புதுச்சேரியில் ஏப்ரல் 25 முதல் இ-வே பில் முறை அறிமுகம்.. தமிழ்நாட்டில் எப்போது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுச்சேரியில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

 

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவின்படி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறை 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

எப்போது முதல் இ-வே பில் முறை அமலுக்கு வந்தது?

எப்போது முதல் இ-வே பில் முறை அமலுக்கு வந்தது?

ஏப்ரல் 20, 2018-ன் நிலவரப்படி மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வளவு இ-வே பில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது?

எவ்வளவு இ-வே பில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது?

ஏப்ரல் 22, 2018 வரை ஒரு கோடியே எண்பத்து நான்கு லட்சத்திற்கும் மேலான மின்னணு வே-பில்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

புதியதாக எந்த மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்கு வந்துள்ளது?
 

புதியதாக எந்த மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்கு வந்துள்ளது?

ஏப்ரல் 25, 2018 ஆம் தேதி முதல் புதுச்சேரி, அருணாசலப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் நடைமுறைக்கு வருகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

ஆனால் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மிகப் பெரிய மாநிலங்களில் எல்லாம் இ-வே பில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இன்னும் நேரம் எடுக்கும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

ஜிஎஸ்டி இ-வே பில் என்றால் என்ன?

ஜிஎஸ்டி இ-வே பில் என்றால் என்ன?

ஜிஎஸ்டி இ-வே பில் என்றால் என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Union territory Puducherry & Four more states implemented eway bill from April 25. When in Tamilnadu?

Union territory Puducherry & Four more states implemented eway bill from April 25. When in Tamilnadu?
Story first published: Tuesday, April 24, 2018, 11:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X