கார்ப்பரேட் வரி என்றால் என்ன..? இந்தியாவில் இதன் முக்கியதுவம் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கூட்டமைப்பாய் வாழத் தொடங்கிய மனிதனின் பொதுத் தேவைகளைக் கவனிக்க அரசாங்கம் என்ற அமைப்பு உருவானபோது அந்த அரசாங்கத்தின் அடிப்படையாக உருவானதே வரி வசூலிக்கும் முறை.

 

நவீன உலகத்தில் வரி இன்றி அரசாங்கம் என்ற அமைப்பு இயங்காது. வரி, அரசாங்கத்தின் வருமானத்திற்கு ஒரு கட்டாயப் பங்களிப்பு. தனது குடிமக்களின் வருமானம் மற்றும் வணிக இலாபங்களில் இருந்து, மற்றும் சரக்குகள், சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளில் இருந்து வரி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வசூலிக்கப்படுகின்றது. Tax என்ற ஆங்கிலச் சொல் Taxo என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்குக் கட்டணம் என்று அர்த்தம். வரி செலுத்த தவறுவது அல்லது ஏமாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும். நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக அதை அரசாங்கம் செலவிடுகின்றது.

கார்ப்பரேட் வரி:

கார்ப்பரேட் வரி:

கார்ப்பரேட் வரி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிறுவனத்தின் நிகர வருவாயில் இருந்து விதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வரிகள் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். ஒரு நிறுவனத்தின் விற்பனை, பொது மற்றும் நிர்வாகச் செலவுகள், மற்றும் விற்பனை பொருட்களின் விலை (Cost Of Goods Sold or COGS) ஆகியவை நீங்கலாக வரும் வருமானத்திலிருந்து கார்ப்பரேட் வரி விதிக்கப்படுகிறது. இந்திய நிறுவனச் சட்டம் 1956-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்தியாவில் கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும்.

கார்ப்பரேட் என்றால் என்ன?

கார்ப்பரேட் என்றால் என்ன?

கார்ப்பரேஷன் என்பது ஒரு சட்டத்திற்குட்பட்ட அமைப்பு; இது அதன் உரிமையாளர்களிடமிருந்து தனித்துவமானது. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களோ அல்லது நிறுவனங்களோ, ஊழியர்களோ சேர்ந்து ஒரே நபராக (legal person) செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதாவது இவை தனி நபர் செய்யக் கூடிய ஒப்பந்தங்கள், கடன்கள், வழக்குகள் தொடர்வது, ஊழியர்களைச் சேர்ப்பது, வரி செலுத்துவது போன்ற சகல உரிமைகளையும் பெற்றிருக்கும். எனவே இது ஒரு சட்ட நபராகக் குறிப்பிடப்படுகிறது.

நிறுவனத்தால் வரும் எந்த வருமானமும் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் பங்கீட்டில் இருந்து தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. வரி கணக்கீடு நோக்கத்திற்காக இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை:

 

1. உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனம்
 

1. உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனம்

A)இந்தியாவில் உருவான ஒரு நிறுவனம், அல்லது B) வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை இந்தியாவில் அமைந்திருக்குமானால், அல்லது C) இந்திய நிறுவனச் சட்டம் 1956-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனம் உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனமாகக் கருதப்படுகின்றது.

 2. வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனம்:

2. வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனம்:

இந்தியாவில் தொடங்கப்படாத அல்லது கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை இந்தியாவில் அமையாத நிறுவனங்கள் வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எனப்படுகிறது.

 உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள்:

உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள்:

உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரி வருமான வரித் துறையின் 2017-2018 மற்றும் 2018-2019 அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி 30% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டு மதிப்பீட்டுப்படி, ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டான 2014-2015 ஆம் ஆண்டில் 5 கோடிக்கு மேல் இல்லை எனில் வரி விகிதம் 29% ஆக இருக்கும்.

2018-2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி, ஒரு நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டான 2015-2016 ஆம் ஆண்டில் 50 கோடிக்கு மேல் இல்லை எனில் வரி விகிதம் 25% ஆக இருக்கும். இத்துடன் கூடுதலாக, உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி (surcharge), கல்வி வரி, மேல் நிலை மற்றும் உயர்நிலை கல்வி வரி (cess) போன்ற வரிகள் விதிக்கப்படுகின்றன.

1. கூடுதல் வரி: உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் 1 கோடிக்கு அதிகமும் 10 கோடிக்கு மிகாமலும் இருக்கும்போது 7 சதவிகிதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல் செல்லும்போது 12 சதவீதமுமாகக் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் இவை விதிவிலக்குக்கு உட்பட்டது. அவை:
A) 1 கோடி முதல் 10 கோடி வரையிலான வருமானம் உள்ள நிறுவனத்தின் வருமான வரி மற்றும் கூடுதல் வரி 1 கோடியைத் தாண்டுமானால் கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது.
B) 10 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனத்தின் வருமான வரி மற்றும் கூடுதல் வரி 10 கோடியைத் தாண்டுமானால் கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது.
2. கல்வி வரி: விதிவிலக்குத் தேவைப்படாத சூழலில் கூடுதலாகக் கல்வி வரியாக 2 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.
3. விதிவிலக்குத் தேவைப்படாத சூழலில் வருமான வரி மற்றும் கூடுதல் வரியுடன் உயர்கல்வி வரியாக 1 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.

 

 

வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள்:

வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள்:

வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்பட்ட எந்த ஒரு ராயல்டி அல்லது கட்டணம் 50 சதவிகிதம் என்ற விகிதத்தில் வரிக்கு உட்பட்டது மற்றும் வேறு எந்த வருமானத்திற்கும் 40 சதவிகிதம் என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக, வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கூடுதல் வரி (surcharge), கல்வி வரி, உயர்கல்வி வரி (cess) போன்ற வரிகள் விதிக்கப்படுகின்றன.

1. வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் 1 கோடிக்கு அதிகமும் 10 கோடிக்கு மிகாமலும் இருக்கும்போது 2 சதவிகிதமும், 10 கோடி ரூபாய்க்கு மேல் செல்லும்போது 5 சதவீதமுமாகக் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் இவை விதிவிலக்குக்கு உட்பட்டது. அவை:
a) 1 கோடி முதல் 10 கோடி வரையிலான வருமானம் உள்ள நிறுவனத்தின் வருமான வரி மற்றும் கூடுதல் வரி 1 கோடியைத் தாண்டுமானால் கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது.
b) 10 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனத்தின் வருமான வரி மற்றும் கூடுதல் வரி 10 கோடியைத் தாண்டுமானால் கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது.
2. கல்வி வரி: விதிவிலக்குத் தேவைப்படாத சூழலில் வருமான வரி மற்றும் கூடுதல் வரியுடன் கூடுதலாகக் கல்வி வரியாக மேலும் 2 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.
3. விதிவிலக்குத் தேவைப்படாத சூழலில் வருமான வரி மற்றும் கூடுதல் வரியுடன் உயர்கல்வி வரியாக மேலும் 1 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corporate Tax in India

Corporate Tax in India
Story first published: Monday, April 9, 2018, 18:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X