பாலிவுட்டில் இறங்கினார் முகேஷ் அம்பானி.. ஆரம்பமே அமர்க்களம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது ஆஸ்தான தொழிலாக விளங்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட டெலிகாம் சேவையில் அதகளப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானி புதிய முயற்சியாகப் பாலிவுட்டில் இறங்க முடிவு செய்துள்ளார்.

மஹாபாரதா

பாகுபலியின் உலகளாவிய வெற்றி பாலிவுட்டுக்கு நெருடலாகவே இருந்த நிலையில், தற்போது அமீர் கான் மஹாபாரதா புராண கதையைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதைத் தனது கனவு திட்டமாகவும், இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கக் கண்டிப்பாக 15-20 வருடம் தேவைப்படும் எனவும் அமீர் கான் சில பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

 

ஜாக்பாட்

இவ்வளவு பெரிய கதையைத் தயாரிக்கக் காலம் மட்டும் அல்ல பணமும் தேவை, இதற்கு முதலீடு செய்யச் சரியான தயாரிப்பாளரை தேடி வந்த நிலையில் அமீர் கானுக்கு அடித்துள்ளது ஜாக்பாட்.

முகேஷ் அம்பானி

ஜியோ நிறுவனத்தின் வாயிலாக ஜியோ டிவி, டிஷ் டிவி, ஜியோ மியூசிக் எனப் பலவற்றில் நேரடியாக இறங்காமல் வர்த்தகம் செய்து வரும் முகேஷ் அம்பானி, தற்போது நேரடியாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

1,000 கோடி ரூபாய் முதலீடு

அமீர் கானின் மஹாபாரதா கதையை இந்திய வர்த்தகத்திற்காக மட்டும் அல்லாமல் உலகளவில் கொண்டு சேர்க்கும் வகையில், பீட்டர் ஜாக்சனின் லார்ட் ஆப் ரிங்ஸ் டிரையாலஜி, ஹெச்பிஓ-வின் கேம் ஆஃப் திரோன்ஸ் வகையில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கச் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் எடுக்க முகேஷ் அம்பானி ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அமீர் கான் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

 

பகுதிகள்

மஹாபாரதம் என்னும் மிகப்பெரிய கதை ஒரேயொரு திரைப்படமாக எடுப்பதை விட 3 முதல் 5 பகுதிகளாக எடுக்கவும் இந்தப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆங்கில வசனம்

இந்தத் திரைப்படத்தைச் சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக ஆங்கில வசனத்தை எழுத உலகின் முன்னணி எழுத்தாளர்களை இத்திட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணன்

இத்திரைக்கதையில் அமீர் கானுக்குக் கர்ணன் கதாப்பாத்திரத்திலேயே நடிக்க ஆசை அதிகமாம் ஆனால் தனது உடலுக்கு அது செட்டாகாது என்பதால், கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமீர் கான் கூறியுள்ளார்.

மோடி

மோடியை வீழ்த்த யாருமில்லை.. 2029 வரை அசைக்க முடியாது..!

ஐடி ஊழியர்கள் கவலை

எச்-1பி விசா பிரீமியம் சேவைக்கு இடைக்கால தடை.. ஐடி ஊழியர்கள் கவலை..

கூகுள்-ஐ ஓரம் கட்டிய அமேசான்.

கூகுள்-ஐ ஓரம் கட்டிய அமேசான்.. அமெரிக்க பங்கு சந்தையில் இரண்டாம் பெரிய நிறுவனம் இது தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani entering into bollywood with huge project

Mukesh Ambani entering into bollywood with huge project
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns