புற்றுநோய் அச்சத்தில் தமிழ்நாடு.. எல்ஐசி கேன்சர் பாலிசிக்கு அமோக வரவேற்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோய்க்கான காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

 

புற்று நோய்க்காக எல்ஐசி அறிமுகம் செய்த இந்தக் காப்பீடு திட்டத்தினை இது வரை 88,750 நபர்கள் வாங்கியிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் 88,750 பாலிசிகளில் 58.5 சதவீதத்தினை வாங்கி இருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புற்று நோய்க்கான இந்த 88,750 பாலிசிகளின் முதல் பிரீமியம் தொகை மட்டும் 42.68 கோடி ரூபாய் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

தென் மாநிலங்கள்

தென் மாநிலங்கள்

தென் மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் இருந்து 25,670 நபர்கள் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ள புற்று நோய்க்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கியுள்ளனர்.

 வட மாநிலங்கள்
 

வட மாநிலங்கள்

வட மாநிலங்கள் பக்கம் என்றால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் புற்றுநோய்க்கான இந்தப் பாலிசியை அதிகபட்சமாக 26,280 நபர்கள் வாங்கியுள்ளார்கள்.

ஆய்வு அறிக்கை

ஆய்வு அறிக்கை

நவம்பர் மாதம் வெளியான மாநில அளவிலான ஆய்வு ஒன்றில் தமிழ் நாடு, குஜராத், மாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய வளர்ச்சி படைத்த மாநிலங்களில் தான் தொற்று நோய் இல்லாத கேன்சர் உள்ளிட்ட நோய்களின் மையங்களாக மாறியிருப்பது தெரியவந்துள்ளது.

 காத்திருப்புக் காலம்

காத்திருப்புக் காலம்

எல்ஐசி புற்று நோய்க்கான காப்பீட்டினை 2017 நவம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தப் பாலிசிக்கான காத்திருப்புக் காலம் 180 நாட்கள் ஆகும். இந்தப் பாலிசியை வாங்கிய 180 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையினைப் பெற முடியாது.

 விருப்பம் I - நிலை தொகை காப்பீடு

விருப்பம் I - நிலை தொகை காப்பீடு

பாலிசி காலம் முழுவதும் அடிப்படை தொகை காப்பீடு மாறாமல் இருக்கம். எனவே ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசியை வாங்கினால், அந்த பாலிசி காலவரையாகும் வரை இந்தத் தொகையினைப் பயன்படுத்த முடியும்.

விருப்பம் II - காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

விருப்பம் II - காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

அடிப்படை காப்பீடு தொகை முதல் 5 ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஆண்டும் 10% கூடுதலாக உயர்ந்துகொண்டே செல்லும். ஒருவேலை பாலிசிதாரருக்கு 5 வருடத்திற்குள் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அடிப்படை காப்பீடு தொகை உயர்வு நின்று விடும். எனவே 10 லட்சத்திற்குப் பாலிசி வாங்கினால் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் காப்பீடு உயர்வு என 5 வருடம் கிடைக்கும். அதாவது 10 லட்சம் காப்பீடு வாங்கி 15 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். உதாரணத்திற்குப் பாலிசி வாங்கிய 3 வருடத்திற்குப் பிறகு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் 13 லட்சம் ரூபாய் வரை காப்பிடு பெறலாம். இரண்டு ஆண்டுக்கு பிரீமியம் தொகை உயராது.

 காப்பீடு தொகை அளவு

காப்பீடு தொகை அளவு

லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின கேன்சர் பாலிசி திட்டத்தின் கீழ் குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.

வயது

வயது

பாலிசிதாரர்களுக்குக் குறைந்தது 20 வயதில் இருந்து 65 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். குறைந்தது 50 ஆண்டுகள் முதல் 75 ஆண்டுகள் வரை காப்பீடு அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu fears on cancer diesease. LIC Cancer policy finds most buyers

Tamilnadu fears on cancer diesease. LIC Cancer policy finds most buyers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X