விரைவில் இந்தியாவின் முதல் விமானத் தொழிற்சாலை மகாராஷ்டிராவில் துவங்க இருக்கிறது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் விமான நிறுவனம் துவங்க வேண்டும் என்ற கனவு விரைவில் மகாராஷ்டிராவில் நிறைவேற இருக்கிறது. இது சாத்தியமானால் இந்தியாவின் முதல் விமான நிறுவனம் என்ற பெயரும் கிடைக்கும்.

 

மும்பையில் வீட்டின் மொட்டை மாடியில் 20 நபர்கள் அமர்ந்து செல்ல கூடிய விமானத்தினை வடிவமைத்த அமோல் யாதவ் இந்த நிறுவனத்தினை மகாராஷ்டிர அரசு உதவியுடன் துவங்க உள்ளார்.

 35,000 கோடி ரூபாய்

35,000 கோடி ரூபாய்

2016-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் தனது விமானத்தினை அறிமுகம் செய்து செய்திகளில் பிரபலமான அமோல் யாதவின் தர்ஸ்ட் ஏர்கிராப்ட் பிரவிவேட் லிமிடட் நிறுவனத்திற்கு மகாராஷ்டிர அரசு 35,000 கோடி ரூபாய் நிதியினை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

 புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமோல் யாதவின் தர்ஸ்ட் ஏர்கிராப்ட் பிரவிவேட் லிமிடட் மற்றும் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டு நிறுவனங்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த மேக்னடிக் மகாராஷ்டிரா என்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் நிறைவேறியுள்ளது.

 வேலை வாய்ப்பு
 

வேலை வாய்ப்பு

உள்நாட்டு விமானத் தொழிற்சாலை திட்டத்திற்காக மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் 157 ஏக்கர் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

தேவேந்திர பத்னாவிஸ்

தேவேந்திர பத்னாவிஸ்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ்க்கு இந்தத் தொழிற்சாலை மகாராஷ்டிராவில் தான் அமைய வேண்டும் என்று கடந்த 1 ஆண்டாகப் பிரதமர் உடனான சந்திப்பு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளார்.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

அமோல் யாதவின் விமானத்திற்கு விமானச் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) 2017-ம் ஆண்டுச் சான்றிதழ் அளித்து ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் சோதனை ஓட்டமும் நடத்த உள்ளனர்.

VT-NMD

VT-NMD

இந்த விமானத்திற்கு VT-NMD என்ற பதிவெண் அளிக்கப்பட்டுள்ளது. NMD என்பது பிரதமர் நேரேந்திர மோடி மற்றும் தேவேந்திர பத்னாவிஸ் இருவரையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rooftop aircraft maker Amol Yadav to build India's first plane factory in Maharashtra

Rooftop aircraft maker Amol Yadav to build India's first plane factory in Maharashtra
Story first published: Wednesday, February 21, 2018, 13:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X