ஆந்திர மாநிலத்தை ஏமாற்றியது மோடி அரசு.. அடுத்து என்ன நடக்கும்..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

பல்வேறு பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள் மத்தியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹைதராபாத் உடன் தெலுங்கான தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்பு ஆந்திர மாநிலம் அமராவதி என்னும் புதிய தலைநகரத்தையும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சிங்கப்பூருக்கு இணையாக ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்கப் பல திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது

சிறப்பு அந்தஸ்து

இந்தத் திட்டங்கள் சிறப்பான முறையில் குறைந்த காலகட்டத்தில் நடத்திக்காட்ட வேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் எனத் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான ஆந்திர அரசு மத்திய அரசிடம் கோரியது.

கோரிக்கை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் அவர்களது கோரிக்கையை உதாசினப்படுத்தியுள்ளதாக அந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு கூறினார். இதனை அடுத்து பிஜேபி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியை உடைத்துள்ளார் சந்திரபாபு நாயடு.

 

பிரிவு..

ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கான மாநில பிரிவினை காங்கிரஸ் ஆட்சியின் போது நிகழ்ந்தது. இந்தப் பிரிவில் வருவாய் அள்ளித்தரும் ஹைதராபாத் தெலுங்கானாவிற்குச் சென்றுள்ள நிலையில் இந்த இழப்பை ஈடு செய்ய ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

ஹைதராபாத்

இணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்பம், போக்குவரத்து, ரியல் எஸ்டேட், ஐடி சேவை, உற்பத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, முக்கியமான கல்லூரிகள் என அனைத்தும் ஹைதராபாத்தில் மட்டுமே உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த மாநிலத்திற்கு இன்ஜினே ஹைதராபாத் தான்.

இழப்பீடு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014-ல் மாநிலங்களவையில் அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.

 

தேர்தல்

மாநில பரிவினைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியுடன் உடன் சேராமல் தெலுங்கு தேசம் கட்சி பிஜேபி உடன் சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் சிறப்பு அந்தஸ்துக்கு அவர்கள் கொடுக்க வாக்குறுதி.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

 

ஏமாற்றம்

பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாகச் சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இதன் மூலம் தேர்தலுக்காக மட்டுமே வாக்குறுதி அளித்து உறுதியானது.

 

கோரிக்கை

ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று இது தொடர்பாகப் பல முறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதில் எவ்விதமான முன்னேற்றமுமில்லை. நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து ஆந்திர எம்.பிகள் சிறப்பு அந்தஸ்து கோரி புயலைக் கிளப்பி வருகின்றனர்.

4 வருடக் காத்திருப்பு

நாங்கள் 4 வருடமாகத் தொர்ந்து மத்திய அரசிடம் சிறப்பு அந்தஸ்துக்காகப் போராடி வருகிறோம், ஆனால் மத்திய அரசு எங்களது கோரிக்கையை ஏற்ற மனமில்லாமல் உள்ளது என ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி நகரில் சந்திரபாபுநாயடு தெரிவித்தார்

அருண் ஜேட்லி

பிஜேபி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசிவிதம் அவமானப்படுத்துவதாகவும், தேவையற்ற மற்றும் தகுதிக்கு அதிகமாகக் கோரிக்கை வைத்துள்ள வகையில் அசிங்கப்படுத்தியுள்ளதாகச் சந்திரபாபு நாயடு தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மனமுடைந்த சந்திரபாபு நாயடு, ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என அனைத்துத் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்திய பின்பே முடிவை வெளியிட்டுள்ளார்.

ராஜினாமா

இந்த முடிவை அடுத்துப் பயணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் கஜபதிராஜூ மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மாநில அமைச்சர் YS சவுதிரி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

நிதியுதவி

இந்தக் கூட்டணி முடிவின் காரணமாகப் புதிய மாநிலமான ஆந்திராவின் வளர்ச்சிக்கும் எவ்விதமான புதிய திட்டங்களும், நிதியுதவி கிடைக்காது. இதனால் இம்மாநில வளர்ச்சியில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும்.

முக்கியத் திட்டங்கள்

இரு மாநில பிரிவுக்குப் பின் புதிய தலைநகரான அமராவதியைச் சிங்கப்பூர்க்கு இணையாக ஒரு நிதி தலைநகரமாக உருவாக்கவும், உள்கட்டமைப்பில் உலகம் வியக்கும் வண்ணம் பெரிய அளவிலான திட்டத்தை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவிலான நிதி தேவை.

அதேபோல் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் நலனுக்காக 2004ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போலவரம் திட்டம் இன்னமும் கிடப்பிலேயே உள்ளது. இதற்கும் மத்திய அரசின் நிதியுதவி அவசியம்.

இத்தகை சூழ்நிலையில் தான் கூட்டணி உடைந்துள்ளது.

 

தொய்வு

பிஜேபி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி உடைந்துள்ளதால், ஆந்திர பிரதேச மாநில திட்டங்கள் தேக்கம் அடைவது மட்டும் அல்லலாம் பொருளாதார வளர்ச்சியிலும் தொய்வடையும்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் தமிழ்நாட்டைப் போல் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தையைக் கொண்டுள்ளது. தற்போது நிலவும் அரசியல் பிரச்சனை நீடிக்கும் வரையில் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்கும்.

 

2019 பொதுத்தேர்தல்

பொதுத்தேர்தலுக்கு வெறும் 1 வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்தின் இந்த முடிவு அட்டல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த 2004ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது.

காங்கிரஸ்

மேலும் தெலுங்கு தேசம் கட்சியை மோடி அரசு ஏமாற்றியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் சேரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான YSR காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயடுவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Break Down on TDP BJP alliance What will happen next?

Break Down on TDP BJP alliance What will happen next?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns