காணாமல் போகும் மோடி அலை.. 2019 பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி? அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஒரு வருடத்திற்கு முன்பு பிரதமர் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற நிலை இருந்தது, அதுவும் உத்தரப் பிரதேச மாநில தேர்தலின் வெற்றிக்குப் பின் இந்த நிலையை மேலும் வலிமையானது என்ற சொல்ல வேண்டும்.

ஆனால் இது தொடர்ந்து நிலைக்கவில்லை, டிசம்பர் 2017இல் நடந்த குஜராத் மாநில தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி, ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் தோல்வி ஆகியவை 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை உருவாக்கியது என்ற சொல்ல வேண்டும்.

ஆய்வு

இந்நிலையில் லேக்நிதி ஆய்வு திட்டம் மற்றும் ஏபிபி செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் மோடியின் அலை ஆரம்பகட்டத்தில் சிறப்பாக இருந்தாலும், தற்போது இது அதிகளவில் குறைந்துள்ளது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மோடி வீழ்ச்சி..

குறைந்த காலகட்டத்திலேயே மோடி அலையின் தாக்கம் அதிகளவில் மறைந்துள்ளதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

இதற்குச் சரியான பதில் என்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதனை மிஸ்ரி இன்டெக்ஸ் ( Misery Index) விளக்குகிறது.

 

மிஸ்ரி இன்டெக்ஸ்

அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் மக்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஆத்தர் ஓகுன் என்பவர் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஆய்வு முறையை அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்கா

இந்த மிஸ்ரி இன்டெக்ஸ் அமெரிக்காவின் பல்வேறு அதிபர்களின் தலைமையில் நாட்டு மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதைச் சரியாக விளக்கும் வகையில் இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் இது புகழ்பெற்று விளங்குகிறது.

இந்தியா

இதே ஆய்வு முறையை இந்திய சந்தைக்குச் சில முக்கிய மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் இல்லை.

இதனால் இந்த ஆய்வைப் பணவீக்கம், உண்மையான ஊரகச் சம்பள வளர்ச்சி மற்றும் உணவு அல்லாத துறையில் வளர்ச்சி (non-food credit growth) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு அல்லாத துறையில் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவீடாக இந்த ஆய்வில் செயல்பட உள்ளது.

 

அளவீடுகள்

இந்த மிஸ்ரி இன்டெக்ஸ்-இல் 0 முதல் 100 புள்ளிகள் வரையில் இருக்கும், 100 புள்ளிகள் என்றால் அதீத பாதிப்புகள் அதாவது மக்களுக்கு அதிகத் துன்ப விளைகிறது என்று பொருள்.

அதிகப் புள்ளிகளைத் தாண்டினால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள்.

 

காங்கிரஸ்

இந்த ஆய்வில் காங்கிரஸின் கடைசி இரு ஆட்சிக் காலத்தையும், தற்போது மோடி தலைமையிலான ஆட்சியும் மையமாக வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின் முதல் 5 ஆண்டுக் காலத்தின் பிற்பகுதியில் மிஸ்தி இன்டெக்ஸ் 50 புள்ளிகளைத் தாண்டியது இக்காலகட்டத்தில் தான் சர்வதேச சந்தையில் நிதிநெருக்கடி விஸ்பரூபம் எடுத்தது.

2வது ஆட்சிக்காலத்தில் மிஸ்தி இன்டெக்ஸ் நிலையான அளவீட்டை அடையவில்லை, இதற்கு முக்கியக் காரணம் வங்கித்துறையில் உயர்வடையத் துவங்கிய வராக் கடன் அளவு.

முதல் ஆட்சிக் காலத்தில் மிஸ்தி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 49ஆகவும், 2வது ஆட்சி காலத்தில் சராசரி அளவு 57 ஆகவும் இருந்தது.

 

தேசிய ஜனநாயக கூட்டணி

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014ஆம் ஆண்டில் பல வாக்குறுதிகள் உடன் ஆட்சியைப் பிடித்தது.

துவக்கத்தில் பணவீக்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டுப்படுத்தினாலும் பின் நாளில் ஊரக வளர்ச்சியில் பெரிய அளவிலான தொய்வு ஏற்பட்டது. இதன் வாயிலாக மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அதுநாள் வரையிலான ஆட்சிக் காலத்தில் மிஸ்ரி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 64 ஆக உள்ளது.

இது காங்கிரஸ் 2வது ஆட்சிக்காலத்தின் சராசரி அளவான 57 விடவும் அதிகமாகும்.

 

தொடர் உயர்வு..

கடந்த சில மாதங்களாக மிஸ்தி இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை நாம் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.

அதிகப் புள்ளிகள் என்றால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள்.

 

மக்கள் கருத்து..

மேலும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி குறித்து ஆய்வை மே 2017 மற்றும் ஜனவரி 2018 இல் லைவ்மின்ட் நடத்தியுள்ளது. ஆய்வில் ஏற்பட்ட மாற்றங்கள் உங்கள் பார்வைக்கு.

நல்ல காலம்..

அதேபோல் மோடியின் நல்ல காலம் அதாவது 'achhe din' குறித்த ஆய்விலும் முடிவுகள் தலைகீழாக உள்ளது.

புகழ்

இந்தியாவில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியலில் மோடியும், புகழ்பெற்ற அரசியல் கட்சியில் பாரத ஜனதா கட்சியும் முதல் இடத்திலேயே உள்ளது. ஆனால் இந்தப் புகழின் அளவீடுகள் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் 2019

மோடி மற்றும் பிஜேபி கட்சியின் புகழ் குறைந்து வரும் வேளையில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் புகழ் அளவீடுகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தான் பொதுத் தேர்தல் வருகிறது.

 

யாருக்கு வெற்றி..?

இந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திவிட்டால் நிச்சயம் மோடிக்கும், பிஜேபிக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இல்லையெனில் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலை விடவும் அதிக வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என இந்த மிஸ்ரி இன்டெக்ஸ் கூறுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s misery index spikes again: Battle for 2019 general elections

India’s misery index spikes again: Battle for 2019 general elections
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns