இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு ஆண்டு உலகளவில் மக்கள் அதிகம் பணிபுரிய விரும்பும் நிறுவனம் மற்றும் பணிபுரிய விரும்பும் நிறுவன பட்டியலினை வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடுதல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் வெளியிட்டு வருகிறது.

 

இந்த நிறுவனங்கள் பட்டியலானது நிறுவனம், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்துடனான பிணைவு, வேலை வாய்ப்பு, ஊழியர்கள் பெறும் நன்மைகள் போன்றவற்றை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டில் இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் டாப் 25 நிறுவனங்கள் பட்டியலை அசத்தலாக வெளியிட்டுள்ளது லிங்கிடுஇன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை வேலை செய்ய விரும்பவே இல்லை என்பது தான் அதிர்ச்சி.

25வது நிறுவனம்

25வது நிறுவனம்

டெலாய்ட்

நிர்வாகக் கன்சல்டன்ஸி நிறுவனமான டெலாய்ட் உலகின் முக்கிய ஆடிட்டிங் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு உலகளவில் முதன் முறையாகப் பொதுத் துறை நிறுவனத்தின் கணக்காளராக வில்லியன் டெலாய்ட் நியமனம் பெற்றது போன்று பல வரலாற்றுச் சிறப்புகள் எல்லாம் உள்ளன. இங்கு 2,63,900 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் குழந்தைகளுக்காக 16 வரம் வரை மகப்பேறு கால மற்றும் பெற்றோர் விடுமுறை எல்லாம் அளிக்கிறது.

 

24வது இடம்

24வது இடம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கடந்த 40 ஆண்டுகளாகத் தோல்வியே இல்லை என்று கூறலாம். தொட்ட தொழில் எல்லாம் லாபம் அளித்துள்ளது. முக்கிய வணிகமாகப் பெட்ரோலியமும், தற்போது ஆரம்பித்த ஜியோவும் உள்ளது. 34,120 ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அவர்களுக்குக் கால் பந்து, கிரிக்கெட் விளையாட மைதானங்கள், எல்ஈடி ஸ்கோர்போர்டு, டென்னிஸ் மற்றும் பாஸ்கெட் பால் மைதானங்கள் போன்றவற்றை எல்லாம் அளித்துள்ளது.

 

23வது இடம்
 

23வது இடம்

யூனிலிவர்

யூனிலிவர் தயாரிப்புகள் நமது அன்றாட வாழ்வில் சோப்பு, டீ தூள் மற்றும் ஜாம், பிரில்க்ரீம் என்று முக்கியத் தேவையாகவே மாறிவிட்டது. வேகமாக நுகரக்கூடிய பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் 1,69,00 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஊழியர்களுக்கு ஊக்கதொகையாக மெடிகிளைம், யோகா வகுப்புகள் மற்றும் குறைந்த செலவில் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி போன்றவற்றையும் யூனிலிவர் அளிக்கிறது.

 

22வது இடம்

22வது இடம்

ஜேபி மார்கன் சேஸ் & கோ

வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான ஜேபி மார்கன் சேஸ் & கோ கடந்த 8 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் சாதனை முடிவுகளை மட்டுமே அளித்து வந்துள்ளது, இங்கு ஊழியர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகிறனர். இதற்கு முக்கியக் காரணம் சம்பளம், குழந்தைகள் நலச் சேவைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பயணம் & வங்கி சேவைகளில் சலுகை.

 

21வது இடம்

21வது இடம்

ஷெல்

எண்ணெய் நிறுவனமான ஷெல் மூன்று வருட சரிவுக்குப் பிறகு சென்ற டிசம்பர் மாதம் இரட்டிப்பு லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 6,000 நபர்கள் உலகம் முழுவதில் இருந்தும் 92,000 நபர்கள் என ஊழியர்கள் எண்ணிக்கையுடன் இயங்கி வருகிறது.

