மோசடியாளர்களுக்கு செக்.. ரூ.50 கோடி கடன் பெற்றால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பொதுத் துறை வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெறுபவர்களின் பாஸ்போர்ட் விவரங்களைச் சமர்ப்பிப்ப்டது கட்டாயம் என்றும் அதனால் கடன் வாங்கி மோசடி செய்து தப்பி வெளிநாட்டுக்குச் செல்பவர்களின் அளவு குறையும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் எதிர்பார்ப்பதாக அதிகாரி ஒருவர் நம்முடன் விவரங்களைப் பகிர்ந்துக்கொண்டார்.

வங்கிகள், உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் பிற அரசாங்க துறைகளுடன் இணக்கத்தினைக் கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் ஏதேனும் கணக்குகளில் மோசடி நடைபெறுகிறது என்று தெரிய வந்தால் உடனே உளவுத்துறை அமைப்புக்குத் தகவல் பரிமாறி மோசடியாளர்கள் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடாமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய முடிவு

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய முடிவால் மோசடியாளர்கள் வெளிநாட்டிற்குத் தப்பி ஓட முடியாது என்று கூறினாலும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அன்மையில் 12,622 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்‌ஷி உள்ளிட்டோர் செய்த மோசடி குறித்த விவரங்கள் வெளியில் தெரியும் முன்பே அவர்கள் தப்பியோடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையாவும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் உள்ளார். பல முறை முயற்சித்தும் மத்திய அரசால் இவரை நாடு கடத்தவும் முடியவில்லை. பண மோசடியில் ஈட்டுப்பட்டுள்ளதாக மல்லையாவும் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக்க உள்ளார்.

லலித் மோடி

முன்னால் கிரிக்கெட் போர்டு நிர்வாகியான லலித் மோடியும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தேடப்பட்டு வரப்படுகிறார். வெளிநாட்டில் உள்ள இவர்கள் யாரும் தாங்கள் தவறு செய்துள்ளதாக ஒப்புக்கொள்வதில்லை. எனவே பாஸ்போர்ட் விவரங்கள் இருந்தால் இவர்களால் எளிதாகத் தப்பிச் செல்ல முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பயம் இருக்கும்

பாஸ்போர்ட் விவரங்களை வங்கிகள் பெற்று இருக்கும் போது மோசடி செய்த பிறகு தப்பி ஓட நினைத்தால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படலாம் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும் என்று அவர் கூறினார்.

வரா கடன்

சென்ற வாரம் நிதி அமைச்சகம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரா கடன் வைத்துள்ள உள்ள வங்கி கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வங்கி கணக்குக்கு விவரங்கள் சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தப்பி ஓடியவர்கள் பொருளாதாரக் குற்றவாளி மசோதா, 2018

சென்ற வாரம் பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பி ஓடும் குற்றவாளிகளின் அனைத்துச் சொத்துக்களைப் பரிமுதல் செய்யக் கூடிய தப்பி ஓடியவர்கள் பொருளாதாரக் குற்றவாளி மசோதா, 2018-க்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PSBs may be told to take passport details for loans above Rs 50 crore

PSBs may be told to take passport details for loans above Rs 50 crore
Story first published: Tuesday, March 6, 2018, 12:51 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns