11 வருடத்தில் 2.6 லட்சம் கோடி ரூபாய்.. அரசுக்கு தாராள மனசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சர்களுக்குத் தலைவலியாக இருப்பது அரசு சமுக நலத் திட்டங்களுக்குச் செலவு செய்யப்படும் தொகையும், வரி வசூலில் செய்யப்படும் தொகைக்கும் மத்தியில் இருக்கும் நிதிப் பற்றாக்குறை அளவீட்டைக் குறைப்பது தான்.

 

ஆனால் சமீப காலமாக அரசுக்குப் புதிதாக ஒரு தலைவலி உருவாகியுள்ளது, வங்கிகளில் குவிந்து வரும் வராக் கடன் மற்றும் அதிகளவிலான கார்ப்ரேட் கடன்களைச் சமாளிக்கக் கூடுதலாக நிதியை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசும், நிதியமைச்சகமும் தடுமாறி வருகிறது.

11 வருடம்

11 வருடம்

இந்தத் தடுமாற்றத்தின் காரணமாகப் பிரணாப் முகர்ஜி, பி சிதம்பரம் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய நிதியமைச்சர்கள் கடந்த 11 வருடத்தில் சுமார் 2.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்தியுள்ளனர்.

தொடர் உயர்வு

தொடர் உயர்வு

இந்த 11 வருடங்களில் வராக் கடன் மற்றும் அதிகளவிலான கார்ப்ரேட் கடன்களைச் சமாளிக்கத் தேவைப்படும் நிதியின் அளவு அதிகரித்து வருகிறதே தவிரக் குறைந்ததாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளின் வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு பல ஆயிர கோடிகள் நிதியை உட்செலுத்துகிறது.

ஊரக வளர்ச்சித் துறை

ஊரக வளர்ச்சித் துறை

இப்படி வங்கிகளுக்குள் உட்செலுத்தப்பட்ட நிதியின் அளவு, ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி அளவை விடவும் 2 மடங்கு அதிகமானதாக உள்ளது.

 அருண் ஜேட்லி
 

அருண் ஜேட்லி

2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டு நிதியாண்டுகளுக்கு மட்டும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

2010-11 முதல் 2016-17 வரையிலான காலத்தில் 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதி மட்டுமே வங்கி அமைப்புகளில் மத்திய அரசு பணத்தைச் செலுத்தியுள்ளது.

 லாபம் நஷ்டம்

லாபம் நஷ்டம்

எஸ்பிஐ மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே அரசு நிதியை உட்செலுத்தி வருகிறது. இந்த நிதி மூலம் பெற்ற லாபம் எவ்வளவு தெரியுமா..?

2010-11 : அரசின் நிதியுதவில் 18,617 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 44,901 கோடி ரூபாய்

2011-12 : அரசின் நிதியுதவில் 12,000 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 49,514 கோடி ரூபாய்

2012-13 : அரசின் நிதியுதவில் 12,517 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 50,582 கோடி ரூபாய்

2013-14 : அரசின் நிதியுதவில் 14,000 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 37,540 கோடி ரூபாய்

2014-15 : அரசின் நிதியுதவில் 6,990 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 37,540 கோடி ரூபாய்

2015-16 : அரசின் நிதியுதவில் 25,000 கோடி ரூபாய், இந்த ஆண்டில் வங்கிகள் 17,993 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

2016-17 : அரசின் நிதியுதவில் 24,997 கோடி ரூபாய், இந்த ஆண்டில் வங்கிகள் 21,395 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

2017-18 : அரசின் நிதியுதவில் 80,000 கோடி ரூபாய்

2018-19 : அரசின் நிதியுதவில் 65,000 கோடி ரூபாய்

திவாலாகும் ஏர்செல்..

திவாலாகும் ஏர்செல்..

கடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..?

இண்டிகோ ஏர்லையன்ஸ்

இண்டிகோ ஏர்லையன்ஸ்

உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pranab Mukhjeree, P Chidambaram, Arun Jaitley pumped Rs 2.6 lakh crore into banks

Pranab Mukhjeree, P Chidambaram, Arun Jaitley pumped Rs 2.6 lakh crore into banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X