நடப்பு நிதி ஆண்டில் 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகளை எஸ்பிஐ வங்கி மூடியுள்ளது.. காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸை நிர்வகிக்காததால் 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகளை மூடியுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகள் மீது மீண்டும் அபராதம் விதித்து வரும் நிலையில் அதனை நேற்று முதல் குறைத்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் மாதம் ஒரு முறையும் குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான அபராத தொகையினை மாற்றி அமைத்தது.

 

2017 ஏப்ரல் 1 முதல் 2018 ஜனவரி 1 வரையில் மட்டும் 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகளைக் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்று எஸ்பிஐ வங்கி மூடியுள்ளது என்று மத்திய பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த சந்திர சேகர் எனப்படும் ஆர்டிஐ ஆர்வலரின் கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சேமிப்புக் கணக்குகள்

சேமிப்புக் கணக்குகள்

எஸ்பிஐ வங்கியில் 41 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளன, அதில் 16 கோடிக் கணக்குகள் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் 21 வயதுக்கும் குறைவாக உள்ள மாணவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்க அவசியமில்லை.

மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி வங்கி கிளைகள்

மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி வங்கி கிளைகள்

மெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி எஸ்பிஐ வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.

சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 30 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்தது. அது தற்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 50 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 15 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைத்துள்ளனர்.

 

நகர் புகுதிகள்
 

நகர் புகுதிகள்

நகரப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை 2,000 ரூபாய் வரை நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால் பின் வருமாறு அபராதம் செலுத்த வேண்டும்.

சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த, தற்போது 7.50 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 10 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 12 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைத்துள்ளனர்.

 

கிராமப்புற வங்கி கணக்குகள்

கிராமப்புற வங்கி கணக்குகள்

எஸ்பிஐ வங்கிகளில் கிராமப்புற வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1,000 ரூபாய் ஆகும். அதனை நிர்வகிக்கவில்லை என்றால் பின்வருமாறு அபராதம் செலுத்த வேண்டும்.

சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த, தற்போது 5 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 7.50 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 10 ரூபாய் + ஜிஎஸ்டி எனக் குறைத்துள்ளனர்.

 

மினிமம் பேலன்ஸ் குறைப்பால் யாருக்கு எல்லாம் பயன்?

மினிமம் பேலன்ஸ் குறைப்பால் யாருக்கு எல்லாம் பயன்?

எஸ்பிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைக்கப்பட்டுள்ளதால் 25 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கணக்கு பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

அடிப்படை சேமிப்பு கணக்கு

அடிப்படை சேமிப்பு கணக்கு

சாதாரணச் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் அடிப்படை சேமிப்பு கணக்குகளாகத் தங்களது சேமிப்புக் கணக்கினை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Closes 41.16 Lakh Savings Accounts for not maintaining the average monthly balance

SBI Closes 41.16 Lakh Savings Accounts for not maintaining the average monthly balance
Story first published: Wednesday, March 14, 2018, 12:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X