தமிழகத்தின் தலை சிறந்த டெலிகாம் நெட்வொர்க்காக இருந்த ஏர்செல் புதன்கிழமை தங்கலது நிறுவனத்தினைத் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்க வேண்டும் என்று தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வணிக ரீதியான டெலிகாம் சேவன இலவசங்களை வாரி வழங்கித் துவங்கியது. அதன் முதலே இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டன.

ஜியோ
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் முதல் ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா என அனைத்து முக்கிய நிறுவனங்கள் ஒரு அளவிற்கு ஜியோவிற்குப் போட்டியாகத் திட்டங்களை அறிவித்து இயங்கி வரும் நிலையில் சிறு நிறுவனங்களாக இருந்து வந்த டெலினார், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.

ஏர்செல் சேவை துண்டிப்பு
கடந்த இரண்டு வாரங்களாக ஏர்செல் நிறுவனம் திவால் ஆகியுள்ளது, ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று தமிழ் குட்ரிட்டர்ஸ் தளம் செய்திகள் வெளியிட சில நாட்கள் ஏர்செல் டெலிகாம் சேவை நாடு முழுவதும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

வாடிக்கையாளர்கள்
இதனை அடுத்துப் பல வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களின் சேவன தொடர போர்ட் செய்து வரும் நேரத்தில் ஏர்செல் நிறுவனம் ஜனவரி 31-ம் தேதியுடன் குஜராத், ஹரியானா, இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் தங்களது சேவையினை நிறுத்திக்கொண்டது.
இதனிடையில் மீண்டும் ஓர் அளவிற்கு ஏர்செல் நிறுவனம் சேவை வழங்கி வந்தாலும் பல வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துள்ள பேலன்ஸ் போனாலும் பராவாயில்லை என்று வேறு நிறுவனங்களுக்கு மாரி வருகின்றன.

டிராய்
ஏர்செல் நிறுவனம் கடனில் சிக்கி தவித்து வருவதைப் புரிந்துகொண்ட தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் 90 நாட்களுக்குள் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களையும் போர்ட் செய்ய அனுமதி அளித்துள்ளது.

திவால் என அறிவிக்க மனு
ஏர்செல் நிறுவனத்திற்கு 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் சிக்கல் உள்ளதால் தொடர்ந்து சேவை வழங்க முடியவில்லை என்றும் எனவே நிறுவனத்தினைத் திவால் ஆகிவிட்டது என்றும் நிறுவனங்கள் திவால் சட்டம் பிரிவு 10-ன் கீழ் அறிவிக்க வேண்டும் என்றும் ஏர்செல் செல்லுலார் லிமிடெட், டிஷ் நெட் வயர்லெஸ் லிமிடெட் மற்றும் ஏர்செல் லினிடெட் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் நிலை
நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டால் ஊழியர்களுக்குச் சம்பள அளிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காது ஆனாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

சொத்துக்கள் விற்பனை செய்யலாமா?
ஏர்செல் நிறுவனம் அதன் சொத்துக்களை விற்க முயன்றால் தொலைத்தொடர்பு துறைக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் ஊழியர்கள் சம்பளத்தினை முதலில் அளிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தான் சேவை வழங்குநர்களுக்கான பணத்தினை அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் ஏர்செல் இணைய முடியாத காரணத்தினால் ஆர்காம் நிறுவனத்தின் டெலிகாம் சேவைகள் ஏற்கனவே இழுத்து மூடப்பட்ட நிலையில் தற்போது ஏர்செல் நிறுவனம் திவால் ஆகியுள்ளது.

ஜிடிஎல் இன்ஃப்ரா
ஏர்செல் நிறுவனம் பிப்ரவரி 22ம் தேதி கடுமையான நிதி நெருக்கடியால் ஜிடிஎல் இன்ஃப்ரா தங்களுக்கு வழங்கி வந்த டவர் சேவைகளை நிறுத்திவிட்டதாகவும் எனவே மூன்றில் ஒரு பகுதி சேவன தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஏர்செல் டிராயிடம் தெரிவித்து இருந்தது.

ஸ்பெக்டர்ம் என்ன ஆகும்?
ஏர்செல் நிறுவனத்திடம் 900MHz, 1800MHz மற்றும் 2100MHz ஸ்பெக்டர்ம் பேண்டுகள் இருந்தாலும் தற்போது உள்ள சட்டங்களின் படி அவற்றைத் திருப்பி ஒப்படைத்தாலும் ஒரு ரூபாய் கூட இவர்களுக்குக் கிடைக்காது என்று கூறப்படுகிறது.