இளவட்டங்களுக்கு ஓர் நற்செய்தி.. பிளிப்கார்ட்டில் 700 வேலை வாய்ப்புகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிய அளவில் ஊழியர்களைப் பணிக்கு எடுக்காத நிலையில் தற்போது 700 நபர்களுக்கு வேலை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஐஐடி கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வு மூலமாக மாணவர்களைப் பணிக்கு எடுத்துவிட்டு அவர்களுக்குப் பணிக்கான உத்தரவு கடிதத்தினை அளிக்காமல் காலம் கடத்தி வந்ததால் சில ஐஐடி நிர்வாகங்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வளாக நேர்முகத் தேர்வுக்கு வர தடை விதித்தது ஸ்டார்ட்அப் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி இருந்தது.

வளாக நேர்முகத் தேர்வு
 

வளாக நேர்முகத் தேர்வு

பிளிகார்ட் அன்மையில் இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் கல்லூரியில் நடத்திய வளாக நேர்முகத் தேர்வில் 20 மாணவர்களைத் பணிக்கு தேர்வு செய்துள்ளதாக இது குறித்த விவரம் அறிந்த மனித வள மேம்பாட்டு ஆலோசனை வழங்குநர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவை நிறுவனத்தில் புகுத்தி சேவையினை மேம்படுத்துவதற்காகவே புதிதாகப் பணிக்கு ஆட்களை எடுக்க இருப்பதாகவும் அதனால் 5-ல் 4 வேலைவாய்ப்பானது தொழில்நுட்ப பணிகளாக உள்ளது என்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

பணியிடங்கள்

பணியிடங்கள்

டேட்டா சையின்டிஸ்ட், UI & UX வடிவமைப்பாளர்கள், மென் பொருள் வல்லுநர்கள், ஐடி கட்டுமானம், சர்வீஸ் டெலிவரி போன்ற பல பணிகளுக்குப் பிளிப்கார்டில் தற்போது காலியிடங்கள் உள்ளன.

சரிந்த ஊழியர்கள் எண்ணிக்கை

சரிந்த ஊழியர்கள் எண்ணிக்கை

2015-ம் ஆண்டுப் பிளிப்கார்ட்டில் 15,000 ஊழியர்கள் இருந்த நிலையில் 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் 8,000 ஆகக் குறைத்த பிறகு தற்போது புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கத் துவங்கியுள்ளனர்.

பிளிப்கார்ட்
 

பிளிப்கார்ட்

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 பில்லியன் டாலர் நிதி முதலீடாகக் கிடைத்துள்ளது. சிறப்பான முறையில் வணிகத்தினை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு போகத் தொழில்நுட்பத்தின் தேவை முக்கியமாக உள்ளது என்று தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி சென்ற வாரம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 பில்லியன் டாலர் நிதி முதலீடாகக் கிடைத்துள்ளது. சிறப்பான முறையில் வணிகத்தினை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு போகத் தொழில்நுட்பத்தின் தேவை முக்கியமாக உள்ளது என்று தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி சென்ற வாரம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart going to hire 700 new jobs up for grabs

Flipkart going to hire 700 new jobs up for grabs
Story first published: Friday, March 23, 2018, 17:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X