இந்தியாவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி என்பதையே மறந்துவிடுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சி இன்னும் ஒரு வருடத்தில் முடிவடைய உள்ள நிலையில் அவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பது வேலை வாய்ப்பு உருவாக்குவதாகும். ஆட்சிக்கும் வரும் போது ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவோம் என்று கூறி இருந்தும் காங்கிரஸ் காலத்தில் இருந்ததை விட ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புகள் குறைந்து வந்துள்ளதாக கேஎல்ஈஎம்எஸ் இந்தியா அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி என்பதையே மறந்துவிடுங்கள் 2015-2016 நிதி ஆண்டில் 0.1 சதவீதமும், 2014-2015-ல் 0.2 சதவீதமும் வேலை வாய்ப்புகள் சரிந்துள்ளதாகவும் கேஎல்ஈஎம்எஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

கேஎல்ஈஎம்எஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கையானது இந்திய ரிசர்வ் வங்கியின் உதவியுடன் இந்திய பொருளாதாரச் செயல் திறன் மற்றும் வளர்ச்சி தரவுகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

ஆய்வறிக்கையானது விவசாயம், சுரங்கம், உணவுப் பொருட்கள் உற்பத்தி, ஜவுளி, லெதர் பொருட்கள், காகிதம், போக்குவரத்துச் சாதனங்கள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் 2014-2015 மற்றும் 2015-2016 நிதி ஆண்டில் உருவாக்கியுள்ள வேலைவாய்ப்பு அளவினை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.

 விவசாயத் துறை

விவசாயத் துறை

விவசாயம் அல்லது அதனைச் சார்ந்த துறையில் பணிபுரிந்து வந்த 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கட்டுமானம், சாலைப் போடுதல் மற்றும் பிற பணிகளுக்கு மாறியுள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கட்டுமான துறையின் வளர்ச்சியும் 2006-2007 முதல் தொடர்ந்து சரிந்து வருவது தெரியவந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி

பாரதிய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பல வகையில் ஊக்கும் அளித்தும் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி 2013-2014 நிதி ஆண்டில் ஆட்சிக்கு இருந்த போது 4.9 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 2015-2016 நிதி அண்டில் 5 சதவீதமாக உயர்ந்து இருந்ததாக அரசு எடுத்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

பொய்

பொய்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக "பொய் கூறி வருகிறனர்" என்று சென்ற ஆண்டுக் கூறிய பிரதமர் மோடிக்கு இந்த அறிக்கையானது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

31 கோடி மக்கள் வேலை வாய்ப்பு இல்லை

31 கோடி மக்கள் வேலை வாய்ப்பு இல்லை

இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2018 பிப்ரவரி மாதம் வரை 31 கோடி மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடித்துவிட்டு வர இருக்கும் பட்டதாரிகளும் சேரும் போது அவர்களின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

ஜிடிபி

ஜிடிபி

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 2014-2015 நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி 7.4 சதவீதமாகவும், 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாகவும் இருந்தது ஆகும். ஜிடிபி வளர்ச்சி இருந்தும் வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவது குறைந்தது மட்டும் இல்லாமல் இருக்கும் வேலை வாய்ப்பினையும் பலர் இழைந்துள்ளனர்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி

ஜிடிபி உயருகிறது என்று வேலை வாய்ப்புகள் சரிந்த நிலையிலும் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியினை அறிமுகம் செய்தது. இந்தக் காலகட்டத்திலும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு பெரும் அளவில் சரிந்தது.

பக்கோடா விற்பதும் வேலையே

பக்கோடா விற்பதும் வேலையே

ஜனவரி மாதம் பக்கோடா விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதித்தால் அவரும் ஒரு வேலை செய்யும் நபரே என்றும் மோடி கூறியது அரசியல் வட்டாரத்தில் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. ஆனால் இதனைப் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஆதரித்தார்கள், எதிர்க்கட்சிகள் இதைப் பெரிய அளவில் எதிர்க்கவும் செய்தது.

 சிதம்பரம்

சிதம்பரம்

காங்கிரஸ் விமர்சனத்திற்கு ஏழைகளின் விரோதி என்று பாஜக சமுக வலைத்தளங்களில் இடுக்கையிட முன்னால் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பக்கோடா விற்பது வேலை அல்ல, அது ஏழையாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஏற்படுத்திக்கொள்ளும் சுயதொழில் என்று கூறினார்.

வேலை, சுய தொழில்

வேலை, சுய தொழில்

கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கமால் சுயதொழில் செய்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தது போன்று பெருமை பேசிவருகிறது. சுய தொழிலுக்கும், வேலைக்கும் வித்தியாசம் தெரியாத அரசாக இருக்கிறது, முத்ரா வங்கிகள் மற்றும் சிறு கடன் திட்டங்கள் மூலமாக எவ்வளவு வேலை வாய்ப்பினை பாஜக உருவாக்கியுள்ளது என்றும் தெரிவிக்க வேண்டும் என்று ப சிதம்பரம் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்று அறிக்கைகள் வெளிவந்துக்கொண்டு இருக்கின்றன. மோடி அரசு இதனை எப்படி சமாளிக்கப்போகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Forget job growth, employment in India fell under Modi govt

Forget job growth, employment in India fell under Modi govt
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X