பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு அறிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேகமாக வளர்ந்து வரும் இன்றைய மார்டன் உலகில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் குடிப்பது, வீட்டில் இருந்து பிளாஸ்டிக் பாட்டலில் தண்ணீர் கொண்டு செல்வது என்பது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் பாட்டில் வாட்டர் சந்தையானது ஆண்டுக்கு 150 பில்லியன் டாலரினை பிடித்துள்ளது, இதில் இந்தியாவும் அடங்கும்.

ஆனால் இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால் 90 சதவீத பிராண்டட் பாட்டில் தண்ணீரில் மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் களந்துள்ளதாகவும் அது மனித உடலை பெரும் அளவில் பாதிப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

 ஆபத்தான துகள்கள்

ஆபத்தான துகள்கள்

ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தண்ணீர் ஒருவர் குடிக்கிறார் என்றால் ஆண்டுக்கு 10,000 ஆபத்தான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக்கை குடிக்கிறோமா?

பிளாஸ்டிக்கை குடிக்கிறோமா?

பாட்டில் தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்ததில் 93 சதவீத மாதிரிகளில் பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்களானது பூஜ்ஜியத்திலிருந்து 10,000 வரை உள்ளதாம்.

பிளாஸ்டிக் துகள்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

பிளாஸ்டிக் துகள்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

சராசரியாக, பிளாஸ்டிக் துகள்களானது 100 மைக்ரான் (0.10mm) அளவு முதல் இருக்கும் போது அது மைக்ரோபிளாஸ்டிக். இதுப்போன்று ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றில் 10.4 பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

 கலப்படம்
 

கலப்படம்

சராசரியாக ஒரு பாட்டில் தண்ணீரில் 325 பிளாஸ்டிக் துகள் இருந்துள்ளது. ஒரு பிராண்டு மற்றும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்த போது 6.5 மைக்ரான் பிளாஸ்ட்க் துகள்கள் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய சந்தை

மிகப் பெரிய சந்தை

பாட்டில் தண்ணீர் சந்தையானது ஆண்டுக்கு 147 பில்லியன் டாலர் என மிக வேகமாக மனிதர்கள் நுகரும் ஒரு பொருளாக உள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் பிளாஸ்டிக் துகள்களால் மனித உடல் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கவில்லை.

இந்திய மாதிரிகளும் தோல்வி

இந்திய மாதிரிகளும் தோல்வி

அமெரிக்கா, தாய்லாந்து, பிரேசில், சீனா, இந்தோனேசியா, கென்யா, லெபானன், மெக்ஸிகோ உள்ளைட்ட நாடுகளைத் தவிர்த்து 5 கண்டங்களில் இருந்து 9 நாடுகளைத் தேர்வு செய்து இந்தியா உட்பட 19 இடங்களில் இருந்த எடுத்துச் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் இந்தக் கண்களுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் பாட்டில் நீரில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வினை நடத்திய அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனமான ஓஆர்பி மீடியா நிறுவனம், பாலிப்ரொப்பிலீன், நைலான் மற்றும் பாலிஎதிலினெ டெரெபலேட் (PET) உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பாட்டில் தண்ணீரில் உள்ளதாகக் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In 150 billion dollar market 90% bottled water brands contaminated globally: Survey

In 150 billion dollar market 90% bottled water brands contaminated globally: Survey
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X