வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? முழு விவரங்களுக்கு இதைப் படிங்க..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் இந்தியா உட்பட உலகின் பிற நாட்டில் உள்ள அலுவலகங்களுக்குச் சேர்த்து ஆட்களைப் பணிக்கு எடுக்க இருக்கின்றது.

இலவச தகவல் பரிமாற்ற மற்றும் ஐபி குரல் அழைப்பு சேவை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் திறமை வாய்ந்த, கடின உழைப்பினை அளிக்கக் கூடிய நபர்களை நிர்வாகிகள், மொபைல் டெவலப்பர்கள் பணிக்கு எடுக்க இருக்கின்றது. யாருக்கெல்லாம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளதோ அவர்கள் அவர்களது திறனுக்கு எற்றப் பணியா என்று கண்டறிந்து தங்கள் விவரங்களை அளித்து விண்ணப்பிக்கக் கூடிய இணைப்பினையும் இங்கு வழங்கியுள்ளோம்.

இந்திய பணி வாய்ப்பு

ஏதேனும் ஒரு பலகலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு 6 வருடம் வரை பொதுத் தொடர்பு துறை போன்ற பணிகளில் 6 வருடம் வரை அனுபவத்துடன், நல்ல ஆங்கிலத் திறன் உள்ளவர்கள் வாட்ஸ்ஆப் இந்திய கிளையில் உள்ள தொடர்புத்துறை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு ஊடகத் துறையில் இருந்து அல்லது பொது விவகார துறையில் இருந்து வேறு வேலைக்கு மாற விரும்புபவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கிளிக் செய்க.

மொபைல் டெவலப்பர் - லண்டன்

பிஎஸ் கணினி அறிவியல் அல்லது அதற்கு இணையான படிப்பினை முடித்துள்ளவர்கள் ஜாவா, சி, சி# அல்லது சி/சி++ பிரோகிராமிங் மற்றும் பிழைத்திருத்தும் திறன் அல்லது ஆண்டிராய்டு, ஐஓஎஸ் போன்ற பணிகளில் அனுபவத்துடன் இருந்தால் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் பணீடம் லண்டன் ஆகும். விண்ணப்பிக்கக் கிளிக் செய்க.

தயாரிப்பு நிர்வாகி - அமெரிக்கா

தயாரிப்பு நிர்வாகி அல்லது வடிவமைப்புத் துறையில் அனுபவம் அல்லது 6 வருடம் வரை மொபைல் செயலிகள் வடிவமைப்புத் தொழில்நுட்பத்தில் முன் அனுபவம் உள்ளவர்கள் அல்லது பயனர்களுக்கு ஏற்ற வடிவமைப்பை உருவாக்குவதில் அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மொபைல் தயாரிப்புகள், தொழில்நுட்பங்களில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கக் கிளிக் செய்க.

தயாரிப்பு வடிவமைப்பாளர் - அமெரிக்கா

மொபைல் செயலி வடிவமைத்தல், கட்டமைத்தல் போன்றவற்றில் 4 வருடத்திற்கும் அதிகமாக அனுபவம் உள்ளவர்கள், மற்றும் விஷூவல் டிசை, மோஷன் டிசை போன்ற்றவற்றில் இரு வருடம் அனுபவம் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கக் கிளிக் செய்க.

பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர் - அமெரிக்கா

எம்பிஏ அல்லது இஞ்சினியரிங் முடித்துவிட்டு 10 வருடங்களுக்கும் அதிகமாக ஐடி நிறுவனம் ஒன்றில் அனுபவம் மற்றும் மூன்றாம் நபர்களுடன் உற்பத்தி குறித்து விவாதித்து ஒப்பந்தம் போட மற்றும் சர்வதேச அளவில் சேவையினை அறிமுகம் செய்ய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வு நிர்வாகி - அமெரிக்கா

ஆய்வு மற்றும் கலந்துரையாடல் மூலம் ஆய்வு செய்து அறிக்கைகள் தயாரிப்பதில் 6 வருடத்திற்கும் அதிகமாக அனுபவம் உள்ளவர்கள். ஒரு நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச ஆராய்ச்சி அனுபவம் அல்லது அனுபவம் உள்ளவர்கள், சமூகத் தளங்கள் மற்றும் மொபைல் சூழலமைப்புகள் பற்றிய புரிதலுடனும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hiring in WhatsApp: Check details for manager, mobile developer and other posts

Hiring in WhatsApp: Check details for manager, mobile developer and other posts
Story first published: Monday, March 26, 2018, 15:07 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns