நிதிசுமையால் தள்ளாட்டம்.. 2018ல் திவாலாகப் போகும் நாடுகள்..!

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

நாங்க எல்லாம் அடிவாங்காத ஏரியாவே இல்ல என்று பணவீக்கம் முதல் வாராக்கடன் வரை அனைத்திலும் அடிவாங்கிய உலகின் மோசமான பொருளாதாரங்கள் எல்லாம் அபாயக் கட்டத்தை எட்டிவிட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருடத்திற்கான "உலகப் பொருளாதார ஆய்வறிக்கை"யின் படி, 2018ல் திவாலாகப் போகும் நாடுகள் இதோ...

ஈக்குவடோரியல் ஃகினி (Equatorial Guinea)

எண்ணெய் வளத்தை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்கும் இந்நாடு, 2013 முதல் நிலவும் மந்தநிலையால் வீழ்ந்த கச்சா எண்ணெய் விலையைத் தாக்கு பிடிக்க முடியாமல் திணறிவருகிறது.

அதே நேரத்தில் இந்நாட்டின் பொதுக்கடனும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிமாகிவிட்டது. ஆகவே ஃகினியின் பொருளாதார நிலை மோசமடைந்து அதளபாதளத்தில் உள்ளது. எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலொளிய வளர்ச்சி சாத்தியமில்லை.

 

எயிட்டி (Haiti)

கடந்த சிலவருடங்களாகவே இயற்கை பேரழிவுகளைச் சந்தித்து வரும் இந்நாடு, செப்டம்பர் மாதம் வந்த இர்மா, மரியா சூறாவளிகளால் நிலைகுலைந்து போயுள்ளது.

இந்த வருடம் நாட்டின் பொருளாதார நிலை சீரடைந்து விடும் என்றபோதிலும், உள்கட்டமைப்பு மற்றும் வேளான் மறுசீரமைப்பு போன்றவை பெரும் சவாலாக இருக்கும். மேலும் அரசியல் நிலையின்மை, பொருளாதாரச் சமநிலையின்மை, தொடர் இயற்கை சீற்றங்கள் கடும் நிதி நெருக்கடியைத் தருகின்றன.

 

ஜிம்பாப்வே (Zimbabwe)

ஆப்ரிக்காவின் சிறந்த பொருளாதாரமாக இருந்த ஜிம்பாப்வே, நிதி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் ஆகியவற்றால் 2000ஆண்டில் இருந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிபர் இராபர்ட் முகஃப் நீக்கப்பட்ட பின், 2018லிருந்து பொருளாதார வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமை மாற்றத்தால் ஏற்பட்ட நிலையின்மை பொருளாதாரத்தை மேலும் மோசமடையச் செய்தது. அதனால் பணப்புழக்கம் குறைந்து வேலையில்லா திண்டாட்டம் 95% உயர்ந்துள்ளது.

 

மொசாம்பிக் (Mozambique)

முழுவதுமாகக் கடனில் மூழ்கிவிட்ட நிலையில், 2017 ம் ஆண்டில் பலமுறை நிலுவைத்தொகையைச் செலுத்த முடியாமலும், முதலீட்டுப் பத்திரங்களுக்குப் பணத்தைச் செலுத்தமுடியாமலும் கடும் நெடுக்கடியில் உள்ளது.

அதிகக் கடன்சுமை, அரசியல் அழுத்தங்களால் 2018ம் ஆண்டும் பொருளாதார வளர்ச்சியும் அந்நிய முதலீடும் மந்தமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

தெற்கு சூடான் (South Sudan)

கடுமையான வறட்சியின் காரணமாக, போதுமான விளைச்சல் இல்லாமல், ஆப்பிரிக்கா நாடான தெற்கு சூடானும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. போதுமான மழையின்மை, எண்ணெய் உற்பத்தியில் சுணக்கம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.7 பில்லியன் டாலர் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏமென் (Yemen)

கடுமையான உள்நாட்டு யுத்தம் காரணமாக நிலவும் மோசமான பஞ்சத்தால் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. பணவீக்கம் காரணமாக விவசாயம் மற்றும் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் , போர் தீவிரமடைந்தால் நிதிநிலை மேலும் மோசமடையும்.

வெனிசுலா (Venezuela)

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள வெனிசுலாவின் நிதிநிலை மோசமடைந்து பெரும்பாலான மக்கள் அன்றாடம் உணவிற்கே கஷ்டப்பட்டு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டாலருக்கு நிகரான அந்நாட்டின் பணமதிப்பு 2012 லிருந்து 99.97% குறைந்து கடும் பணவீக்கம் நிலவுகிறது. 2018 ஆண்டில் பொருளாதாரத்தைச் சீரமைக்க அந்நாட்டு அரசு கடுமையான முயற்சிகளை எடுத்துவருகிறது.

 

மோடி இதற்கு என்ன சொல்லபோகிறார்..!

காணாமல் போன 87,000 வேலைவாய்ப்புகள்.. மோடி இதற்கு என்ன சொல்லபோகிறார்..!

கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..!

இந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The nations teetering on the edge of bankruptcy

The nations teetering on the edge of bankruptcy
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns