கூகுள்-ஐ ஓரம் கட்டிய அமேசான்.. அமெரிக்க பங்கு சந்தையில் இரண்டாம் பெரிய நிறுவனம் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்னை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் மிகப் பெரிய முதலீடுகளைப் பெற்றுள்ள நிறுவனமாக அமேசான் உருவெடுத்துள்ளது.

நேற்றைய பங்கு சந்தை முடிவில் அமேசான் நிறுவனப் பங்குகள் 2.69 சதவீத உயர்ந்து 1,586.51 டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டு 768 பில்லியன் டாலர் வரை முதலீட்டினை பெற்றிருந்தது. இதற்கு முக்கியக் காரணங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங், மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் பிற புதிய வணிகங்கள் ஆகும்.

ஆல்பாபெட்
 

ஆல்பாபெட்

அமேசான் நிறுவனம் பங்குகள் மதிப்பு உயர்ந்த அதே நேரம் ஆல்பாபெட் நிறுவனப் பங்குகள் 0.39 சதவீதம் சரிந்து 762 பில்லியன் டாலர் சந்தை முதலீட்டுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.

 இணையதள விளம்பரங்கள்

இணையதள விளம்பரங்கள்

ஆல்பாபெட் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணையதள விளம்பரங்களில் தங்களது ஆதிக்கத்தினைச் செலுத்தி வந்தாலும் இவர்களது பயனர்கள் விவரங்கள் குறித்து அரசு விமர்சனம் செய்தது சர்ச்சையினையும் கிளப்பியது.

 அமேசான்

அமேசான்

கடந்த ஒரு ஆண்டில் அமேசானின் இணையதளத் திரைப்படச் சேவையின் வளர்ச்சி, கிளவுட் மென்பொருள் விற்பனை அதிகரிப்பு, வெப் சேவைகளில் முதலிடம் போன்ற காரணங்களால் நிறுவனப் பங்குகள் 81 சதவீத வளர்ச்சியினைப் பெற்று வேகமாக வளர்ந்தது மட்டும் இல்லாமல் உலகக் கோடீஸ்வரர் பட்டியலிலும் முதல் இடத்தினை ஜெப் பிஸோஸ் பிடித்தார்.

பங்குகள் உயர்வு
 

பங்குகள் உயர்வு

என்ன தான் பங்குகள் தற்போது உயர்ந்து இருந்தாலும் அது நிலையானது இல்லை. அதே நேரம் அமேசான் நிறுவனத்தின் அன்மை வளர்ச்சியினை வைத்துப் பார்க்கும் போது தொடர்ந்து இந்த உயர்வைப் பெறும்போது 1 டிரில்லியன் டாலர் பெற்று ஆப்பிள் நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனமது 989 பில்லியன் டாலர் என 1 டிரில்லியன் டாலர் அருகில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் சென்ற அண்டு போன்று 25 சதவீத உயர்வைப் பெற்றால் எளிதாக 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெறும்.

ஆல்பாபெட்

ஆல்பாபெட்

2018-ம் ஆண்டில் தற்போது வரை ஆல்பாபெட் நிறுவனம் 4 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு மொத்தமாக 26 சதவீத வளர்ச்சியினைப் பெற்று இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now Amazon is Second Most Valuable Company in US

Now Amazon is Second Most Valuable Company in US
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X