 

20வது இடம்

20வது இடம்

கோல்டுமேன் சாச்ஸ்

கவர்ச்சிகரமான முதலீட்டு வங்கியாகக் கோல்டுமேன் சாச்ஸ் இந்தியாவில் 9,000 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களை ஊக்குவிக்க வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.

 

19வது இடம்

19வது இடம்

PwC

சத்யம், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடிகளுக்குத் துணை போனதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் உலகின் மிக முக்கியமான கணக்கியல் நிறுவனத்தில் ஒன்றாக PwC உள்ளது.

 

 18வது இடம்

18வது இடம்

மேக் மை டிரிப்

மேக் மை டிரிப் நிறுவனம் அதன் போட்டி நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு இணைந்த நிலையில் இந்தியாவின் 75 சதவீத ஆன்லைன் பயணச் சந்தையினைத் தன்வசம் வைத்துள்ளது. இங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச மேற்படிப்பு மற்றும் ஐரோப், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆய்வு பயணங்கள் போன்றவற்றையும் ஏற்பாடு செய்து அளிக்கிறது.

 

17வது இடம்

17வது இடம்

ஜிஈ

ஜிஈ நிறுவனம் அதிகப்படியாக விமானப் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 2,95,000 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கு 8 வகையானது தலைமை திட்டங்களை அளித்துப் பயிற்சி அளிக்கிறது. நிறுவனத்தின் 25 சதவீத மூத்த நிர்வாகிகள் ஜிஈ லீடர்ஷிப் திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர்.

 

16வது இடம்

16வது இடம்

ஓலா

மொபைல் செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஃபுட் பாண்டா நிறுவனத்தினை அன்மையில் வாங்கியது மட்டும் இல்லாமல் ஆஸ்திராலியாவிலும் தனது டாக்ஸி சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்குப் பல கிளப்புகளில் இசை முதல் விளையாட்டு வரை என நடவடிக்கைகள் செய்ய உதவுகிறது.

 

15வது இடம்

15வது இடம்

டிபிஎஸ் வங்கி

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப் பெரிய சொத்துக்களை வைத்துள்ள வங்கி நிறுவனம் என்றால் அந்தப் பெருமை டிபிஎஸ் வங்கியைத் தான் சேரும். உலகம் முழுவதும் 24,000 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கு ஆன்லைனில் டாக்டர்களுடன் ஆரோக்கியம் சம்பந்தமாகக் கலந்தாலோசிக்க வசதி மற்றும் மீண்டும் வலி மற்றும் இதயப் பிரச்சினைகளுக்கான சுகாதார முகாம்களையும் நடத்துகிறது.

 

14வது இடம்

14வது இடம்

மார்கன் ஸ்டான்லி

நிதி சேவைகள் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி நடப்பு நிதி ஆண்டில் மிகப் பெரிய வருவாய் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 6,500 நபர்களுக்கு உலகம் முழுவதும் பணி வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில் இந்தியாவில் 3,000 நபர்களுக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர்.

 

13வது இடம்

13வது இடம்

எக்ஸ்பீடியா

ஆன்லைன் பயண நிறுவனம் எக்ஸ்பீடியா வரும் ஆண்டில் வீடு வாடகை சந்தையில் இறங்க மிகப் பெரிய அளவில் முதலீட்டினை செய்ய உள்ளது. 20,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் ஊழியர்களுக்கான செயல்திறன் ரேட்டிங் மற்றும் ஃபீடுபேக் முறையினை முழுமையாக நீக்கியுள்ளது.

 

 12வது இடம்

12வது இடம்

அடோப்

அடோப் நிறுவனம் அக்டோபட், போட்டோஷாப், பிரீமியர் போன்ற மென்பொருள்களுக்குப் பிரபலமானது. இந்தியாவில் இருபாலினருக்கும் சமமான சம்பளத்தினை அளித்து வருகிறது. உலகம் முழுவது 18,000 ஊழியர்கள் அடோபில் பணிபுரிந்து வருகின்றனர். 26 நாட்கள் மகப்பேறு விடுமுறை, 16 வாரம் பெற்றோர் விடுப்பு மற்றும் 20 நாட்கள் வரை இறுதிச் சடங்குகளுக்கான விடுப்பு போன்றவற்றை அடோப் அளிக்கிறது. ஊழியர்கள் உடலளவில், மனதளவில் பணிக்குத் தயாராகுவதற்கு ஏற்ற அளவில் விடுமுறையினை அளிப்பதில் அடோப் நிறுவனம் முதன்மை வகிக்கின்றது.

 

11வது இடம்

11வது இடம்

டெய்ம்லர் ஏஜி

அட்டோமொபைல் நிறுவனமான டெய்ம்லர் ஏஜி-க்கு சொந்தமானது தான் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டைம்லர் ட்ரக்ஸ். உலகம் முழுவதிலும் இந்த நிறுவனத்தில் 2,89,321 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

 

 10வது இடம்

10வது இடம்

ஓயோ

ஹாஸ்பிட்டலிட்டி நிறுவனமான ஓயோ ரூம்ஸ் நாடு முழுவதிலும் குறைந்த விலையில் பட்ஜெட் ஹோட்டெல் சேவையினை வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 2,700 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறனர். 2011-ம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் குர்காமை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது.

 

 9வது இடம்

9வது இடம்

எர்ன்ஸ்ட் அண்ட் யங்

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கணக்கியல் நிறுவனமான இது உலகின் டாப் 4 கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு உலகம் முழுவதும் 2,50,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

 

8வது இடம்

8வது இடம்

கேபிஎம்ஜி இந்தியா

கேபிஎம்ஜி இந்தியாவும் ஒரு நிர்வாகக் கன்சல்டிங் நிறுவனம் ஆகும். ரிஸ்க் மேனேஜ்மெண்ட் மற்றும் பிற ஆடிட்டிங் சேவையில் இந்தியாவின் முதன்மையான நிறுவனம் ஆக உள்ளது. 1,97,263 ஊழியர்கள் இங்குப் பணிபுரிகின்றனர்.

 

 7வது இடம்

7வது இடம்

ஆல்பாபெட்

கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட். இணையதள விளம்பரத்தில் முக்கியமான நிறுவனமாக இது உள்ளது. இந்தியாவில் அன்மையில் டேஜ் செயலியை அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் இலவச வைஃபை சேவை அளிக்கும் திட்டத்தினை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் 80,110 ஊழியர்களில் பணிபுரியும் நிலையில் தேர்முகத் தேர்வில் முகவும் கடினமாம் கேள்விகள் எல்லாம் கேட்கப்படும்.

 

6வது இடம்

6வது இடம்

மெக்கின்சே & கம்பெனி

மெக்கின்சே & கம்பெனி சர்வதேச அளவிலான நிர்வாகக் கன்சல்டிங் நிறுவனம் ஆகும். பொதுத் துறை, தனியார் துறை நிறுவனங்கள் பல முடிவுகளை எடுக்க இந்த நிறுவனம் சேவை அளித்து வருகிறது. 1926-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 25,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, விமான ஓட்ட லைசன்ஸ் பெற அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடுதலாக 5 முதல் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

 

5வது இடம்

5வது இடம்

ஏபி இன்பீவ்

ஏபி இன்பீவ் இந்தியா நிறுவனம் 500 பீர் பிராண்டுகளை 150 நாடுகளில் விற்பனை செய்துவருகிறது. 2,00,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 7 படிகளில் நேர்முகத் தேர்வு நடக்கும். கடைசிப் படியில் உங்களை நேர்முகம் செய்தவர்களில் யாரை எல்லாம் பணிக்கு எடுக்கலாம் என்றும் கேள்வி கேட்கப்படும்.

 

4வது இடம்

4வது இடம்

அமேசான்

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் மற்றும் இணையதள வணிக நிறுவனமான அமேசான் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்ற பெயரினை பெற்றுள்ளது. அமேசானில் உலகம் முழுவதும் 5,66,000 நபர்கள் பணிபுரிகின்றனர். இ-காம்ர்ஸ், அலெக்ஸா, எக்கோ ஸ்பீக்கர், அமேசான் பிரைம் வீடியோஸ் எனப் பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊழியர்கள் தங்களது துணைவிக்குப் பெற்றோர் கடமைக்கான விடுமுறை இல்லை என்றால் தனக்கு உள்ள விடுமுறையினை 6 வாரங்கள் வரை அவருக்கு அளிக்க அனுமதி அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கற்ப காலத்தில் தங்களது விருப்பான நேரத்தில் பணிபுரிய மற்றும் குறைவான வேலை நேரங்களில் மட்டும் பணிபுரிய எல்லாம் அனுமதி அளிக்கிறது.

 

 3வது இடம்

3வது இடம்

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்பதை விடப் பேடிஎம் என்றால் தான் அனைவருக்கும் இந்த நிறுவனத்தினைப் பற்றித் தெரியவரும், இந்திய வாலெட் நிறுவனமான இது வாட்ஸ் ஆஒ மற்றும் கூகுள் டேஜ் போன்ற செயலிகளிடம் பெரும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இங்கு 17,000 நபர்களுக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர். இங்குப் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படும் போது அவர்களுக்குப் பங்குகள் அளிக்கப்படும். அன்மையில் இந்தப் பங்குகளை விற்ற ஊழியர்கள் தற்போது லட்சாதிபதிகளாகவும், கோடீசுவரர்களாகவும் உள்ளனர்.

 

 2வது இடம்

2வது இடம்

பிளிப்கார்ட்

இந்தியாவின் மிகம் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் 8,000 ஊழியர்கள் தற்போது பணிபுரிந்து வரும் நிலையில் வரும் ஆண்டில் 800 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. புதிதாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஒருவர் வேலைக்குச் சேரும் போது அவர்களைப் புதையல் கண்டுபிடிப்பு விளையாட்டினை செய்ய வைத்து அலுவலகம் முழுவதும் என்ன இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவார்கள்.

 

1வது இடம்

1வது இடம்

டைரெக்ட்ஐ

டைரெக்ட்ஐ நிறுவனம் டொமைன் போர்ட்போலியோ ரெஸ்ஜிஸ்ட்ரி ராடிஸ், குரல் அழைப்பு செயலி ரிங்கோ, டிஜிட்டல் மீல் வவுச்சர் போன்ற தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதில் இருந்து 1,500 நபர்கள் பணிபுரிகின்றனர். இங்குப் பணிக்கு சேரும் போது ஒவ்வொரு ஊழியர்களுக்கு ஒரு கிண்டல் சாதனம் அளிக்கப்படும். பணிநேரத்தில் ஊழியர்களுக்கு எழும் மன உலைச்சலினை குறைக்க எக்ஸ்பாக்ஸ், ஃபூஸ்பால் மற்றும் டேபில் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை அவர்களது பணியிடத்தின் அருகிலேயே இருக்கும்படி அமைத்துள்ளனர்.

ஐடி ஊழ..." data-gal-src="http:///img/600x100/2018/03/it-1521790624.jpg">
செம வைரல்..!

செம வைரல்..!

<strong>ஐடி ஊழியர்களின் அட்டாரசிட்டி.. பேஸ்புக்கில் செம வைரல்..!</strong>ஐடி ஊழியர்களின் அட்டாரசிட்டி.. பேஸ்புக்கில் செம வைரல்..!

நெத்தியடி

நெத்தியடி

<strong>அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி.. வர்த்தக போர் ஆரம்பம்..!</strong>அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி.. வர்த்தக போர் ஆரம்பம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LinkedIn Top Companies 2018: Where India wants to work now

LinkedIn Top Companies 2018: Where India wants to work now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X