இந்தியாவின் இந்த மூன்று நகரங்கள் தான் உலகளவில் மிகவும் மலிவானவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உலகளவின் காஸ்ட்லி நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு ஆகும் செலவுகள் 2018 சர்வேயில் தென் ஆசிய நகரங்கள் அதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் குறைந்த அளவில் செலவாகிறது என்பது தெரியவந்துள்ளது.

உலகளவில் மலிவான நகரங்கள்

உலகளவில் மலிவான நகரங்கள்

சிரியா தலைநகரான டாமாஸ்கஸ் தான் உலகின் மலிவான நகரமான உள்ளது. வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் கஜகஸ்தான் வணிக மையம், அல்மாட்டி ஆகிய மூன்றும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்திய நகரங்கள்

இந்திய நகரங்கள்

டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் லாகோஸ் 4வது இடத்திலும், பெங்களூரு 5வது இடத்திலும், கராச்சி 6வது இடத்திலும், அல்ஜியர்ஸ் 7வது இடத்திலும், சென்னை 8வது இடத்திலும், புச்சாரெஸ்ட் 9வது இடத்திலும், புது டெல்லி 10 வது இடத்திலும் உள்ளது.

ஆபத்து

ஆபத்து

இந்திய துணைக்கண்டங்கள் கட்டமைப்பு ரீதியாக மலிவானதாக இருந்தாலும், ஒரு இடத்தின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. உலகின் மலிவான நகரங்கள் சிலவற்றில் கணிசமான ஆபத்து உள்ளது எனவும் அறிக்கை கூறுகிறது.

ஏன் இந்த நகரங்கள் மலிவாக உள்ளன?

ஏன் இந்த நகரங்கள் மலிவாக உள்ளன?

கிராமப்புறங்களில் இருந்து இந்த நகரங்களுக்கு மலிவாக மற்றும் அதிகளவில் உற்பத்தி பொருட்கள் கிடைப்பது மாற்றும் சில பொருட்களுக்கு அரசு மானியம் அளிப்பது போன்றவற்றால் மேற்கத்திய நாடுகளை விட இந்த நாடுகள் மலிவானதாக உள்ளன.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

உலகின் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், பாரிஸ் இரண்டாம் இடத்திலும், ஜூரிச் 3 வது இடத்திலும் ஹாங்காங் 4 வது இடத்திலும் உள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும் ஊதியம் மற்றும் செலவு செய்வது என்பது குறைவாகவே உள்ளது. வருமான சமத்துவமின்மை என்பது குறைந்த ஊதியம் விதிமுறைகளாகும், வீட்டுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சில்லறை சந்தையில் உள்ள பல வரிசை விலை போன்றவை வலுவான போட்டியை அளிக்கிறது.ம்.

கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து உணவு, குடிநீர், ஆடை, வீட்டுவசதி மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, பயன்பாட்டுப் பில்கள், தனியார் பள்ளிகள், உள்நாட்டு உதவி மற்றும் பொழுதுபோக்குச் செலவுகள் என 160 பொருட்கள் மற்றும் சேவைகள் விலையினை ஒப்பிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சியோமி

சியோமி

<strong>சாம்சங், எல்ஜி நிறுவனங்களை ஓடஓட விரட்டும் சியோமி.. மீண்டும் ஒரு புரட்சி..!</strong>சாம்சங், எல்ஜி நிறுவனங்களை ஓடஓட விரட்டும் சியோமி.. மீண்டும் ஒரு புரட்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delhi, Bangalore, Chennai among top 10 cheapest cities in the world

Delhi, Bangalore, Chennai among top 10 cheapest cities in the world
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X