உங்களுக்கு மயக்கம் வந்தா நாங்க பொறுப்பு இல்லப்பு..! ஆத்தாடி Royal Family ஆமுல்ல..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள அரச குடும்பங்களுள் (Royal Family) மிகவும் செல்வச் செழிப்பு மிக்க குடும்பங்களை வரிசைப்படுத்தினால், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் போன்றோர் எல்லாம் அவர்களுக்குப் பின்னால் நிற்கவேண்டும்.

 

பல ஆயிரம் கோடி டாலர்களை இந்த அரச குடும்பத்தினர் சொத்துக்களாகச் சேர்த்து வைத்துள்ளனர். உங்களின் ஏக்கப் பெருமூச்சில் கோடை வெயிலின் சூடு சற்று அதிகமானாலும் பரவாயில்லை, வாங்க...

பெரும் பணக்கார அரச குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்வோம். டாப் 10 பணக்கார அரச குடும்பங்களை இறங்கு வரிசையில் அறிமுகப்படுத்துவதில் சற்றுப் பொறாமையுடன் நாங்களும் பெருமையடைகிறோம்.

 பட்டியலில் இவர்களுக்கு இடமில்லை

பட்டியலில் இவர்களுக்கு இடமில்லை

இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கு, முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடிக்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இக்குடும்பத்தினரின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலர்களாகும். மொனாக்கோவைச் சேர்ந்த கிரிமல்தி (Grimaldi) குடும்பம் மற்றும் ஆகாகான் டெவலப்மென்ட் நெட்வொர்க்கின் (AKDN) தலைவரான ஆகா கான் குடும்பத்தின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் அளவுக்குத்தான் உள்ளது. பட்டியலில் உள்ள அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்போடு ஒப்பிடுகையில் இவர்கள் எல்லாம் ஒதுங்கி நிற்பதைத் தவிர வேறு வழியில்லை.

10. பஹ்ரைன் அரச குடும்பம். (சொத்து மதிப்பு – 4 பில்லியன் டாலர்)

10. பஹ்ரைன் அரச குடும்பம். (சொத்து மதிப்பு – 4 பில்லியன் டாலர்)

பஹ்ரைன் அரச குடும்பத்தினர், செல்வ மதிப்பீட்டின் அடிப்படையில் பத்தாவது இடத்தில் இருக்கின்றனர். 1766 ஆம் ஆண்டு முதல் பஹ்ரனை ஆளும் அரசு குடும்பத்தினராக கலீஃபா குடும்பத்தினர் உள்ளனர். தற்போதைய அரசராக உள்ள ஹமாத் பின் இஷா அல் கலீஃபா, இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு நெருங்கிய நண்பர். 2002 ஆம் ஆண்டு இவர் தன்னை பஹ்ரைனின் அரசராக அறிவித்துக் கொண்டார்.

முதல் எண்ணெய் கிணறு
 

முதல் எண்ணெய் கிணறு

பஹ்ரைன் நாட்டின் முதல் எண்ணெய் கிணறு 1932 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கியது. அன்று முதல் பஹ்ரைன் அரச குடும்பத்துக்கு டாலர்கள் அரண்மனைக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது. அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பில்லியன் கணக்கில் உயரத் தொடங்கியது.

குடும்பத்தினரின் சொத்துக்களைத் தவிர அரசருக்கென்று தனியாக 4 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்படுகிறது.

உண்மையில் இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம். ஃபினான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, பஹ்ரைன் அரச குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தும் கலீஃபாவின் தனியார் நிறுவனமான பிரிமியர் குழுமத்தின் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது.

9. லீச்டென்ஸ்டைன் அரச குடும்பம். (சொத்து மதிப்பு – 12 பில்லியன் டாலர்)

9. லீச்டென்ஸ்டைன் அரச குடும்பம். (சொத்து மதிப்பு – 12 பில்லியன் டாலர்)

நமது பட்டியலில் ஒன்பதாவது இடம்பிடித்துள்ள லீச்டென்ஸ்டைன் அரச குடும்பத்தினர் ஆஸ்திரியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், தற்போது லீச்டென்ஸ்டைன் என்னும் சிறிய சுயாட்சிப் பகுதியை ஆண்டு வரும் லீச்டென்ஸ்டைன் அரச குடும்பம்தான் செல்வவளம் மிக்க முதல் பத்து குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரே அரச குடும்பம் ஆகும். இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர்கள். சொத்தின் பெரும்பகுதி தற்போது ஆட்சியில் இருக்கும் இரண்டாம் பிரின்ஸ் ஹான்ஸ் ஆடம் அவர்களுக்குச் சொந்தமானதாகும்.

சுதந்திர நாடு

சுதந்திர நாடு

ஆல்ப் மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள நாடுகளுள் மிகச்சிறிய நாடாக லீச்டென்ஸ்டைன் உள்ளது. 1806 ஆம் ஆண்டு இது சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்நாட்டை ஆண்டு வரும் அரச பரம்பரையின் தற்போதைய இளவரசராக விளங்குபவர் இரண்டாம் ஹான்ஸ் ஆடம் ஆவார். இக்குடும்பத்திற்குச் சொந்தமான, LTG குழுமம் என்னும் தனியார் வங்கியின் மூலம் கிடைக்கும் வருமானம்தான், இந்த அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். வங்கித் தொழில் மட்டும் அல்லாமல், லீச்டென்ஸ்டைன் பவுண்டேசன் என்னும் நிறுனத்தின் வழியாக உயர்மதிப்பு கொண்ட பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள பில்லியன் கணக்கான முதலீடுகள் இக்குடும்பத்தின் செல்வச் செழிப்பை அதிகப்படுத்துகின்றன.

 8. துபாய் அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 19 பில்லியன் டாலர்கள்)

8. துபாய் அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 19 பில்லியன் டாலர்கள்)

மக்தூம் குடும்பத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் துபாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1833 ஆம் ஆண்டு முதல் துபாயின் அரச குடும்பமாகத் திகழும் மக்தூம் குடும்பத்தில் 12 அடிப்படை உறுப்பினர்களும் அவர்களைச் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அரச குடும்ப அங்கத்தினர்களாக உள்ளனர். இக்குடும்பத்தினர் 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளனர்.

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்

மக்தூம் குடும்பப் பரம்பரையில் மிகப் பெரும் செல்வந்தராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளார். இவர்தான் துபாயின் தற்போதைய ஆட்சியாளர். 2006 ஆம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இவர், ஐக்கிய அரேபிய எமிரேட்டின் (UAE) துணைத் தலைவராகவும், பிரதம மந்திரியாகவும் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 18 பில்லியன் டாலர் ஆகும்.

100 மில்லியன் டாலர்

100 மில்லியன் டாலர்

1979 ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலர் செலவில் நடைபெற்ற இவருடைய முதல் திருமணம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதியினை வாரி வழங்குவதில் மிகவும் தாராளகுணம் படைத்தவர் இவர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மிகப் பெரும் சொத்துக்களை வாங்கி வைத்துள்ள இவர், உலகின் மிகப்பெரிய கப்பலையும் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.

7. மொராக்கோ அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 20 பில்லியன் டாலர்)

7. மொராக்கோ அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 20 பில்லியன் டாலர்)

மொராக்கோ நாட்டை ஆட்சி செய்பவர்கள் அல்வைத் வம்சத்தினர். 13ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த இப்பரம்பரையினர் 1631 ஆம் ஆண்டில் தங்களுடைய அரச பரம்பரையை நிறுவினர். 1999 ஆம் ஆண்டு அரச பொறுப்புக்கு வந்த அரசர் ஆறாவது முகமது தலைமையிலான அரச குடும்பத்தில் 19 உறுப்பினர்கள் உள்ளனர்.

5 பில்லியன் டாலர்

5 பில்லியன் டாலர்

ஃபோர்ப்ஸ் (Forbes) இதழின் மதிப்பீட்டின்படி மொராக்கோ அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர்கள். ஆனால், பிற ஊடகங்களின் வழியாகத் திரட்டப்பட்ட தகவலின்படி அக்குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்கள்.

மொராக்கோ அரண்மனை

மொராக்கோ அரண்மனை

ஒரு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் அளவுக்கான மக்களின் வரிப்பணம் மொராக்கோ அரண்மனைக்கென ஒதுக்கப்படுகிறது. அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்குச் சம்பளமாக மட்டும் பல மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுகிறது. மொராக்கோவின் தலைநகர் ரபாடா உட்பட பிற இடங்களில் அமைந்துள்ள அரச குடும்பத்து அரண்மனைகளுக்கான ஒரு வருட மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான கட்டணங்கள் மட்டும் 1 மில்லியன் டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

6. புரூனே அரச வம்சத்தினர் (சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர்கள்)

6. புரூனே அரச வம்சத்தினர் (சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர்கள்)

தென் கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான புரூனே கி்.பி.1363 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மன்னராட்சிக்கு உட்பட்ட நாடாகத் திகழ்கிறது. தற்போதைய அரசராக இருக்கும் சுல்தான் ஹசனல் பொகியா கடந்த 51 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

சுல்தான் ஹசனல்

சுல்தான் ஹசனல்

புரூனே நாட்டின் எண்ணெய் வளம்தான் அரச குடும்பத்தின் செல்வச் செழிப்புக்கு முக்கியக் காரணமாகும். மன்னர் சுல்தான் ஹசனலின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலராகும். இவருடைய மகனான இளவரசர் ஹாஜி அப்துல் அஜிம் என்பவருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 5 பில்லியன் டாலர்கள் சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆடம்பரமான அரசர்

ஆடம்பரமான அரசர்

உலகின் மிகவும் ஆடம்பரமான அரசர் என்னும் புகழுக்கு உரியவர் புரூனே சுல்தான். இவருடைய வசிப்பிடமான இஸ்தானா நூருல் இமான் அரண்மனை சுமார் 1.4 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டதாகும். இவரிடம் 7000 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. அவற்றுள் 600 கார்கள் ரோல்ஸ் ராய்ஸ், 300 கார்கள் ஃபெராரி வகையைச் சார்ந்தவை. தனக்கெனத் தனியாக பல விமானங்களை வைத்துள்ளார். முடிவெட்டுவதற்கு மட்டும் ஒவ்வொரு முறையும் 21,000 டாலர்களைச் செலவழிக்கிறார்.

5. தாய்லாந்து அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 60 பில்லியன் டாலர்கள்)

5. தாய்லாந்து அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 60 பில்லியன் டாலர்கள்)

நமது பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளவர்கள் தாய்லாந்து அரச குடும்பத்தினர். சாக்ரி (The Chakri) வமிசத்தைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து நாட்டை கடந்த 236 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டில் மிகவும் மதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்படுகின்றனர். தாய்லாந்து நாட்டின் தற்போதைய அரசராக இருப்பவர் மஹா வஜ்ரலங்கார்ன் என்பவர்.

ஆட்சிப் பொறுப்பு

ஆட்சிப் பொறுப்பு

இவர் தன்னுடைய தந்தை பூமிபால் அதுல்யாதேஜ் மறைவுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். பாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட தாய் அரச வம்சத்தில் 22 குடும்ப அங்கத்தினர்கள் உள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் 10 பேர் மட்டுமே. இக்குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 60 பில்லியன் டாலர்கள் ஆகும்.

முதலீடு

முதலீடு

தாய்லாந்து மன்னரின் விருப்பப்படி அவருடைய சொத்துக்கள் பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட், சொகுசு ஓட்டல்கள், நிறுவனப் பங்குகள் எனப் பலவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.

4. அபுதாபி அரச குடும்பத்தினர் (சொத்து மதிப்பு – 150 பில்லியன் டாலர்கள்)

4. அபுதாபி அரச குடும்பத்தினர் (சொத்து மதிப்பு – 150 பில்லியன் டாலர்கள்)

அபுதாபியை ஆள்பவர்கள் அல் நஹ்யான் (Al Nahyan) என்னும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், துபாய் அரச குடும்பத்தினரான அல் மக்தூம் வம்சத்தினரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இவர்களது குடும்பம் கி்.பி.1793 ஆம் ஆண்டு முதல் அபுதாபியை ஆண்டு வருகிறது. இவர்களுடைய அரச குடும்பத்தில் 200 ஆண்கள் உள்ளனர். பெண் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

எண்ணெய் ஏற்றுமதி

எண்ணெய் ஏற்றுமதி

மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பத்தைப் போலவே, அபுதாபி அரச குடும்பத்தினரின் செல்வ வளத்துக்குக் காரணம் அந்நாட்டில் உள்ள எண்ணெய் வளமே ஆகும். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் இவர்கள் குவித்துள்ள சொத்தின் மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ஷேக் கலீஃபா பின் ஜையத் அல் நஹ்யான்

ஷேக் கலீஃபா பின் ஜையத் அல் நஹ்யான்

அபுதாபியின் தற்போதைய அரசராக உள்ளவர் ஷேக் கலீஃபா பின் ஜையத் அல் நஹ்யான் என்பவர். இவர் அபுதாபியின் அரசராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும், அபுதாபி முதலீட்டு ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த ஆணையம் 875 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சொத்தினை மேலாண்மை செய்கிறது. உலகின் மிக உயரமான அடுக்குமாடி வணிக வளாகமாகக் கருதப்படும் புர்ஜ் கலீஃபாவும் இதில் அடங்கும்.

 3. கத்தார் அரச குடும்பம் (சொத்தின் மதிப்பு – 335 பில்லியன் டாலர்)

3. கத்தார் அரச குடும்பம் (சொத்தின் மதிப்பு – 335 பில்லியன் டாலர்)

செல்வச் செழிப்புமிக்க அரச குடும்பத்தினர் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பவர்கள், கத்தார் அரச குடும்பத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து கத்தாரை ஆண்டு வருபவர்கள் அல் தாணி (Al Thani) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கத்தாரின் தற்போதைய அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தாணி என்பவர். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்சிபுரிந்து வருகிறார். தன்னுடைய 37ஆவது வயதில் பொறுப்புக்கு வந்த இவர், உலகிலேயே குறைந்த வயதில் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவராக அறியப்படுகிறார். அரச குடும்பத்தில் ஏறக்குறைய 7000 முதல் 8000 வரையிலான உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 100 கோடி டாலர்

100 கோடி டாலர்

கடந்த ஆண்டில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அல் தாணி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மீட்பதற்காக அல்-கொய்தா அமைப்பிற்கு, அரச குடும்பத்தினரால் நூறு கோடி டாலர்கள் கொடுக்கப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. கத்தார் அரச குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 335 பில்லியன் டாலர்கள் ஆகும்.

முக்கிய சொத்துக்கள்

முக்கிய சொத்துக்கள்

லண்டனில் உள்ள ஷார்த் (Shard skyscraper) அடுக்குமாடிக் கட்டடம், ஒலிம்பிக் கிராமம் மற்றும் ஹர்ரோட்ஸ் (Harrods) டிபார்ட்மென்டல் ஸ்டோர், நியூயார்க்கில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடப் பங்குகளின் ஒரு பகுதி, வோக்ஸ்வேகன் நிறுவனம் போன்றவை கத்தார் அரச குடும்பச் சொத்துக்களில் அடங்கும்.

