ஐரோப்பிய சந்தையில் முன்னோடியாக இருக்கும் 2 சக்கர வாகன நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு தான் வந்தது.
இதன் வேகம், டிசைன் மற்றும் வாகனத்தின் திறன் மூலம் அதிகம் ஈர்க்கப்பட்ட இந்திய இளைஞர்கள் கேடிஎம் நிறுவன வாகனங்களுக்குப் பேர் ஆதரவும் அளித்தனர்.
இதன் காரணமாக 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் கேடிஎம் இடம்பெற்றுள்ளது. 1.5 லட்சம் கேடிஎம் வாகன உரிமையாளர்கள்ஷ 400க்கும் அதிகமான ஷோரூம்கள் என இந்தப் பிராண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது.
2012ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த கேடிஎம் இதுவரை 30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.