கூகுளின் பங்குகளால் ரூ.2,524 கோடிக்கு அதிபதி ஆகும் சுந்தர் பிச்சை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தினைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற போது இவருக்குப் பல கோடி மதிப்பிலான 3,53,939 பங்குகளை இவருக்கு உக்க தொகையாக அளித்தது.

 

கூகுள் நிறுவனத்தின் விதிகளின் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பங்குகளை மூன்று ஆண்டுக்கு விற்க முடியாது. நாளை ஏப்ரல் 25-ம் தேதியுடன் இவருக்கு 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட பங்குகளினை விற்க இருந்த 3 ஆண்டுத் தடை நிறைவடைகிறது. எனவே அவரால் அந்தப் பங்குகளை விற்க முடியும்.

பங்குகள்

பங்குகள்

சுந்தர் பிச்சைக்குப் பங்குகளை அளித்த பிறகு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனப் பங்குகள் 5 வருடத்தில் 90 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. அதன் பிறகு 2015 மற்றும் 2016-ம் ஆண்டும் இவருக்குப் பங்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2017-ம் ஆண்டுக்கு எவ்வளவு கூகுள் நிறுவனம் அளிக்க உள்ளது என்ற விவரங்களை அளிக்கவில்லை.

2,524 கோடி ரூபாய்

2,524 கோடி ரூபாய்

மதுரையில் பிறந்த சுந்தர்பிச்சை 2015-ம் ஆண்டு ஆல்பாபெட்டின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட 3,53,939 பங்குகளை இன்றைய தேதியில் அவர் விற்க முடிவெடுத்தால் இந்திய மதிப்பில் சுந்தர் பிச்சைக்கு 2,524 கோடி ரூபாய் கிடைக்கும்.

பேஸ்புக் & டெஸ்லா
 

பேஸ்புக் & டெஸ்லா

2012-ம் ஆண்டுப் பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இதே போன்று பங்குகள் மூலமாக 227 கோடி ரூபாய்க் கிடைத்தது. இதே போன்று டெஸ்லா கார் நிறுவன தலைவரான எலன் மஸ்க்கிற்கும் 2016-ம் ஆண்டுப் பங்குகள் மூலமாக 134 கோடி ரூபாய்க் கிடைத்தது.

முதன் முறை

முதன் முறை

கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு அளித்துள்ள பங்குகள் மூலமான வருவாய் ஆனது இது வரை எந்த ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் பெறாத ஒரு மிகப் பெரிய தொகை என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கூகுளில் உள்ள அதிகாரம்

கூகுளில் உள்ள அதிகாரம்

சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு உள்ள அதிகாரிகள் குறித்த ஆல்பாபெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இவருக்குக் கூகுள் நிறுவனத்தில் உள்ள மிகப் பெரிய அதிகாரங்கள் குறித்த தகவல்களை எல்லாம் வெளியிட்டது. அதிலும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள லாரி பேஜிக்கு இல்லாத பல முக்கிய அதிகாரங்கள் கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google CEO Sundar Pichai going to get Rs 2,524 crore award this week: Report

Google CEO Sundar Pichai going to get Rs 2,524 crore award this week: Report
Story first published: Tuesday, April 24, 2018, 15:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X