம்பிற்குள் வருகிறார்கள் என்பதைப் பொருத்து தான் ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் மூலமாக எவ்வளவு வரி குறைக்க முடியும் என்பது தெரியும்.

மருத்துவச் செலவுகள்

மருத்துவச் செலவுகள்

மருத்துவச் செலவுகள் 15,000 ரூபாய் மற்றும் பயணப்படி 19,200 ரூபாய் என இரண்டையும் சேர்த்து ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் கீழ் 40,000 ரூபாயாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால் வருமான வரியானது பெரிய அளவில் குறையாது என்று கூறப்படுகிறது.

நீண்ட கால மூலதன ஆதாயங்கள்

நீண்ட கால மூலதன ஆதாயங்கள்

வரும் ஆண்டு முதல் பங்கு சந்தைச் சார்ந்த முதலீடு திட்டங்களில் ஒரு வருடங்களுக்குக் கூடுதலாக முதலீடு செய்து லாபம் பெரும்போது ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் சென்றால் 10 சதவீதம் வரை வரியினைச் செலுத்த வேண்டும். இது மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகச் செய்யப்படும் முதலீடுகளுக்கும் பொருந்தும்.

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்களுக்குத் தபால் அலுவலகப் பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றில் முதலீடு செய்து 10,000 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் பெற்றால் வரி செலுத்த வேண்டியதில் இருந்து உயர்த்தப்பட்டு 50,000 ஆக அறிவித்துள்ளனர். மருத்துவச் சலுவுகளில் 50,000 ரூபாய் வரை மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் கீழ் முதலீடு செய்ய உள்ள வரம்பு 7.5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From April 1, Tax Changes That Will Impact Your Income Stream

From April 1, Tax Changes That Will Impact Your Income Stream
Story first published: Saturday, February 17, 2018, 16:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X