ஆன்லைன் ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் புக்கிங் புதிய விதிகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐஆர்சிடிசி இணையதளமான www.irctc.co.in மூலமாக இந்திய ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களை 120 நாட்கள் முன்னதாகவே புக் செய்ய முடியும். இந்தச் சேவையினை மேலும் மெறுகேற்ற்வும் விதமாக ரயில்வே அமைச்சகம் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

 

அன்மையில் ரயில்வே துறை அமைச்சர் ராஜென் கோஹைன் மாநிலங்கள் அவையில் அளித்த பதிலில் இந்திய ரயில்களில் தினமும் 2கோடி நபர்கள் பயணம் செய்வதாகவும் அதில் தட்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையானது கடைசி நிமிட பயனர்களுக்கானது என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்கில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பயனர் ஐடி

பயனர் ஐடி

ஒரு ஐஆர்சிடிசி இணையதள ஐடி கீழ் மாதம் 6 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம். இதுவே ஒரு பயணி அல்லது ஐஆர்சிடிசி ஐடி வைத்துள்ளவர்கள் ஆதார் சரிபார்ப்பினை செய்தால் 12 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம்.

அட்வான்ஸ் ரயில் டிக்கெட் புக் செய்யக் கூடிய நேரம் மாற்றம்

அட்வான்ஸ் ரயில் டிக்கெட் புக் செய்யக் கூடிய நேரம் மாற்றம்

ஐஆர்சிடிசி பயனர் ஒருவரால் அட்வான்ஸ் ரிசர்வேஷன் நேரமான காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 டிக்கெட்கள் மட்டுமே டிக்கெட்களைப் புக் செய்ய முடியும்.

உள்நுழைதல்
 

உள்நுழைதல்

ஒரு பயனரால் ஒரு நேரத்தில் ஒரு முறை மட்டுமே ஐஆர்சிடிசி ஐடியில் உள்நுழைய முடியும். அதாவது ஒரு ஐடியை ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் ஒரே நேரத்தில் உள்நுழைய முடியாது.

குவிக் டிக்கெட் புக் சேவை

குவிக் டிக்கெட் புக் சேவை

ஐஆர்சிடிசி இணையதளத்தின் ஒரு பக்க குவிக் ரயில் டிக்கெட் புக் சேவையானது காலை 8 மணி முதல் பிற்பகள் 12 மணி வரை செயல்படாது.

கேப்ட்ச்சா

கேப்ட்ச்சா

ஐஆர்சிடிசி ஐடி பயன்படுத்தி உள்நுழையும் போது மற்றும் பயணிகள் விவரங்கள் அளித்த பிறகு புக்கிங் கன்ஃபார்ம் செய்ய வேண்டும். இந்தக் கேப்ட்சாவானது மனிதனா அல்லது கணினியா என்பதைத் தெரிந்துக்கொளவதற்கானது ஆகும். இந்தக் கேப்ட்சாவினை 5 நொடியில் உள்ளிட வேண்டும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ரயில் டிக்கெட் புக்கிங்கில் பாதுகாப்பினை அதிகரிக்கக் கூடுதல் விவரங்கள் பெறப்படும். அவை தான் பெயர் பெயர், மின்னஞ்சல், மொபைல் என், செக் பாக்ஸ் போன்றவை ஆகும். பயணிகள் விவரங்களை 25 நொடிகளில் நிரப்ப வேண்டும்.

 பணப் பரிவர்த்தனை

பணப் பரிவர்த்தனை

பணம் செலுத்தும் போது 10 நொடியில் சரிபார்ப்புச் செயல்படுத்தப்படும். அனைத்து வங்கிகளும் ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு முறை கடவுச்சொல் அனுப்புவது கட்டாயம்.

 ஏஜெண்ட்கள்

ஏஜெண்ட்கள்

ரயில் டிக்கெட் புக் செய்யும் ஏஜெண்ட்களால் காலை 8 - 8:30 மணி, 10 - 10:30 மற்றும் 11 - 11:30 மணி நேரங்களில் ரயில் டிக்கெட்களைப் புக் செய்ய முடியாது. ஏஜெண்ட்கள் ஆதார் கார்டு சரிபார்ப்பைச் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.

 தட்களில் டிக்கெட் புக்கிங்கிள் பிற முக்கியப் புதிய விதிகள்

தட்களில் டிக்கெட் புக்கிங்கிள் பிற முக்கியப் புதிய விதிகள்

காலை 10:00 மணி முதல் 12:00 மணி நேரத்தில் தட்கள் டிக்கெட்டினை ஒரு பயனர் ஐடியில் இருந்து 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய அனுமதி வழங்கப்படும். ஒரு செஷனில் ஒரு தட்கள் டிக்கெட் மட்டுமே புக் எய்ய முடியும். மேலும் ஒரு இணையதள ஐபி முகவரிக்குத் தட்கள் நேரமான காலை 10:00 மணி முதல் 12:00 மணி நேரத்தில் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway Ticket Online Reservation: Latest Rules To Know About Ticket Booking

Railway Ticket Online Reservation: Latest Rules To Know About Ticket Booking
Story first published: Friday, April 13, 2018, 11:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X