சாம்சங், எல்ஜி நிறுவனங்களை ஓடஓட விரட்டும் சியோமி.. மீண்டும் ஒரு புரட்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களைப் பார்ப்பதே அரிதாக இருந்த காலத்திற்கும், பார்க்கும் இடமெல்லாம் ஸ்மார்ட்போன் இருக்கும் காலத்திற்கும் பெரிய அளவிலான இடைவெளி இல்லை.

அதிகப்படியான விலையில் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தற்போது மிகவும் மலிவான விலையில் விற்கப்படுவதே இந்தக் குறுகிய காலமாற்றத்திற்கு முக்கியமான காரணம். இந்த மாற்றத்தில் பெரிய பெரும் பங்கு சீனாவின் சியோமி நிறுவனத்திற்கு உண்டு.

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகத்திற்குப் பின் சில வருடங்களிலேயே உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பல மடங்கு அதிகரித்தது, கொடிகட்டி பறந்த பியூச்சர் போன்களை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்டியது. இந்த இடத்தில் முடங்கியது தான் நம்ம நோக்கியா நிறுவனம்.

இந்தக் காலத்தில் ஸ்மார்ட்போன் இருந்தாலும் அதிகளவில்லை. காரணம் விலை.

 

சியோமி..

சியோமி..

இந்நிலையில் உலகச் சந்தையில் ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் கிராக்கியை உணர்ந்து மலிவான விலையில் தரமான போன்களைத் தயாரிக்க முடிவு எடுத்து சியோமி.

இதன் மூலம் சீனா, இந்தியா மற்றும் இதர ஆசிய சந்தைகளில் சாம்சங், சோனி, எல்ஜி, நோக்கியா போன்ற முன்னணி நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சியோமியின் மலிவான விலை ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவிலான வெற்றியை அடைந்தது.

 

 3வது இடம்

3வது இடம்

இன்றளவில் உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி தற்போது டாப் 5 இடங்களில் இருப்பது மூலமாகவே நாம் அதன் வெற்றியைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் சியோமி அடுத்த மிகப்பெரிய திட்டத்தில் இறங்கியுள்ளது.

 

அடுத்தத் திட்டம்..

அடுத்தத் திட்டம்..

ஸ்மார்ட்போன் சந்தையில் மலிவான மற்றும் தரமான போன்களை அறிமுகம் செய்து வெற்றி அடைந்தது போலவே தற்போது டிவி சந்தையிலும் இறங்கியுள்ளது சியோமி.

தொலைக்காட்சி சந்தையில் தற்போது கொடிகட்டி பறக்கும் எல்ஜி, சாம்சாங், சோனி நிறுவனங்களை விடவும் 50 சதவீதம் குறைவான விலையில் முன்னணி நிறுவனங்களின் இணையான தரத்துடன் டிவிகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது சியோமி.

 

குழப்பம்..

குழப்பம்..

சியோமியின் ஸ்மார்ட்போன் வெற்றியைப் போல டிவி துறையிலும் இருக்குமா என்றால் நிச்சயமாக எந்தொரு முடிவையும் சொல்ல முடியாது.

காரணம் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வைத்தே முடிவு செய்ய வேண்டிய நிலையில், சியோமியின் இந்த முயற்சிக்குப் போட்டி கொடுக்கும் வகையில் எல்ஜி, சாம்சாங், சோனி நிறுவனங்கள் இதுவரை எந்தொரு திட்டமும் வகுக்கவில்லை.

 

விலை போர்

விலை போர்

சியோமியின் 3 டிவி மாடல்கள் இன்று பொதுச் சந்தைக்கு ஆன்லைன் விற்பனை மூலம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இதன் வெற்றி மற்றும் தாக்கத்தைக் கணக்கிடாமல் நாங்களும் விலையைக் குறைத்தால், அது கண்டிப்பாக விலை போர் தான் உருவாக்கும். இதன் மூலம் பொறுத்திருந்து முடிவுகளை எடுக்க உள்ளதாக முன்னணி டிவி தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

விலை விபரம்

விலை விபரம்

தற்போது சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள டிவிகளின் விலை விபரம்

MI எல்இடி ஸ்மார்ட் டிவி 4A (32இன்ச் திரை)- 13,999 ரூபாய்
MI எல்இடி ஸ்மார்ட் டிவி 4A (43இன்ச் திரை)- 22,999 ரூபாய்
MI எல்இடி ஸ்மார்ட் டிவி 4 (55இன்ச் திரை)- 39,999 ரூபாய்

இந்தத் திரை அளவுகள் தான் மொத்த டிவி சந்தையில் 80 சதவீத வர்த்தகம் பொருள்.

 

இரட்டிப்பு விலை

இரட்டிப்பு விலை

தற்போது சியோமி அறிமுகப்படுத்தியுள்ள திரை அளவுகளில் பிற முன்னணி நிறுவனங்களின் டிவிகளை ஒப்பிடும் போது இதன் விலை கிட்டத்தட்ட 1 மடங்கு அதிகமாகவே உள்ளது.

உதாரணமாகச் சியோமியின் 32 இன்ச் டிவி 13,999 ரூபாய், எல்ஜி, சாம்சாங், சோனி நிறுவன தயாரிப்புகளின் சராசரி விலை 24,000 ரூபாய்.

 

சிறு நிறுவனங்கள்

சிறு நிறுவனங்கள்

சியோமியின் டிவி அறிமுகம் எல்ஜி, சாம்சாங், சோனி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு வர்த்தகப் போட்டி என்றால் சிறிய நிறுவனங்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலை உருவாகும் என அச்சம் நிலவி வருகிறது.

ஜியோ

ஜியோ

ஜியோவின் இலவசம் மற்றும் மலிவான மொபைல் சேவை எப்படி டெலிகாம் சந்தையை மாற்றியதோ அதேபோல் தான் தற்போது சியோமி முயற்சி செய்கிறது.

 சியோமி டிவி வாங்க வேண்டுமா..?

சியோமி டிவி வாங்க வேண்டுமா..?

உங்களுக்குப் பிடித்தமான டிவியைக் கிளிக் செய்யவும்.

MI எல்இடி ஸ்மார்ட் டிவி 4A (32இன்ச் திரை)- 13,999 ரூபாய்
http://www.mi.com/in/mi-led-smart-tv-4a-32/
MI எல்இடி ஸ்மார்ட் டிவி 4A (43இன்ச் திரை)- 22,999 ரூபாய்
http://www.mi.com/in/mi-led-smart-tv-4a-43/
MI எல்இடி ஸ்மார்ட் டிவி 4 (55இன்ச் திரை)- 39,999 ரூபாய்
http://www.mi.com/in/mi-led-smart-tv-4-55/

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

xiaomi gives big shock to LG, Samsung and Sony on TV segment

xiaomi gives big shock to LG, Samsung and Sony on TV segment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X