கல்லூரியை விட்டு ஓடிவந்த அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் மண்டையில் படிப்பு ஏறவில்லை என்றால் ஆடு தான் மேய்க்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவதை நாம் பார்த்து இருப்போம், ஏன் அனுபவம் கூடப் பெற்று இருப்போம். ஆனால் கல்லூரி படிப்பு முடிக்காமல் பலர் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் உலகக் கோடீஸ்வரர்கள் மட்டும் இல்லாமல் இந்திய கோடீஸ்வரர்களும் உள்ளனர். இதற்காக நான் உங்களைப் படிக்க வேண்டாம், பட்டம் பெற வேண்டாம் என்று கூறவில்லை. அவை தான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பதில்லை என்று மட்டுமே சொல்கிறேன். சரி, வாங்க யாரெல்லாம் கல்லூரி படிப்பை முடிக்காமல் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளார்கள் என்று இங்குப் பார்க்கலாம்.

பில் கேட்ஸ்

மைக்ரோசாட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் 1973-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டு இருக்கும் போது தனது நண்பரான பால் ஆலன் உடன் சேர்ந்து மைரோசாப்ட் நிறுவனத்தினைத் துவங்கினார். பால் ஆலனும் கல்லூரி படிப்பை விட்டுப் பாதியில் நின்றவர் தான். தற்போது பில்கேட்ஸ் 90.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாம் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் கணினி அறிவியல் படிப்புகளைப் படிக்கச் சென்று ஒரு வருடத்தில் நின்று விட்டார். ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான சமுக வலைத்தளம் ஒன்றை உருவாக்கிய இவருக்கு அது பிற கல்லூரி மாணவர்களிடமும் பிரபலமாக அதனைத் தொடர்ந்து வணிக நிறுவனமாக்கக் கல்லூரி படிப்பில் இருந்து வெளியேறினார். தற்போது 64 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 7-ம் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆக மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

மைக்கேல் டெல்

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிக்கச் சென்ற மைக்கேல் டெல் 19 வயது ஆகும் போது கல்லூரி படிப்பை தொடராமல் டெல் டெக்னாலஜிஸ்-ஐ நிறுவினார். இன்று இவரது சொத்து மதிப்பு 20.9 பில்லியன் டாலர். உலகின் 42-ம் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆவார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் போர்ட்லாந்தில் உள்ள ரீட் கல்லூரியில் சேர்ந்த ஒரு செமஸ்ட்டரில் குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலால் தொடர்ந்து படிக்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ஆப்பிள், நேக்ஸ் கம்ப்யூட்டர், பிக்சர் உள்ளிட்ட நிறுவனங்களைத் துவங்கினார். 2011 அக்டோபர் 5-ம் தேதி 56 வயது ஆன போது ஸ்டீவ் ஜாப்ஸ் கலாமானார்.

டிராவிஸ் கலானிக்

உபர் நிறுவனத்தின் இணை நிறுவனரான டிராவிஸ் கலானிக் காலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற ஒரு மாதம் இருக்கும் போது தேடு பொறி நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதற்காகப் படிப்பை விட்டுவிட்டார். தற்போது உபர் நிறுவனத்தினை நடத்தி வரும் டிராவிஸ் கலானிக் சொத்து மதிப்பு 4.17 பில்லியன் டாலர் ஆகும்.

லாரி எலிசன்

1963-ம் ஆண்டு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த லாரி எலிசன் கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திவிட்டு ஒரு நிறுவனத்தினைத் துவங்கினார் பின்னர் 1997-ம் ஆண்டு அது ஆரக்கிள் என்று பெயர்பெற்றது. லாரி எலிசன் சொத்து மதிப்பு 50.8 பில்லியன் டாலர் ஆகும்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆன முகேஷ் அமாப்னியும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவரே ஆவார். காலிபோர்னியாவின் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும் போது தனது தந்தையின் பிஸ்னஸை கவனிக்க வந்துவிட்டார். தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 39.1 பில்லியன் டாலர் ஆகும்.

அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி தனது தந்தை இறந்த உடன் காலிபோர்னியாவின் 1966-ம் ஆண்டு ஸாடான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறுத்திவிட்டு வணிகத்தினைப் பார்க்க சென்றுவிட்டார். எனினும் அதனை 1999-ம் ஆண்டு அந்தப் பட்டத்தினைப் படித்து மீண்டும் பெற்றார். இந்தியாவின் 4-ம் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன இவரது சொத்து மதிப்பு 16.4 பில்லியன் டார்கள் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

College dropouts who became billionaires in World Wide

College dropouts who became billionaires in World Wide
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns