ஒரு நாடு ஒரே வரி.. பாண்டிச்சேரி பெர்மிட்டில் வாகனம் வாங்குபவர்களுக்கு செக்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் போக்குவரத்து சார்ந்த அமைச்சர்கள் குழு, பேருந்துகள் , டாக்சிகள் ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்குமான சீரான சாலைவாரி மற்றும் தேசிய பெர்மிட்டுகளுக்குப் பரிந்துரை செய்தது.

 

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் உள்ளூரில் உள்ள வடகை வாகனங்களால் நாடு முழுவதும் தங்களது சேவையினை வழங்க முடியும் என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரியை கட்ட தேவையில்லை என்றும், மின்சார வாகனங்களை அதிகளவில் ஊக்குவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாண்டிச்சேரி பர்மிட் வாங்குபவர்களுக்கு செக்!

பாண்டிச்சேரி பர்மிட் வாங்குபவர்களுக்கு செக்!

குவஹாத்தியில் வியாழக்கிழமை ( 19.04.2018) நடைபெற்ற இந்தக் குழுவின் கூட்டத்தில், ஒரே சீரான வரி அமைப்பு இருந்தால் வாகனங்கள் குறைந்த வரி விதிக்கும் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, இதர மாநிலங்களில் இயக்கப்படும் நிலை கட்டுப்படுத்தப்படும் என்று கருத்து தெரிவித்தது. மேலும், இதனால் வாகனங்களை மாற்றுவதற்கான உண்மையான நிகழ்வுகளுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கும்.

குழுவில் பங்கேற்றவர்கள்

குழுவில் பங்கேற்றவர்கள்

ராஜஸ்தான் மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு யூனுஸ்கானைத் தலைவராகவும் மாநிலப் போக்குவரத்து அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ள இந்தக் குழுவில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்வகையிலான முடிவுகள் ஏற்கப்படுகின்றன. ஒரு நாடு - ஒரு வரி, ஒரு நாடு - ஒரு பெர்மிட் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

பொது துறை போக்குவரத்து
 

பொது துறை போக்குவரத்து

தேசியப் பேருந்து, டாக்சி பெர்மிட்டுகளைச் சரக்கு போக்குவரத்து பெர்மிட்டுகளைப் போல அமைத்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. நாட்டில் பொதுத்துறைப் போக்குவரத்து சுமார் இரண்டு சதவீத அளவிலும், தனியார்ப் போக்குவரத்து இருபது சதவீத அளவிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

மின்சார வாகனங்களுக்கு தாராளமையம்

மின்சார வாகனங்களுக்கு தாராளமையம்

வாகனங்களுக்கு மாற்று எரிபொருளை மேம்படுத்துவது குறித்த விஷயத்தில் மின்சார வாகனங்களுக்கு பெர்மிட் வழங்கும் நடைமுறையில் தாராளமயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

எப்போது முதல் இந்த புதிய வரி சட்டம்?

எப்போது முதல் இந்த புதிய வரி சட்டம்?

மத்திய அரசு இந்த புதிய வரி சட்டம் குறித்து விவாதித்து வரும் நிலையில் எப்போது முதல் அமலுக்கு வரும், தேசிய பர்மிட்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் செய்யப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

டோல்கேட்

டோல்கேட்

இனி எந்த டோல்கேட்டிலும் வாகனங்களை நிறுத்த தேவையில்லை.. புதிய சேவை வருகிறது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ONE NATION ONE TAX AND ONE NATION ONE PERMIT. Check mate for purchasing vehicle in Pondicherry

ONE NATION ONE TAX AND ONE NATION ONE PERMIT. Check mate for purchasing vehicle in Pondicherry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X