முகேஷ் அம்பானியின் மருமகளுக்காக சென்னையில் தயாராகி வரும் காஸ்ட்லி புடவை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வர் ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரி ரஸ்ஸல் மெஹ்தா மகள் ஸ்லோக மேத்தா இருவருக்கும் சென்ற மாதம் கோவாவில் திருமணம் செய்யப் பேசி முடிக்கப்பட்டது.

தற்போது இவர்கள் திருமணத்திற்கான காஸ்ட்லி புடைவை சென்னையில் தயாரிக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது ஆனால் அதிகாரப்பூர்வமாகத் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

புடவை

சென்னையில் தயாரிக்கப்பட்டு வரும் புடவையானது 36 நெசவாளர்கள் உதவியுடன் சுத்த தங்கம் மற்றும் நவரத்னா தங்க எம்பிராய்டு செய்யப்பட்டுத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

விலை மற்றும் எடை

காஞ்சிபுர புடவையான இது 8 கிலோ எடை இருக்கும் என்றும், ஜாக்கெட்டில் சுத்தமான வைரங்கள் பதியப்பட்டு இருக்கும் என்றும் இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

யார் இந்த ஸ்லோக மேத்தா மேஹ்தா?

வைர வியாபாரி ரஸ்ஸல் மெஹ்தா மகள் ஸ்லோக மேத்தா, ஆகாஷ் அம்பானியுடன் மும்பை திருபாய் அம்பானி இண்டர்னேஷன்ல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். தற்போது தனது பெற்றோர்களின் ரோசி ப்ளூ டைமென்ட்ஸ் நிறுவனத்தின் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடாமல் இந்நிறுவனத்தின் அறக்கட்டளை நிறுவனமான ரோசி ப்ளூ பவுண்டேசன் அமைப்பின் தலைவராக ஜூன் 2014 முதல் செயல்பட்டு வருகிறார். இதோடு கனெக்ட்பார் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் உள்ளார்.

நீரவ் மோடி

ஸ்லோக மேத்தாவின் தந்தை ரஸ்ஸல் மேஹ்தா மற்றும் அவரது தாய் என இரண்டு குடும்பத்திற்கும் நெருங்கிய உரவினர் நீரவ் மோடி ஆவார்.

ரஸ்ஸல் மேஹ்தா

இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபார நிறுவனங்களில் ரோஸ் ப்ளூ நிறுவனமும் டாப் 10 பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தான் ரஸ்ஸல் மேத்தா.

மோசடிகள்

ரோஸ் ப்ளூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரசெல் மேத்தா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திலிப் மேத்தா (ரசெல்-இன் மாமா) ஆகியோர் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் மற்றும் பேரடைஸ் பேப்பர் மோசடி வெளியீட்டில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Costliest saree for Mukesh Ambani's daughter in law getting ready in Chennai

Costliest saree for Mukesh Ambani's daughter in law getting ready in Chennai
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns