தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்!

 

தேசிய ஓய்வூதிய திட்டம் செயல்பாடுகளில் உள்ள சிக்கலினை குறைத்துச் சேவையினை மெறுகேத்த பிஎப்ஆர்டிஏ பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானவை எம்பிஎஸ் திட்ட கட்டமைப்பினை மேம்படுத்த, கணக்குத் திறப்பது , பணத்தினைத் திரும்பப் பெறுவது போன்றவற்றை எளிமை படுத்துவதாகும்.

மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள கருப்புப் பணத்தை மாற்றுவதைத் தடுக்கும் சட்ட நெறிமுறைகள், வெளிநாட்டுக் கணக்கு, வரி, முறை பின்பற்றுவதற்கான சட்டம், சொத்து மறுசீரமைப்பு மற்றும் பங்குகள் மீதான வட்டிக் கண்காணிப்பு மத்திய பதிவகம் ஆகியவற்றுக்குக் கீழ்படிதல், புதிய சந்தாதார்களுக்கும் தற்போதுள்ள சந்தாதார்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. பொதுச் சந்தாதார் பதிவுப் படிவத்தில் இது புதிய சந்தாதார்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டு விவரங்கள் உரியக் களங்களில் நிரப்பப்பட வேண்டும்.

என்பிஎஸ் திட்டம் கீழ் தனிநபர்கள் சேமிக்கும் பணம் சந்தாதார்களின் பென்ஷன் நிதிக்காக ஒதுக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் ஊழியர்களுக்குக் கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank account, mobile number compulsory for National Pension Scheme subscribers

Bank account, mobile number compulsory for National Pension Scheme subscribers
Story first published: Sunday, April 22, 2018, 14:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?