2. குவைத் அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 360 பில்லியன் டாலர்)

2. குவைத் அரச குடும்பம் (சொத்து மதிப்பு – 360 பில்லியன் டாலர்)

குவைத்தின் அரச பதவியில் இருப்பவர்கள், அல் ஷபா (Al - Sabah) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கி்.பி.1752 ஆம் ஆண்டு முதல் இக்குடும்பத்தினர் குவைத்தை ஆண்டு வருகின்றனர். தற்போதைய குவைத் அரசர் பெயர், ஆறாவது ஷேக் ஷபா அஹமது அல் ஜபார் அல் ஷபா என்பதாகும். இக்குடும்பத்தில் மொத்தம் 1000 உறுப்பினர்கள் உள்ளனர்.

ராக்கெட் வேகத்தில் உயர்வு

ராக்கெட் வேகத்தில் உயர்வு

குவைத் அரச குடும்பத்தின் சொத்துக்களை மதிப்பிட்டு உரைப்பது எளிதான செயல் அல்ல. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த டைம் இதழின் இக்குடும்பத்தின் சொத்து மதிப்பை 90 பில்லியன் டாலர் எனக் குறிப்பிட்டிருந்தது. சொத்தின் பெரும்பகுதி அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படும் நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அதனுடைய மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மூன்று மடங்கு

மூன்று மடங்கு

குவைத் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு, 1990 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல மூன்று மடங்கு உயர்ந்திருக்கும் என நிதியியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவில் உள்ள பெரும் இலாபம் ஈட்டும் முன்னணி நிறுவனங்களில் தங்கள் சொத்துக்களின் பெரும்பகுதியை குவைத் அரச குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

1. சவூதி அரேபியா அரச குடும்பத்தினர் (சொத்து மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர்)

1. சவூதி அரேபியா அரச குடும்பத்தினர் (சொத்து மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர்)

உலகத்திலேயே அதிக செல்வச் செழிப்பு மிக்க அரச குடும்பமாகத் திகழ்வது சவூதி அரேபிய மன்னர் குடும்பமாகும். இவர்களின் சொத்து மதிப்பைக் கேட்டால் திறந்த வாயை மூட மாட்டீர்கள். ஆம், 1.7 டிரில்லியன் டாலர் அளவுக்கு இக்குடும்பத்தினரிடம் சொத்துக்கள் உள்ளன. ஏறக்குறைய ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கோடி டாலர்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்த 15000 உறுப்பினர்களிடம் இச்சொத்துக்கள் பரவியுள்ளன.

 சவூதி அரேபியா

சவூதி அரேபியா

1744 ஆம் ஆண்டு முதல் சவுத் (Saud) என்னும் பெயர் கொண்ட வம்சத்தினரின் ஆளுகையில் இருக்கும் அரேபியா பாலைவனத்தின் ஒரு பகுதி சவூதி அரேபியா எனப் பெயா் பெற்றது. சவூதி அரேபியாவின் தற்போதைய அரசர் சல்மான் என்பவர். இவர், 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வருகிறார்.

சிறை வாசம்

சிறை வாசம்

ஊழல் புகாரில் சிக்கியதன் காரணமாகக் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இளவரசர், அல்வாலித் சவூதி அரச குடும்ப உறுப்பினர்களுள் தனிப்பட்ட முறையில் அதிக சொத்து வைத்திருப்பவராகக் கருதப்படுகிறார். இவருடைய சொத்தின் மதிப்பு 18.7 பில்லியன் டாலர்கள் ஆகும். பல மாத சிறை வாசத்துக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்ட இளவரசர், அவருடைய விடுதலைக்கான பிணையத் தொகையாக அரசாங்கத்திற்கு 6 பில்லியன் டாலர் தர ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The world's richest royal families' enormous wealth revealed

The world's richest royal families' enormous wealth revealed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X