உணவுக்கு பில் கட்டாயம் என்பதை அடுத்து பணம் செலுத்த பிஓஎஸ் இயந்திரங்களை அளிக்கிறது ஐஆர்சிடிசி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியன் ரயில்வே கேட்டரிங் & சுற்றுலா கார்ப்ரேஷன் நிறுவனமான ஐஆர்சிடிசி உணவு வழங்கும் போது கண்டிப்பாகப் பில் அளிக்க வேண்டும் என்பதை நடைமுறை படுத்த பிஓஎஸ் இயந்திரங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாகவும் உணவுக்கு அதிக விலை பெறுவது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனை முயற்சியாகப் பெங்களூருவில் இருந்து டெல்லி வரை செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளனர்.

இந்திய ரயில்வேஸ்

இந்திய ரயில்வேஸ் நிர்வாகம் ஆனது 26 ரயில்களுக்கு 100 பிஓஎஸ் இயந்திரங்களை அடுத்துக் கட்டமாக அளிக்க உள்ளது. இந்த நடைமுறையானது ‘பில் இல்லையா? உணவு இலவசம்' என்ற கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து எடுத்து இருக்கும் நடவடிக்கையாகும்.

கண்காணிப்பு

ரயில்களில் கேட்டரிங் சேவை வழங்குபவர்களைக் கண்காணிக்க ஐஆர்சிட்சி நிர்வாகம் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அவர்களுடன் டாப் கணினி அளிக்கப்பட்டு அதன் மூலமாகப் பயணிகளின் கருத்துக்களைக் கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் உத்தரவு

ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயால் இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகங்களுக்கு அனைத்து இடங்களிலும் பில் இல்லை என்றால் உணவு இலவசம் என்ற திட்டத்தினை மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு அறிமுகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

புகார்கள்

ரயில் பயணிகள் கேட்டரிங் சேவை வழங்குநர்கள் அதிகக் கட்டணத்தினை உணவுக்குப் பெறுகிறார்கள் என்று தொடர்ந்து அமைச்சகத்திற்குப் புகார் அளித்து வந்ததன் பேரில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IRCTC Introduces POS Machines on Trains to Implement Mandatory Billing of Food

IRCTC Introduces POS Machines on Trains to Implement Mandatory Billing of Food
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns