ஏர்டெல் - ஸ்டார் இந்தியா இடையே என்ன பிரச்சனை.. எதற்காக இந்த சமுகவலைதள சண்டை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

ஸ்டார் விஜய் டிவியின் பேஸ்புக் பக்கத்தில் நேற்று "ஏர்டெல் டிடிஎச் வாடிக்கையாளர்களே.. உங்கள் டைம் இப்போது மாறிவிட்டது, இதுவரை 200 ரூபாய்க்கு எச்டி சேனல்களை நீங்கள் பார்த்து வந்தீர்கள், இனி 1,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு பண்ணவேண்டும், ஆனால் கவலை படாதீங்க.. இன்னும் 200 ரூபாய்க்கே எச்டி சேனல்களைப் பெற டாடா ஸ்கை, சன் டிடிஎச், ஹாத்வே, வீடியோகான் போன்ற சேவை வழங்குநர்களுக்கு மாறுங்கள் என்று விடியோவை வெளியிட்டது பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவானது விஜய் டிவி மட்டும் இல்லாமல் ஸ்டார் சேனல்களின் அனைத்து பேஸ்புக் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

விலை போர்

ஸ்டாரின் வீடியோவை பார்க்கும் போது டிஷ் டிவி சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இடையில் விலை போர் ஒன்று உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ஸ்டார், ஏர்டெல் இடையிலான இந்தப் பிரச்சனைக்கு வர இருக்கும் விவோ ஐபிஎல் 2018 விளையாட்டு போட்டி தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம்

ஏர்டெல் - ஸ்டார் சேனல்களுக்கு இடையிலான ஒப்பந்தம் வர இருக்கும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஸ்டார் நிறுவன சேனல் கட்டணங்களை உயர்த்தி இருப்பதால் நீட்டிப்பு பணிகளைச் செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் சேனல் ஒளிபரப்பப் படாது என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. எனவே ஸ்டார் அதற்குப் பேஸ்புக் மூலமாகப் பதில் அடி அளித்துள்ளது.

ஏர்டெல் கண்டனம்

ஸ்டார் இந்தியாவின் பேஸ்புக் பதிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம் ஸ்டார் நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தவறான பாதையில் வழிநடத்துகிறது. ஸ்டார் நிறுவனம் 2018-2022-ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புச் செய்ய 16,350 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதால் அவர்களது சேனல்களின் கட்டணத்தினை அதிகளவில் உயர்த்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஏர்டெல் விளக்கம்

மேலும் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ளவர்களுக்கு ஸ்டார் எஸ்டி சேனல்கள் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சேவையில் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவற்றுக்குக் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்றும் அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி அல்லது தமிழ் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

ஸ்டார் எச்டி சேனல்கள் கிடைக்குமா? கிடைக்காதா?

குறிப்பிட்ட சில ரீசார்ஜ் பேக்குகளுக்கு மட்டும் ஸ்டார் எச்டி சேனல்கள் கிடைக்கும் என்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தினை மட்டும் பெற்று சேனலை ஒளிபரப்புச் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? முழு விவரங்களுக்கு இதைப் படிங்க..!

ஏர்ஏசியா

ஏர்ஏசியா வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.849-க்கு விமான பயணம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IPL 2018: Star India, Airtel Digital TV spar over pricing War on DTH platform

IPL 2018: Star India, Airtel Digital TV spar over pricing War on DTH platform
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns