2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச காப்பீட்டுத் திட்டத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகை மற்றும் மத்திய மாநில அரசுகளின் பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இதற்கான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப மருத்துவக் காப்பீடு

பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான வருடாந்திர பிரீமியம் தொகை 2,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு வருடாந்திர காப்பீடு தொகையாக 5 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பங்கீடு

இந்த 2,000 ரூபாய் தொகையை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் அளவில் பங்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் சுமார் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும்.

 

முதல் வருடம்

இத்திட்டத்தை முதல் முறையாக நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்படும் காரணத்தால் இதற்கு 10,000 கோடி ரூபாய்த் தேவைப்படுவதாக மத்திய அரசு கணித்துள்ளது. இந்தத் தொகையும் 6,000 கோடி மத்திய அரசும், 4,000 கோடி மாநில அரசும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடைமுறை திட்டங்கள்

தற்போது சந்தையில் இருக்கும் திட்டங்களில் 5 லட்சத்திற்கான குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் தொகை 3,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உள்ளது. இத்திட்டத்தில் தற்போது இருக்கும் வியாதிகளுக்குக் காப்பீடு இல்லை.

ஆனால் அரசு திட்டத்தில் தற்போது இருக்கும் வியாதிகள் மற்றும் எதிர் வரும் வியாதிகள் என அனைத்திற்கும் காப்பீடு வழங்குகிறது. இதனால் இது சிறப்பான திட்டமாக இருக்கும்.

 

நிதி பிரச்சனை

இத்திட்டத்திற்கான நிதி திரட்டுவது கடினம் எனப் பல கருத்துக்கள் எழுந்த நிலையில், மோடி தலைமையிலான அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதிமாக தேசிய சுகாதார மிஷின் திட்டத்தித்திற்கு ஏப்ரல் 1, 2017 முதல் மார்ச் 31, 2020 வரையிலான காலத்திற்குச் சுமார் 85,217 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்கீடாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

கருவி

Ayushman Bharat-National Health Protection Mission என்னும் மத்திய அரசின் குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவச் சேவை கிடைக்கச் செய்யும் ஒரு முக்கியக் கருவியாக இயங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநோயாளிகள்

இத்திட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளுக்கு மட்டுமே அதிகளவில் பயன்படும் வகையில் இருக்கும் காரணத்தால் வெளிநோயாளிகளாக இருக்கும் மக்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லாத சிறிய அறுவை சிகிச்சை, மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவருக்கு அளிக்கப்படும் பார்வை கட்டணம் ஆகியவற்றையும் இனி வரும் காலத்தில் இதில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

அதிகரிப்பு

இத்திட்டத்திற்கான சேவைகள் அதிகரிக்கப்படும் போது அதற்கான பிரிமியம் தொகையும் அதிகரிக்கும் என்பதும் உண்மை.

மாநில அரசுகளுக்கு 2 சாய்ஸ் மட்டுமே

மாநில அரசுகளுக்கு 2 சாய்ஸ் மட்டுமே.. மோடி அரசு திட்டவட்டம்..!

பிட்காயின் மட்டும் தான் இருக்கும்..!

இனி ரூபாய், டாலர், பவுண்ட் எல்லாம் இருக்காது.. பிட்காயின் மட்டும் தான் இருக்கும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt Health insurance scheme premium at Rs 2,000 per family

Modi Govt Health insurance scheme premium at Rs 2,000 per family
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns