தையல்காரர் மகனின் விடா முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. ரூ.19 லட்சம் சம்பளம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உலகில் சிலரின் வாழ்க்கை மட்டுமே எளிதாக அனைத்தும் கிடைத்து விடுகிறது, பலர் அடிப்படைத் தேவைக்குக் கூட வசதியில்லாத நிலையில் தான் வாழ்க்கை நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒருவரின் கதை தான் இது.

கேரளா
 

கேரளா

கேரள மாநிலத்தின் கொல்லம் நகரில் தையல் தொழில் செய்யும் மகனான ஜஸ்டின் பெர்னாண்டஸ் தனது அடிப்படையைத் தேவைகள் கூட இல்லாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் அவருக்கு என்றுமே படிப்பு மீதான ஆர்வம் குறையாமல் இருந்த காரணத்தினால் ஐஐஎம் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று ஐஐஎம் நாக்பூர் கல்லூரியில் சேர்ந்தார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பொதுவாக ஐஐஎம் கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகவே இருக்கும்.

இந்நிலையில் ஐஐஎம் நாக்பூர் கல்லூரி வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட முதல் 2 மாணவர்களின் ஒருவர் ஜஸ்டின் பெர்னாண்டஸ் என்பது முக்கியமான விஷயம்.

ஏழ்மை..

ஏழ்மை..

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த ஜஸ்டின் இந்த இடத்திற்கு வருவது என்பது சாதாரண விஷயமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும். தற்போது இவருக்குக் கிடைத்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் இவரின் குடும்பத்தையே மாற்றப்போகிறது.

வெற்றி..

வெற்றி..

ஐஐஎம் நாக்பூர் கல்லூரி வளாகத் தேர்வுக்கு வந்த ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த வேல்யூ லேப்ஸ் நிறுவனம் ஜஸ்டின் பெர்னாண்டஸ்-க்கு இந்நிறுவனத்தின் இணை தலைவர் வேலையைக் கொடுத்துள்ளது (associate director).

சம்பளம்
 

சம்பளம்

இவருக்கு வருடம் 19 லட்சம் ரூபாய் அளவிலான சம்பளத்தை அளித்த வேல்யூ லேப்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்தி ஐஐஎம் சம்பள தரத்திற்குச் சற்று குறைவாகத் தெரிந்தாலும், ஐஐஎம் நாக்பூர் கல்லூரியில் அதிகச் சம்பளத்தைப் பெற்றது ஜஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

50,000 ரூபாய் வருமானம்

50,000 ரூபாய் வருமானம்

தாத்தா தையல் தொழில் செய்து வந்ததால், தந்தையும் இதே தொழிலுக்குத் தள்ளப்பட்டார். ரெடிமேட் ஆடைகள் வந்த பின்பு இந்தத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகளவில் குறைந்தது. இதனால் தந்தைக்குப் போதி அளவிலான வருமானம் இல்லாமல் தவித்தார்.

அப்போதை காலகட்டத்தில் எங்கள் குடும்பத்திற்கான உணவு தேவையைப் பூர்த்திச் செய்ததே ரேஷன் பொருட்கள் தான், மேலும் குடும்பச் செலவுகளை அரசு கொடுக்கும் உதவித் தொகை மூலம் சரி செய்வோம் என ஜஸ்டின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

படிப்பு

படிப்பு

ஜஸ்டின்-இன் அத்தை தான் எங்களை 12 வகுப்பு வரை படிக்க வைத்தார், கல்வி மட்டுமே எங்களது குடும்பத்தைக் காப்பாற்றும் எனத் தொடர்ந்து கூறினார். தந்தையின் இந்த அத்தைகளும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

பி.டெக்

பி.டெக்

பள்ளி படிப்புக்குப் பின் திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார். இக்காலகட்டத்தில் ஜஸ்டினுக்குக் கிடைத்த கல்வி உதவித்தொகை மூலம் காலத்தைக் கடத்தினார்.

ஐஐஎம்- நாக்பூர்

ஐஐஎம்- நாக்பூர்

மேலும் ஐஐஎம் நாக்பூர் கல்லூரியில் சேரும் முன்பு 2 வருடம் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார் ஜஸ்டின்.

ஸ்போர்ட்ஸ் மேனேஜர்

ஸ்போர்ட்ஸ் மேனேஜர்

ஐஐஎம் கோழிக்கோடு கல்லூரியில் சேரவே நான் முயற்சித்தேன் முதல் முறை ஐஐஎம் தேர்வில் செய் முடியாத காரணத்தால் 2வது முறை தேர்வில் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் எனத் திட்டமிட்டு ஐஐஎம் நாக்பூர் கல்லூரியில் சேர்ந்ததாக ஜஸ்டின் கூறினார்.

புதிய நிறுவனத்தில் புதிய வாழ்க்கையைத் துவங்க இருக்கும் ஜஸ்டினுக்கு, ஸ்போர்ட்ஸ் மேனேஜர் ஆக வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை உள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala tailor's son bags highest pay at IIM Nagpur

Kerala tailor's son bags highest pay at IIM Nagpur
Story first published: Friday, April 20, 2018, 14:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X