பேஸ்புக் பதிவால் வேலையை இழந்த கோட்டாக் மஹிந்திரா வங்கி ஊழியர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் நான்காம் மிகப் பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமான கோடாக் மகேந்திரா வங்கியின் ஊழியர் ஒருவர் சமுக வலைத்தளத்தில் கத்துவாவில் 8 வயது பெண் குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்ததை ஆதரித்துச் சர்ச்சை கருத்தைப் பதிவு செய்தால் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவே இந்தப் பெண் குழந்தையின் பலாத்காரத்திற்கு எதிராகப் போரடி நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில் கோடாக் மகேந்திரா வங்கியின் ஊழியர் சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தானது மிகப் பெரிய வெறுப்பை மக்களிடம் தூண்டும் விதமாக இருந்துள்ளது.

சர்ச்சை கருத்து
 

சர்ச்சை கருத்து

கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு நந்த குமார், தற்போதைய முன்னால் கொடாக் மகேந்திரா வங்கி ஊழியர் பேஸ்புக்கில் " நல்ல வேலை அந்தப் பெண்ணை இந்த வயதிலேயே கொண்டு விட்டார்கள். இல்லை என்றால் வளர்ந்த பிறகு இவள் இந்தியாவிற்கு எதிராகத் தற்கொலை குண்டு ஏந்தி வந்து இருப்பார்' என்று பதிவிட்டுள்ளார்.

கண்டனம்

கண்டனம்

விஷ்ணுவின் பதிவுக்குப் பல தரப்பில் கண்டனம் வர பேஸ்புக்கில் வைரல் ஆகத் துவங்கியதும் கோடாக் மகேந்திரா வங்கி "விஷ்ணு நந்தகுமாரின் மோசமான செயல்திறனால் கோடாக் வங்கி பணியில் இருந்து 2018 ஏப்ரல் 11-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது". அது மட்டும் இல்லாமல் அவருடைய கருத்துக் கண்டனத்திற்கு உறியது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

கோடாக் மகேந்திரா வங்கியின் பாலரிவட்டம் கிளையில், உதவி மேலாளராக இருந்த நந்தகுமார் சமுக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட சில மணி நேரங்களில் 1000-ம் கணக்கான மக்கள் இவர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்குப் புகார் அளித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள்
 

வாடிக்கையாளர்கள்

சில வாடிக்கையாளர்கள் இந்தச் சர்ச்சை மிகுந்த உங்கள் ஊழியரின் கருத்தால் தங்களது வங்கி கணக்கை மூடிவிட்டுப் பணத்தினைத் திரும்பி அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 சமுக வலைத்தளப் பக்கம்

சமுக வலைத்தளப் பக்கம்

கோடாக் மகேந்திரா வங்கியின் சமுக வலைத்தளப் பக்கத்தில் 34,000 நபர்கள் விஷ்ணுவின் எதிராகக் கருத்துக்கள் பதிவு செய்து இருந்த நிலையில் அதில் பலரும் அவரைப் பணிநீக்கம் செய்யுமாறு, நீதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kotak Mahindra Bank terminated employee for hate post against Kathua rape victim

Kotak Mahindra Bank terminated employee for hate post against Kathua rape victim
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X