சுப்பிரமணியன் சுவாமி போட்ட ஒரு டிவிட்டால் ரூ.9,761 கோடி இழந்த அதானி குழுமம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத் துறை வங்கிகளில் அதிக வாரா கடன் வைத்து இருப்பதில் கவுதம் அதானிக்கு தான் முதல் இடம் என்று செவ்வாய்க்கிழமை பாஜக-ஐ சேர்ந்த பொருள்ளாதார பிரிவில் பரிந்துறைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி ஒரு டிவிட் போட்டு இருந்தார். இதனை அடுத்து அதானி குழுமத்திற்குப் புதன்கிழமை 9,761.3 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் சரிந்தது.

 

சுப்பிரமணியன் சுவாமி அந்த டிவிட்டில் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று அதானிக்கு அதிகப்படியான கடனை தொடர்ந்து அளித்து வருவதால் அதனை முறையாகக் கணக்கில் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் அந்தப் பணத்தினை மீட்க நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பங்குகளின் நிலை

பங்குகளின் நிலை

வியாழக்கிஅமை பிற்பகள் 12:45 மணி நிலவரத்தின் படி அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனப் பங்குகள் 18.05 புள்ளிகள் என 10.04 சதவீதம் சரிந்து 161.80 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் 2.55 புள்ளிகள் என 1.48 சதவீதம் சரிந்து 169.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதானி பவர் நிறுவனப் பங்குகள் 1.20 புள்ளிகள் என 4.35 சதவீதம் சரிந்து 26.40 புள்ளிகளாக வரித்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனப் பங்குகள் 1.35 புள்ளிகள் என 0.36 புள்ளிகள் உயர்ந்து 378.80 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

கடன்

கடன்

ப்ளும்பெர்க் தளத்தில் உள்ள தரவுகளின் படி அதானி பவர் நிறுவனத்தின் கீழ் 47,609.43 கோடி ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷ்ன நிறுவனத்தின் மீது 8,356.07 கோடியும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீது 22,424.44 கோடி ரூபாயும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது 20,791.15 கோடி ரூபாயும் பொதுத் துறை வங்கிகளில் கடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு
 

சொத்து மதிப்பு

கடந்த சில வருடங்களாக மிக வேகமாக வளர்ந்து வரும் அதானியின் சொத்து மதிப்பு 2017-ம் ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளதாகவும் இந்தியாவின் டாப் 10 பில்லியனர்களில் இவரும் ஒருவர் என்று ஃபோர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

 சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

பாஜக கட்சியில் இருந்தே ஒருவர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி தான் அதிகளவில் வாரா கடன் வைத்துள்ளதாகவும் அதனை முறையாகக் கணக்கில் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணத்தினைத் திரும்பப் பெற வேண்டும் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமம் கடனைத் தொடர்ந்து தாங்கள் செலுத்தி வருவதாகவும், பொதுத் துறை வங்கிகளைப் பெரிய அளவில் நாடவில்லை என்றும் நீண்ட காலக் கடனான 34,000 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளதாகவும் அதற்கான தவனையும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்கள்

மக்கள்

சுப்பிரமணியன் சுவாமியின் டிவிட்டுகளைப் பார்த்தவர்கள் அடுத்த நீரவ் மோடி அதானியாக இருக்கமோ, வங்கிகளில் உள்ள நமது பணம் பாதுகாப்பாக உள்ளதா, இவரும் வெளிநாட்டிற்குச் சென்றால் வங்கிகள் கடன் மீதான வட்டியை மீண்டும் உயர்த்திவிடுமோ அல்லது பிற வங்கி சேவைகளுக்கான கட்டணத்தினை உயர்த்தி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.

ஆந்திர

ஆந்திர

ஆந்திர மாநிலத்தை ஏமாற்றியது மோடி அரசு.. அடுத்து என்ன நடக்கும்..?

விஸ்தரா

விஸ்தரா

விஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..!

வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..!

வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..!

உலக வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Subramanian Swamy's single tweet charges Adani Group's Rs. 9,761 Crore Market Cap

Subramanian Swamy's single tweet charges Adani Group's Rs. 9,761 Crore Market Cap
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X