விஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வங்கி மோசடிகளுக்கு ஆரம்பப் புள்ளியாக விளங்கிய விஜய் மல்லையா யாருக்கும் தெரியாமல் நாட்டை விட்டே ஓடி லண்டனில் தலைமறைவாகிய பார்முலாவை தற்போது நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரும் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான ஆடம்பர சொகுசு கப்பல் தற்போது தரைதட்டியுள்ளது.

என்ன பிரச்சனை தெரியுமா..?

ஆடம்பர சொகுசு படகு

இந்திய பணக்காரர்களில் ஒருவரான விஜய் மல்லையாவின் சொகுசு வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரிந்தது என்றாலும், எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு ஆடம்பர சொகுசு படகை மல்லையா வைத்துள்ளார்.

இந்தியன் எம்பிரஸ்

ஆடம்பர சொகுசு படகின் பெயர் இந்தியன் எம்பிரஸ். இதன் மதிப்பு மட்டும் 93 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 604.17 கோடி ரூபாய்

சம்பளம்

இந்நிலையில் இந்தச் சொகுசு படகில் பணியாற்றியவர்களுக்குச் சம்பள நிலுவை மட்டும் சுமார் 1 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ள நிலையில், இதன் ஊழியர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

மால்டா

ஊழியர்களின் தொடுத்த வழக்கின் காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தைத் திரும்பப் பெறும் நோக்கில் படகு மால்டா நகரை விட்டு வெளியேறாத வகையில் தடுப்புகள் இடப்பட்டுள்ளது.

40 பேர்

இந்தப் படகில் சுமார் 40 பேர் பிரிட்டன், இந்தியர்கள், ஐரோப்பியர்கள் எனச் சுமார் 40 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கான சம்பளம் 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்குக் கொண்டு செல்வதற்கான பணிகளைத் தற்போது அரசு செய்து வருகிறது.

 

கிங்பிஷர் விமான நிறுவனம்

இதேபோல் தான் விஜய் மல்லையா தலைமை வகித்த கிங்பிஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது இந்நிறுவனத்தில் பணியாற்றிய பல ஆயிரம் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்காமல் கிங்பிஷர் நிர்வாகம் ஏமாற்றியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vijay Mallya's superyacht impounded

Vijay Mallya's superyacht impounded
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns