உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்க்க இவர் ஒருவர் போதும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அரசின் ஆதாரப்பூர்வ மதிப்பீட்டின் அடிப்படையில், இவ்வுலகத்தின் மிக முக்கியமான சிக்கல்களில் கையாளுவதற்கான செலவினத்தைக் கணக்கிட்டு , கண்ணீர் வரவழைக்கும் அம்மதிப்பை எளிதாக அளிக்க வல்ல உலகின் சில செல்வந்தர்கள் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

  டிரக்கோமா

  டிரக்கோமாவை (TRACHOMA) முற்றிலுமாக நீக்க சுமார் 1 பில்லியன் டாலர்கள் (6500 கோடி ரூபாய்கள்) தேவை

  வளரும் நாடுகளிலுள்ள 200 மில்லியன் மக்கள், கண்பார்வை குறைபாடு ஏற்படுத்தும் டிரக்கோமா என்னும் கொடிய நோய் அபாயத்தில் உள்ளனர் மற்றும் 3.6 மில்லியன் நோயாளிகளோ தங்கள் கண்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடி அறுவை சிகிச்சைத் தேவையை எதிர்நோக்கியுள்ளனர். இது பாக்டீரியா நோய்த்தொற்றினால் உருவாகிறது. தகுதியான ஆன்டிபயாடிக் கொண்டு இதை ஆரம்பநிலையிலேயே குணப்படுத்தலாம்.

  உலகச் சுகாதார அமைப்பானது (WHO) 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தக் கொடிய டிரக்கோமாவை முற்றிலும் அழிக்கச் சுமார் (6492 கோடி ரூபாய்கள்) 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

   

  1 பில்லியன் டாலர்

  ஜெய்-சி மற்றும் பியான்சேவின் இணைந்த சொத்து மதிப்பு ($1 பில்லியன்) இதற்கு நிகர்.

  அமெரிக்காவின் பிரபல இசைத்துறை தம்பதியர்களின் ஒன்றுபட்ட சொத்துமதிப்பும்கூட ஏறக்குறைய இதே 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தான். அவங்க எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்தா ஈஸியா இந்த நோயை அட்டாக் பண்ணலாம் ஆனா கொடுக்கணுமே !!!.

  அதிர்ஷ்டவசமா இத் திட்டத்திற்கான நிதியை WHO மற்றும் பல உலக அமைப்புகள் கொடுத்து உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டம் வழியே எளிதில் குணப்படுத்தக்கூடிய இந்த நோயினால், கண்பார்வை இழக்காமல் பல மில்லியன்கணக்கான மக்களின் கண்கள் காப்பாற்றப்பட வேண்டுமென நாம் வேண்டிக்கொள்வோம்.

   

  போலியோ

  போலியோ நோயை ஒழித்துக்கட்டத் தேவைப்படும் தொகை 1.5 பில்லியன் டாலர் தேவை.

  30 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது இந்த நோய் 99.9 விழுக்காடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலுள்ளது. முடக்கு வாதத்தையும், மூட்டுப் பிரச்சனைகளையும் விளைவிக்கக் கூடிய இக்கொடிய நோய், இன்னும் மூன்று நாடுகளில் மட்டும் (ஆப்கானிஸ்தான், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான்) பரவலாகக் காணப்படுகிறது.

  இந்நோயை முற்றிலும் ஒழிக்க உலகப் பொருளாதார மன்ற கருத்துக் கணிப்புப் (WEF) படி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (9738 கோடி ரூபாய்கள்) தேவைப்படுகிறது.

   

  ஹஸ்ஸன் ஜமைலின்

  ஹஸ்ஸன் ஜமைலின் சொத்து மதிப்பு இதற்கு நிகர்.

  ரிஹானாவின் (இசைக் கலைஞர்) பில்லியனர் சவுதி காதலனான ஜமைலின் குடும்பச் செல்வத்தை (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் / 9738 கோடி ரூபாய்கள்) இந்நற்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் , உலகின் மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் அந்த வாய்ப்பை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

  தனது சேவை அறக்கட்டளை வழியாக ஏற்கனவே 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள (19476 கோடி ரூபாய்கள்) பல தடுப்பூசித் திட்டங்களை நன்கொடையாக வழங்கியுள்ள சாப்ட்வேர் மற்றும் உலகப் பெரும்பணக்காரர்களின் ஜாம்பவான் பில்கேட்ஸ் உலகளாவிய போலியோ ஒழிப்புத் திட்டத்தில் (GPEI) ஒரு முக்கியப் பங்காளி என்பது குறிப்பிடத்தக்கது .

   

  ரேபீஸ் நோய்

  நாய்களின் மூலம் பரவும் ரேபீஸ்(வெறிநாய்க்கடி நோய்) ஒழிப்புக்குத் 6.3 பில்லியன் டாலர் தேவை.

  நாய்களிடமிருந்து பரவும் இந்த நோய் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்து மனிதர்களையும் காக்கும் உறுதிமொழியை WHO ஏற்றுள்ளது. இந்த நோயை முற்றிலும் அகற்றுவதற்குச் சுமார் 6.3 பில்லியன் டாலர்கள் செலவாகுமென அமெரிக்க நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

   

  டிராவிஸ் கலானிக்

  டிராவிஸ் கலானிக்கின் சொத்து மதிப்பு ($6.3 பில்லியன் டாலர்கள்) இதற்குச் சமம்:

  தொடர்ச்சியான பல ஊழல் குற்றச்சாட்டுகளால் அதல பாதாளத்திலிருக்கும் முன்னாள் உபேர் நிறுவனத்தின் பாஸ்(டிராவிஸ் கலானிக்) தனது செல்வாக்கைத் திரும்பப்பெற, உலகெங்கிலுமிருந்து இந்த வெறித்தன நோயை ஒழிக்கத் தனது 6.3 பில்லியன் டாலர் நிதியை நன்கொடையாக அளித்து முயற்சிக்கலாம். ஆனால் அது நடக்காது. அதிர்ஷ்டவசமாக, பல நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து பணத்தைக் கொட்டத் தயாராக உள்ளன.

   

  யானைக்கால் வியாதி

  யானைக்கால் (எலிபான்டையாசிஸ்) நோய் ஒழிப்பின் விலை ஏறக்குறைய 8 பில்லியன் டாலர் வேண்டும்

  எலிபான்டையாசிஸ் என்பது ரேபீஸ்ஸுடன், போலியோ , டிரோகோமா, நிணநீர் வடிநோய்கள் போன்ற மொத்தம் 13 ஒரேமாதிரியான முற்றிலும் அழிக்கப்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்றாகும்.

  மூட்டுகள் மற்றும் உடலின் பிற பாகங்களில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுத்தும் இந்தக் கொடிய நோயின் ஆபத்தில் தற்போது ஏறக்குறைய 950 மில்லியன் மக்கள் உள்ளனர்.இதை முற்றிலும் ஒழிப்பதற்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

   

  பியேர் ஒமிடார்

  இதற்கு ஈடான செல்வ மதிப்பைக் கொண்டுள்ளார் பியேர் ஒமிடார்

  ஈபே நிறுவனர் பியேர் ஒமிடாரின் சொத்து 8 பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவற்றை அவரது வாழ்நாளில் மக்கள் நலனுக்காக விட்டுக்கொடுக்க விரும்புகின்றார் . உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அவர் தனது மனைவியான பமீலாவுடன் பல தொண்டு நிறுவனங்களின் மூலம் தகுதியுள்ள காரணங்களுக்கு நன்கொடையாக வழங்குகிறார்.

   

  மலேரியா

  உலகம் முழுவதும் மலேரியா ஒழிப்புக்கு 8.5 பில்லியன் டாலர்கள் தேவை.

  கொசுக்களின் வழியே பரவுகின்ற நோய்கள் பல நாடுகளிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்ட போதிலும், உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மலேரியா நோயின் ஆபத்தில் உள்ளனர் . இதனால் 2000 க்குப் பிறகும் பல வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள நாடுகளில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மாண்டுகொண்டுதானிருக்கிறார்கள்.

  அமெரிக்காவின் பென்ட்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 8.5 பில்லியன் டாலர்கள் கொண்டு இந்த நோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று நம்புகின்றனர்.

   

  ஹேரி டிரிகுபாஃப்

  இதற்கீடான சொத்துமதிப்பைக் கொண்டுள்ளவர் ஹேரி டிரிகுபாஃப் (HARRY TRIGUBOFF)

  புகழ் பெற்ற ஆஸ்திரேலிய நன்கொடையாளரான ஹேரி டிரிகுபாஃப்-பின் நிகரச் சொத்து மதிப்பு மலேரியா ஒழிப்புக்குத் தேவையான 55182 கோடி ரூபாய்களை( மருந்து விலையேற்றம் போன்றவற்றைச் சேர்க்காமல் கணிக்கப்பட்ட விலை) ஒத்துப்போகிறது.

   

  பசியைத் தீர்க்க...

  உலகப் பசிப் பிணியைப் போக்க சுமார் 30 பில்லியன் டாலர்கள் ஒரு வருடத்திற்குத் தேவை

  உலகப் பசிப்பிணியைப் போக்க ஆகும் செலவினத்தைக் கண்டறிவது சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் பல வல்லுநர்கள் அதற்கான மதிப்பீட்டைக் கணக்கிட மறுக்கின்றனர். ஆனால் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, ஆண்டொன்றிக்கு சுமார் 30 பில்லியன் டாலர் செலவில் உலகின் அனைத்து மக்களின் ஊட்டச்சத்துக் குறைகளையும் போக்க முடியுமெனத் தெரிவித்துள்ளது.

   

  ஷெல்டன் அடெல்சன்

  30 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள ஷெல்டன் அடெல்சன் :

  நிரந்தரமாக இந்த உலகின் பிரச்சினையைத் தீர்க்க உலகின் பல பெரும் செல்வந்தர்கள் கைகளில் கூட இல்லை, ஆனால் கொடுப்பதில் தாராள மனம் கொண்ட தர்மப்பிரபுவான சூதாட்ட அதிபர் ஷெல்டன் அடெல்சனால் இது சத்தியம் . அவரின் சொத்து மதிப்பும் 30 பில்லியன் டாலர்கள்தான். இதைக் கொண்டு ஒரு வருடம் உலகின் பசியுள்ள மக்களுக்கு உணவு கொடுக்கலாம்.

   

  தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்

  தூய்மையான நீர் மற்றும் சுகாதாரத்தை உலகளவில் வழங்குவதற்குச் சுமார் 150 பில்லியன் டாலர்கள் ஒரு வருடத்திற்குத் தேவை

  2.3 பில்லியன் மக்களுக்குக் கெளரவமான கழிப்பறை இல்லை மற்றும் உலகம் முழுவதும் 844 மில்லியன் மக்களுக்குச் சுத்தமான நீர் கிடைப்பதில்லை என்பதே அதிர்ச்சிகர உண்மை.

  உலகெங்கிலும் உள்ள மொத்த மக்கட்தொகைக்குப் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (973800 கோடி ரூபாய்கள்) செலவாகுமென உலக வங்கியின் சிறந்த நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

   

  அமேசான் தலைவர்

  வாரன் பஃபெட் மற்றும் ஜெஃப் பிசோஸ் ஆகிய இருவரின் சொத்து மதிப்பில் இந்த வசதி சாத்தியம்.

  உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பணக்காரர்களான வாரன் பஃபெட் மற்றும் ஜெஃப் பெஸோஸ் சொத்துக்களின் இணைந்த நிகர மதிப்பு ஒரு வருடத்திற்கு உலகின் தேவைக்கான பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்குப் பயன்படும்.

  அதன்பிறகு, அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய புரவலர்கள் பணத்தைக் கொட்டினால் மட்டுமே இது சாத்தியம். இதைத் தொடர்ந்து சாத்தியப்படுத்துவது மிகப் பெரிய சவால்.

   

  வறுமை ஒழிப்பு

  இந்த உலகத்தின் வறுமை ஒழிப்பிற்குத் தேவையான அமௌன்ட் 175 பில்லியன் டாலர்கள் தேவை

  உலகில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் (அதாவது 125 ரூபாய்களுக்கும் கீழ் தின வருமானம் உள்ளவர்கள்) மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உலக வல்லுநர்களின் மற்றொரு தோராயமான மதிப்பீடு சுமார் 175 பில்லியன் டாலர் தேவை.

   

  3 முக்கியத் தலைகள்

  பில் கேட்ஸ் , மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் வால்மார்ட் வாரிசு ஆலிஸ் வால்டன் மூவரின் சொத்து மதிப்பைக் கூட்டினால் இதுவும் சத்தியம்:

  இந்த உலகத்தின் நெம்பர் 1 பணக்காரர்கள் கூடத் தனியாளாக இதைச் செய்து முடிக்கும் அளவிற்குச் செல்வ வளத்தைக் கொண்டிருக்கவில்லை.

  பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் வால்மார்ட் வாரிசு ஆலிஸ் வால்டன் ஆகிய மூன்று பெரும் செல்வந்தர்களின் ஒருங்கிணைந்த செல்வம் கூட உலகின் ஏழைகளின் வறுமையைப் போக்கும் பணியை 12 மாதங்களுக்கு மட்டுமே செய்யும்.

   

  கிரீன் ஹவுஸ் வாயுக்கள்

  2030- ம் ஆண்டுக்குள் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்த சுமார் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர் தேவை

  தூய்மையான நீர் வளங்கள் மற்றும் உலகின் மொத்த மக்கட்தொகைக்குத் தேவையான சுகாதாரம் வழங்கலுக்கு ஏராளமான செலவாகும், ஆனால் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் செலவினமானது இது எல்லாவற்றையும் விட வேறு லெவெலில் உள்ளது.

  2030 ஆம் ஆண்டுக்குள் கிரீன்ஹவுஸ் வாயு அளவைக்கட்டுப்படுத்த சுமார் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (84,39,60,00 கோடி ரூபாய்கள்) செலவாகும் என்று மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) மதிப்பிட்டுள்ளது .

   

  வட அமெரிக்கா பணக்காரர்கள்

  வட அமெரிக்காவின் அதிகச் சொத்து வைத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் இதைச் செய்ய முடியும்.

  வட அமெரிக்காவின் அதிகச் சொத்து வைத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு 13 டிரில்லியன் அல்லது அதற்கும் அதிகம். இங்கே 3.73 மில்லியன் மக்கள் ,தங்கள் வீடுகளைத் தவிர்த்து, 1 மில்லியன் டாலர் அளவிற்குச் சொத்துக்களை வைத்திருப்பவர்கள்.

  இந்தப் பிரச்சனை, அரசாங்கங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகள் மிகச் சீரியஸ் ஆக எடுத்துத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சிக்கலான ஒன்று.

   

  கார்பன் சக்தி மூலங்கள்

  2050 ஆம் ஆண்டுக்குள் குறைந்த கார்பன் சக்தி மூலங்களுக்கு மாறச் சுமார் 44 டிரில்லியன் அமெரிக்கன் டாலர் தேவை

  படிம எரிபொருட்களிலிருந்து முற்றிலுமாக மாறி புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைந்த கார்பன் எரிசக்தி உபயோக நிலையினை 2050- ஆம் ஆண்டிற்குள் அடைய நம்மால் எண்ணிப்பார்க்க முடியாத அளவு பணம் தேவைப்படும் . இத்திட்டத்திற்குச் சுமார் 44 டிரில்லியன் செலவாகும் என்று எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

   

  மயக்கம் வரும் தொகை

  மயக்கம் வரும் இத்தொகையைத் திரட்ட உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் அத்தனை பேரின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பையும் ஒன்றாகச் சேர்த்தால் வாய்ப்புண்டு

  உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் உள்ள 12 மில்லியன் நபர்களின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பு சுமார் 46.2 டிரில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இவர்களின் 95 விழுக்காடு சொத்து மதிப்பைக்கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்புண்டு.

  இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், புதைபடிவ எரிபொருட்களை நீக்குவதால் கிடைக்கும் பணத்தைச் சேமித்தாலே புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைந்த கார்பன் எரிசக்தி உபயோக மாற்றத்துக்குத் தேவையான பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்த்து விடலாம்.

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  world's biggest problems can fix by these people

  world's biggest problems can fix by these people
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more