455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இன்றளவு எல்லா வர்த்தகமும் ஏதாவது ஒரு இடத்தில் இண்டர்நெட்-ஐ நம்பி இயங்கத் துவங்கியுள்ளது. இதுவும் மார்டன் வர்த்தகங்கள் அதாவது ஆடை வடிவமைப்பாளர், இன்டிரியர் டெக்ரேஷன், காபி ஷா போன்ற பல வர்த்தகங்கள் இன்றளவு இண்டர்நெட் வாயிலாகவே வர்த்தகம் செய்து வருகின்றது.

இதில் குறிப்பாகச் சமுக வலைத்தளங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதிக லைக்ஸ் மற்றும் பாலோவர்ஸ் இருந்தால் போதும் வாடிக்கையாளர்கள் வர்த்தகத்தைத் தேடி வருவார்கள்.

பாலோவர்ஸ் மற்றும் லைக்ஸ்களைப் பெற்றுத் தருவதற்காகவே தற்போது சில நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

புதிய கணக்கு

இன்டிரியர் டெக்ரேஷன் வர்த்தகத்திற்காக ஒருவர் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்கவும் புதிய டிவிட்டர் கணக்குகளைத் துவங்கினார்.

புதிய கணக்குகள் அதுவும் வர்த்தகக் கணக்குளுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சாதாரணக் காரியமில்லை.

 

கூகிள்

ஆகவே அவர் குறுக்கு வழியைத் தேடியுள்ளார்.

குறுகிய காலத்தில் அதிகப் பாலோவர்களைச் சேர்க்கும் விதமாகக் கூகிள் தேடுதல் தளத்தில் "buy Twitter followers in India" எனத் தேடியுள்ளார். இதில் சில நிறுவனங்கள் கிடைத்துள்ளது.

இவர் கிளிக் செய்த நிறுவனம் இணையத் தளத்தில் தாங்கள் டிவிட்டர் பாலோவர்ஸ், பேஸ்புக் லைக்ஸ், SEO சேவை, விக்கிப்பீடியா செய்தி மாற்றம், சமுக வலைத்தள மார்கெட்டிங் எனப் பல சேவைகளை அளித்துள்ளது.

 

விருப்பம்

இந்தத் தளத்தில் விருப்பம் தெரிவித்த அவருக்கு, நிறுவனத்தில் இருந்து பெயர் தெரியாத ஒருவர் தொடர்பு கொண்டு டிவிட்டரில் 1000 பாலோவர்ஸ்களுக்கு ஜிஎஸ்டி உடன் 455 ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்..

விலை குறைவாகவே உள்ளதால் தானும் ஒப்புக்கொண்டு 455 ரூபாய் தொகையை அமெரிக்க டாலர் பில் மூலம் செலுத்தியுள்ளார்.

ஒரு நாள்

அந்த நிறுவனம் கொடுத்த பில்லுக்கான பணம் செலுத்திய ஒரு நாளில் தனது டிவிட்டர் கணக்கில் 1,000 பாலோவர்கள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இங்குதான் மிகப்பெரிய மோசடியைச் சந்தித்துள்ளார்.

நிலைமை மாறியது..

வெறும் ஒரு வார காலத்தில் 1,015 அளவில் இருந்த டிவிட்டர் பாலோவர்கள் 742 ஆகக் குறைந்தது. இதனால் 455 ரூபாய் இழந்தது மட்டும் அல்லாமல் சமுக வலைத்தளத்தில் இருக்கும் மோசடியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தற்போது @TheHome_Project இந்தக் கணக்கில் வெறும் 300 பேர் தான் பாலோவர்களாக உள்ளனர்.

 

மோடி

சமீபத்தில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் இருக்கும் 4.11 கோடி பாலோவர்ஸ்-களில் 60 சதவீதம் பேர் போலியான பாலோவர்ஸ்கள் என ஆய்வுகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் உள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New business in twitter: 1,000 follwers for just Rs.455

New business in twitter: 1,000 follwers for just Rs.455 - Tamil Goodreturns | 455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புது பிஸ்னஸ்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, March 18, 2018, 13:42 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns