பெங்களூரில் வெடித்த பிரச்சனை.. மாத சம்பளக்காரர்களுக்கு வருமான வரித்துறை வைக்கும் செக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரித்துறை வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வரி ஏய்ப்பு செய்யக்கூடிய வாய்ப்புகளையும் தீவரமாகக் கண்காணிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் முன்னணி ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த சில ஊழியர்கள் பெரிய அளவிலான மோசடியைச் செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாகத் தற்போது வருமான வரித்துறை நாட்டில் இருக்கும் அனைத்து மாத சம்பளக்காரர்களுக்கும் கடுமையான வருமான வரி ஆய்வறிக்கையை நடத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்புச் செய்ய நினைக்கும் அனைவருக்கும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

என்ன நடந்தது..?

என்ன நடந்தது..?

ஜனவரி மாதத்தில் பெங்களூரில் சில அறிக்கைகள் மோசடி செய்யும் தொனியில் இருந்தது, இது வருமான வரித்துறைக்கு எச்சரிக்கை விடுத்து சோதனையைத் துவங்கியது.

பெங்களூரில் போலி தணிக்கை கணக்காளர் வாயிலாக ஐபிஎம், வோடபோன், இன்போசிஸ் மற்றும் தாம்சன் ரெயூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் முறைகேடான வகையில் வரித் திரும்பம் பெற முயற்சித்துள்ளது வருமான வரித்துறையால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

 சோதனை

சோதனை

இதனைத் தொடர்ந்து போலி தணிக்கை கணக்காளருக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்ததில் பல வாடிக்கையாளர்களின் போலி கிளைம் படிவங்கள், வாட்ஸ்அப் சேட் தரவுகளை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

வீடு மற்றும் அப்பார்ட்மன்ட்

வீடு மற்றும் அப்பார்ட்மன்ட்

போலி தணிக்கை கணக்காளரிடம் வருமான வரித்துறை விசாரணை செய்ததில், வாடிக்கையாளர் வாங்கிய வீடு அல்லது பிற சொத்துக்களில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டி தங்களது வருமான வரியைத் திரும்பப் பெற்றுத் தர தான் போலியான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரி

வரி

இதன் மூலம் ஒருவர் நஷ்டம் அடைந்துள்ளதாகக் கணக்கு காட்டி செலுத்தி வரியைத் திரும்பப் பெறலாம்.

இந்த நஷ்டம் வாடிக்கையாளர் வீட்டுக் கடன் மூலம் அந்த வாட்டை வாங்கி அதில் தங்கியிருந்தாலோ அல்லது வாடகைக்கு விட்டு இருந்தாலோ இந்த வரிப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

 

1000 போலி அறிக்கைகள்

1000 போலி அறிக்கைகள்

இந்தத் தணிக்கை கணக்காளர் சுமார் 1000 போலியான வருமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் நஷ்டம் என அவர் அறிவித்துள்ள மொத்த தொகையின் மதிப்பு 18 கோடி ரூபாய்.

இதில் தொடர்புடைய பலரை வருமான வரித்துறை அவர்கள் பணியாற்றும் அலுவலகத்திற்கே சென்று விசாரணை செய்துள்ளது.

 

சிபிஐ

சிபிஐ

தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 250 பேருக்கு இத்தகைய போலியாக நஷ்ட கணக்கை காட்டி வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் பலரது வீடுகளின் மூலம் எவ்விதமான நஷ்டம் ஏற்படாத நிலையில் நஷ்டமும், வருமானம் அல்லது சிறிய அளவிலான நஷ்டத்தை அளிக்கக் கூடிய சொத்தில் அதிகத் தொகைக்கு நஷ்ட கணக்கை காட்டி வருமான வரித்துறையை ஏமாற்றியுள்ளது.

 

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்நிலையில் வருமான வரித்துறை இதுபோன்ற போலியாக மோசடி வலையில் சிக்க வேண்டாம் எனவும், மோசடி செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

பெங்களூரு பிரச்சனையின் மூலம் வீட்டுச் சொத்தின் மீது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உண்மையாக யாரேனும் அறிக்கை சமர்ப்பித்தால் வருமான வரித்துறை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது.

 

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

பொதுவாகப் பணக்காரர்கள் தான் வரியைக் குறைப்பதற்காகப் பல வழிகளில் கணக்கீட்டை மாற்றுவார்கள், ஆனால் இப்போது மாத சம்பளக்காரர்கள் கூட இத்தகைய வழியைக் கையாள துவங்கியுள்ளது.

இதற்கு ஈடாக வருமான வரித்துறையும் ரோபோ ஆடிட், சமுக வலைத்தளத்தை ஆய்வு எனத் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளது.

இனி இப்படிப்பட்ட மோசடிகள் நடத்த வருமான வரித்துறை இடம் கொடுக்காது.

 

ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது..

ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது..

<strong> உங்களின் ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி? </strong> உங்களின் ஆதார் விபரங்கள் எங்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru case: Income Tax Department Checking keen on salaried people

Bengaluru case: Income Tax Department Checking keen on salaried people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X