புதிதாக பிஸ்னஸ் துவங்க ஆசையா..? மோடி அரசு உங்களுக்கு ரூ.4 லட்சம் கொடுக்கிறது..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உங்களுக்குச் சிறிய அளவில் பிஸ்னஸ் துவங்க திட்டமா..? அதற்கு இதுதான் சிறப்பான தருணம். ஏனென்றால் நீங்கள் செய்யும் பிஸ்னஸ்-க்கு மோடி அரசு சுமார் 4 லட்சம் ரூபாய் வரையிலான மானிய நிதி உதவியை அளிக்கிறது.

Coir Udyami Yojana கீழ் இந்தத் தொழிலுக்கு நிதி சலுகை கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். coir என்றால் தேங்காய் நார்..

கோயர் உத்யாமி யோஜ்னா என்றால் என்ன..?

1. மானிய சலுகை திட்டத்தின் கீழ் ஒரு தேங்காய் நார் ஆலையை அமைக்க 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதன் பின்பு இயக்க மூலதனம் (Working capital) தேவை. இது மொத்த திட்ட தொகையில் 25 சதவீதம் தேவைப்படும். ஆனால் இயக்க மூலதனம் மானியத் தொகையில் சேர்க்கப்படுவதில்லை.

2. இந்த மானிய திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் தொகையில் 40% தொகை இந்திய அரசாலும், 55 சதவீத தொகை வங்கிக் கடனாகவும், 5 சதவீதம் தொழில் செய்யும் நபர் முதலீடாகப் பண்ண வேண்டும்.

3. இத்திட்டத்தின் கீழ் மார்கெட்டிங் சேவைகளுக்காக அரசால் வழங்கப்படுகிறது.

 

யாரெல்லாம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்..?

தனிநபர், நிறுவனங்கள், சுய தொழில் குழுக்கள், என்ஜிஓ, சோசைடி பதிவு சட்டம் 1860 கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தி கூட்டுறவு அமைப்புகள், இணைப்புக் குழுக்கள் மற்றும் அறநெறி அறக்கட்டளை ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் பெறுவது எப்படி..?

இதற்கான விண்ணப்பத்தைத் தேங்காய் நார் நிர்வாக அலுவலகத்தின் இணையதளமான www.coirboard.gov.inஇல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அல்லது தேங்காய் நார் நிர்வாக அலுவலகம் (Coir Board Offices), மற்றும் மாநில தொழிற்துறை அமைப்பில் இருந்து விண்ணப்பம் பெறலாம்.

 

எப்படி விண்ணப்பம் செய்வது?

இதற்கான விண்ணப்பத்தைத் தேங்காய் நார் நிர்வாக அலுவலகம் (Coir Board Offices), மாநில தொழிற்துறை அமைப்புகள், தேங்காய் நாட் அலுவலகங்கள், பஞ்சாய் அலுவலகங்கள் மற்றும் தேங்காய் நார் அலுவலகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நோடல் அலுவலகங்களில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் போதுமானது.

தேவையான ஆவணங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் மானிய சலுகையைப் பெற விண்ணப்பம் அளிக்கும் முன் விரைவாக முறையில் ஒப்புதல் பெற தேவையான ஆவணங்களைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

1. தொழிற்சாலை அமைக்க நீங்கள் திட்டமிடும் இடத்திற்கான பத்திரங்கள்
2. இத்துறையில் உங்களுக்கு இருக்கும் முன் அனுபவத்திற்கான ஆவணம்
3. இத்துறையில் நீங்கள் பயிற்சி பெற்றுள்ளதற்கான ஆவணம்.
4. தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரங்களை ஆர்டர் செய்துள்ளதற்கான ஆவணம் மற்றும் பில்.
5. தொழிற்சாலை துவங்க மாநில தொழிற்துறை அமைப்பு அளித்த ஒப்புதல் சான்றிதழ்
6. திட்டத்தின் மொத்த மதிப்பீடு குறித்துத் தணிக்கையாளர் கொடுத்த அறிக்கை.
7. மொத்த திட்டத்தின் ஆய்வறிக்கை
8. SC/ST பிரிவில் இருப்பவர்கள் ஜாதி சான்றிதழ்.
9. இதர தேவையான ஆவணங்கள்

மேலும் தவல்களுக்கு: http://coirboard.gov.in/?page_id=221

 

முகேஷ் அம்பானி..!

அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி..!

கடன்

கடன் வெள்ளத்தில் மிதக்கும் அம்பானியும், அதானியும்.. மோடி அரசு என்ன செய்யப்போகிறது..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Start your business today, Modi govt will give you up to Rs. 4 Lakh

Start your business today, Modi govt will give you up to Rs. 4 Lakh
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns